சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

அமானுஷ்யம்

அமானுஷ்யம்
பிரீமியம் ஸ்டோரி
News
அமானுஷ்யம்

செல்லம்

அமானுஷ்யம்

மறைந்த நகரம் அட்லான்டிஸ்

அமானுஷ்யம்


பாதி உடல் மீனாகவும் பாதி உடல் மனிதப் பெண்ணாகவும் இருக்கும் உயிரினம் கடற்கன்னி என்ற ஒரு கதை உண்டு. இதிலேயே ஆண் இனத்துக்குக் கடல்மனிதன் என்று பெயர். இப்படிப்பட்ட கடற்கன்னிகளும் கடல்மனிதர்களும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் நகரம் அட்லான்டிஸ். இது, மிகவும் நாகரீகம் அடைந்த நகரமாகச் சகல வசதிகளோடும் இருந்ததாகச் சொல்கிறார்கள். பிற்பாடு இந்த நகரம் மொத்தமும் கடலுக்குள் மூழ்கிவிட்டதாம். ஆனால், இவை எல்லாமே கட்டுக்கதைகள் என்று ஒரு பிரிவு ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகிறார்கள். உண்மையில், தத்துவஞானி ப்ளேட்டோ இந்த அட்லான்டிஸ் நகரத்தைப் பற்றித் தன் உரைகளில் குறிப்பிட்டிருக்கிறார். அட்லான்டிஸ் நகர் இருந்ததையும் கடற்கன்னி, கடல்மனிதன் ஆகியோர் இருந்ததையும் நம்புபவர்கள், ப்ளேட்டோவை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அதுவும்போக, கடலுக்குள் அட்லான்டிஸ் மனிதர்கள் உபயோகித்ததாகச் சொல்லப்படும் பொருள்கள் கிடைப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அமானுஷ்யம்

பூமி ஓவியங்கள்

யாரும் வரையாமல் பூமியின் மேல் இயற்கையாகவே ஓவிய வடிவங்கள் தோன்றும். ஆகாயத்தில் இருந்து பார்க்கும்போது இவை தெரியும். இவற்றை Geoglyphs என்பார்கள். பெரு நாட்டின் கடலோரப் பகுதியில் காணப்படுவது நாஸ்கா நாகரிகம். கி.மு. 100-ம் ஆண்டு முதல் கி.பி. 800-ம் ஆண்டு வரை இருந்த இந்த நாகரிக காலத்தில், அந்தப் பகுதியின் பூமிப் பரப்பில் ஏற்பட்ட ஓவிய வடிவங்கள் பிரமிப்பு ஊட்டக்கூடியனவாக இருக்கின்றன. இந்த ஓவியங்களில் சிலந்திகள், குரங்குகள், சுறா மீன்கள், பூக்கள் போன்றவை தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றன. ஆனால், விமானம், ஹெலிகாப்டர் போன்றவை இல்லாத அந்தக் காலத்தில், நாஸ்கா பகுதி மக்களே இதைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

அமானுஷ்யம்

ஔரங் மீடான்

கடற் பயண அபாயங்களிலும் விபத்துகளிலும் இன்றைக்கும் மர்மமான ஒன்றாக நிலைத்திருப்பது, எஸ்எஸ் ஔரங் மீடான் என்கிற விபத்து. மலேசியக் கப்பல் ஒன்று கடலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தது. திடீரென அந்தக் கப்பலின் கேப்டனிடமிருந்து, ‘அபாயம்… காப்பாற்றுங்கள்’ என்று ஒரு செய்தி கரைக்கு வந்தது. உடனடியாகப் போய்ப் பார்த்தால், அந்தக் கப்பல் அப்படியே பாதுகாப்பாக இருக்க, உள்ளே இருந்த மனிதர்கள் ஒருவர் பாக்கி இல்லாமல் இறந்துகிடந்தார்கள். இது நடந்தது 1947-ல். இத்தனை பேரின் மரணத்துக்குக் காரணம் ஆவிகளாக இருக்கலாம், ஆபத்தை விளைவிக்கும் ரசாயனம் ஏதேனும் வெளிப்பட்டிருக்கலாம், வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்களின் தாக்குதலாக இருக்கலாம் என்று பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.

அமானுஷ்யம்

பெர்முடா முக்கோணம்

அது ஒரு கடல் பகுதி. மியாமி, பெர்முடா, போர்ட்டோ ரிக்கொ ஆகிய நிலப்பகுதிகள் சந்திக்கும் இடத்தில் உள்ளது. இதன் பெயர் பெர்முடா முக்கோணம். இந்தப் பகுதி வழியாகப் பறக்கும் விமானங்களை ஓட்டும் விமானிகள் அனைவரும் ஒரு பயங்கரத்தைச் சொல்கிறார்கள். சீராகப் பறந்துகொண்டிருக்கும் விமானங்கள், இந்த பெர்முடாப் பகுதியைக் கடக்கும்போது கிறுகிறு என்று சுழல ஆரம்பித்துவிடுகின்றனவாம். அதுவும் போக ஏராளமான கப்பல்கள் இந்தப் பகுதியில் மூழ்கிக் காணாமல் போயிருக்கின்றன.  ஆனால், இப்போது வரைக்கும் கப்பல்கள் காணாமற்போகவும் விமானங்கள் நிலை தடுமாறவும் என்ன காரணம் என்று நிரூபிக்கப்படவில்லை.

அமானுஷ்யம்

பாறைக் கட்டடம்

அமானுஷ்யம்


இங்கிலாந்துக்குப் பக்கத்தில் இருக்கும் வில்ட்ஷைர் பகுதியில் காணப்படுகிறது, இந்தப் பாறைக் கட்டுமானம்.  பெயர், ஸ்டோன் ஹெங்கே. இதைக் கட்டுமானம் என்பதுகூடச் சரியல்ல. 13 அடி உயரத்தில் ஆறு முதல் 11 அடி அகலத்திலான பாறைகளால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை 25 டன்கள். இதைக் கட்டாமல், ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைத்திருக்கிறார்கள். இது எப்படி உருவாக்கப்பட்டது என்பதோடு, இதை ஏன் உருவாக்கினார்கள் என்பதும் மர்மமாகவே உள்ளது.

அமானுஷ்யம்

தெரியுமா?

* இந்தியாவில், சுனாமி எச்சரிக்கை மையம் உள்ள இடம், ஹைதராபாத்.