சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டெக் பிட்ஸ்

ர.சீனிவாசன்

டெக் பிட்ஸ்

ஒரு ஆப்

பீக் எ ஸூ

உங்கள் வீட்டில் குறுநடை போடும் தம்பி, தங்கை பாப்பாக்கள் இருக்கிறார்களா? அவர்களின் அறிவாற்றலையும் நினைவாற்றலையும் அதிகரிக்கச் செய்யும் வண்ணம், இந்த கேம் ஆப் செயல்படுகிறது. வரிசையாக விலங்குகள், விதவிதமான அனிமேஷன்களுடன் தோன்றுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறும்பு செய்கிறது. கேம்  ஆடுபவருக்கு வரிசையாக க்ளூக்கள் அடுக்கப்படும். அவர், அதை வைத்து அதன் தொடர்புடைய விலங்கை சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். சரியான விடையைக் கண்டறிந்தவுடன், இசையுடன் தோன்றும் கண்கவர் அனிமேஷன் நிச்சயம் அவரை குதூகலத்தில் ஆழ்த்தும்.

டெக் பிட்ஸ்

ஒரு படம்

கோகோ படம் சொல்லும் அறிவுரை

டெக் பிட்ஸ்


மிகல் என்னும் சிறுவனுக்கு இசையில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசை. ஆனால், அவன், குடும்பத்தில் எல்லோரும் இசைக்கு எதிரி. குடும்பத்தை விட்டுவிட்டு இசையில் சாதிக்கச் சென்ற மிகலின் கொள்ளுத் தாத்தாவை குடும்பமே வெறுக்கிறது. இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து சாமி கும்பிடும் அந்தக் குடும்பம், அவரது புகைப்படத்தை மட்டும் வைக்க மறுக்கிறது. சூழ்நிலையால், மிகல் இறந்தவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. தன் தாத்தாவைக் கண்டுபிடித்தானா? தன் குடும்பம் அவரை ஏற்றுக்கொண்டதா என்பதை எமோஷனலாகச் சொல்லியிருக்கிறது இந்தப் படம்.

இறந்துபோன மூதாதையர்கள்தான் எலும்புக்கூடுகளாக வருவதால், படம் முழுக்க அந்தக் காட்சிகள் எல்லாம் சிரிப்பலைகள்தான். எலும்புக்கூடுகள் வைத்து அனிமேஷனில் காமெடி செய்திருக்கிறது பிக்ஸார் டீம். படத்தின் இறுதிக்காட்சியில், நம் தாத்தா பாட்டியை நினைவுபடுத்தி, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது இந்த கோகோ.

- கார்த்தி

டெக் பிட்ஸ்

ஒரு புக்

சூப்பர் சன்ஸ்

லெக்ஸ்லூதரின் ஆய்வகத்தில் புதிரான திருட்டுகள் நடக்க, அதைக் கண்டுபிடிக்க பேட்மேனின் மகன் டேமியனும் சூப்பர்மேனின் மகன் ஜோனதனும் வருகிறார்கள். இந்த இருவருக்குமிடையே நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற ஈகோ மோதல் ஒருபுறம் நடக்கிறது.

சாதாரணமாக இருந்த ஒரு சிறுவன், சூப்பர் பவர் கொண்ட கிட் அமேசோவாக மாறி இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரிடமும் இருக்கும் சக்திகயைவிட, அதிகமான பவர்களைக் கொண்ட கிட் அமேசோவை எதிர்கொள்வதைவிட ஆபத்தான ஒரு விஷயம் இருவருக்கும் காத்திருக்கிறது  அது ஹோம் வொர்க்.

- கிங் விஸ்வா

டெக் பிட்ஸ்

ஒரு கேம்

லெகோ வேர்ட்ஸ்

லெகோ விளையாட்டுகள் அனைவரும் அறிந்ததே. எளிய வீடுகட்டும் விளையாட்டாக உலாவந்த இது, தொடர் வெற்றியின்மூலம் படங்கள், வீடியோ கேம்ஸ் என வெவ்வேறு தளங்களுக்குப் பயணிக்கத்தொடங்கிவிட்டது.பிளே ஸ்டேஷன் 4 தளத்தில் லெகோ நிறுவனத்தின் புது வரவு ‘லெகோ வேர்ல்ட்’ என்ற கேம். இந்த கேமை விளையாடுபவர், லெகோ கடவுளாக இருந்துகொண்டு லெகோ கேலக்ஸி முழுவதும் சுற்றி வரலாம். உயர்ந்த கட்டடங்கள், நடமாடும் மனிதர்கள், பறக்கும் பறவைகள், டிராகன்கள் என வேறு வேறு உலகங்களில், விதவிதமாகக் கதாபாத்திரங்களுக்கு உயிர்க்கொடுக்கலாம்.

டெக் பிட்ஸ்

ஒரு கேட்ஜெட்

சுட்டி டெலஸ்கோப்

எந்த வயதினரும் வானின் ரகசியங்களை ஆராயும்போது, அதிலுள்ள ஆச்சர்யங்களை ரசித்து குழந்தைகளாக மாறிவிடுவார்கள். குழந்தைகளுக்கு என பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட டெலஸ்கோப்கள் நிறைய இருக்கின்றன. Kihika நிறுவனத்தின் வானியல் தொலைநோக்கிகள் இவற்றுள் ஒருவகை. அலுமினியம் ட்ரைபாட் மற்றும் இரண்டு விதமான அருகு வில்லைகள் (eyepieces) உடன்வரும் இது, 90x ஜூம் ஆப்ஷனுடன் வருகிறது.நிலம் மற்றும் வானத்தில், தொலைவில் நடக்கும் நிகழ்வுகளை இதைக் கொண்டு துல்லியமாக HD தரத்தில் காண முடியும். சுட்டீஸுக்கு மிகவும் சிறந்த பரிசாக இது அமையும்!