சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

தமிழகம்

தமிழகம்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழகம்

ச.ஜெ.ரவி

தமிழகம்

யுனெஸ்கோ பட்டியலில் சென்னை!

ஐ.நா-வின் கல்வி விஞ்ஞானக் கலாசார அமைப்பான யுனெஸ்கோ, இந்தியாவில் படைப்பாக்கம் மிக்க நகரங்களின் பட்டியலில் சென்னையைச் சேர்த்துள்ளது. பாரம்பரியம் மிக்க இசை, கலாசாரம் காரணமாக யுனெஸ்கோவின் படைப்பாக்கம் மிக்க நகரங்களின் பட்டியலில் இணைந்துள்ளது சென்னை.

தமிழகம்

மறைந்தது மாலா சிங்கம்!

சென்னை, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வண்டலூரில் ஈன்ற குட்டி இறந்த சில தினங்களிலேயே உடல்நலக் குறைவால் தாய் சிங்கம் மாலா உயிரிழந்தது. இந்தப் பூங்காவில் மொத்தம் 15 சிங்கங்கள் உள்ளன. மாலாவுக்கு வயது ஆறு. கடந்த 13-ம் தேதி காலை 9.30 மணிக்குப் பூங்கா மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்கள் கண்காணிப்பில் பிரசவம் பார்க்கப்பட்டது. ஆண் சிங்கக் குட்டி ஒன்று இறந்த நிலையில் பிறந்தது. மேலும், தாய் சிங்கம் மாலாவுக்கும் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தாய் சிங்கம் மாலா பரிதாபமாக உயிரிழந்தது.

தமிழகம்

வருகிறது நீரில் செல்லும் ஆம்புலன்ஸ்!

மழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க, தண்ணீரில் செல்லும் ஆம்புலன்ஸ் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் மழைவெள்ள பாதிப்பின்போது, வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை உடனடியாக மீட்கத் தண்ணீரில் செல்லும் ஆம்புலன்ஸைச் சென்னை ஐ.ஐ.டி வடிவமைத்து வருவதாகவும் இன்னும் சில மாதங்களில் அது அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழகம்

மான்கள் இறந்தால் அபராதம்!

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மான்கள், கலைமான்கள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இங்கு குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை மான்கள் உட்கொள்வதாலும் வளாகத்துக்குள் நுழையும் நாய்கள் மான்களைக் கடிப்பதாலும் கடந்த சில ஆண்டுகளில் பல மான்கள் இறந்திருக்கின்றன. இந்த மான்கள் உயிரிழப்பு குறித்துக் கவலை தெரிவித்துள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், ஐ.ஐ.டி வளாகத்தில் குப்பைகள் தேங்காமலும் நாய்கள் நுழையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இனிமேல் ஐ.ஐ.டி வளாகத்தில் மான்கள் இறந்தால், ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம்

புதுப்பொலிவுடன் திருவள்ளுவர்!

கன்னியாகுமரி கடலில், 133 அடி உயரத்தில் மிகப்பிரமாண்டமாய் காட்சியளிக்கும் திருவள்ளுவர் சிலை, உப்புக் காற்றால் சேதம் அடைவதைத் தடுக்க ரசாயனக் கலவை பூசி, பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய பணிகள், ஏழு மாதங்களுக்குப் பின்னர் தற்போது நிறைவுற்றுள்ளது. திருவள்ளுவர் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறார். இதையடுத்து கூடிய விரைவில், மீண்டும் பயணிகள் திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழகம்

தெரியுமா?

* ‘காளிதாஸ்’ படம்தான் தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.