மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இன்னும் சில சொற்கள் - அ.மங்கை

இன்னும் சில சொற்கள் - அ.மங்கை
பிரீமியம் ஸ்டோரி
News
இன்னும் சில சொற்கள் - அ.மங்கை

ஓவியம் : பிரேம் டாவின்ஸி

``முதல் மேடை?’’

``நாடக வடிவம் குறித்த புரிதலுடன் செய்த முதல் நாடகம். சென்னை கலைக் குழுவின் `நாங்கள் வருகிறோம்’.”

``பிடித்த நாடக ஆசிரியர்?’’

``ப்ரெக்ட், லோர்கா.’’

``நம்பிக்கை அளிக்கும் கலைஞர்?’’

``மாயா ராவ். டெல்லியில் வசிக்கும் அரசியல் தெளிவுகொண்ட பெண்ணியக் கலைஞர்.”

இன்னும் சில சொற்கள் - அ.மங்கை



``ஆளுமையால் வியக்கவைத்தவர்?’’

``வைத்துக்கொண்டிருப்பவர்! பெண்ணிய அறிஞரும் செயல்பாட்டாளருமான பேராசிரியர் உமா சக்கரவர்த்தி. பௌத்தவியல் ஆய்வாளர்.”

``அடிக்கடி மனதில் வரும் பாடல்?’’

``நான் பேச நினைப்பதெல்லாம்...”

``பிரளயன்?’’

``அரங்கத் துறையில் அரிதான சக பயணி!”

இன்னும் சில சொற்கள் - அ.மங்கை

``நம்பிக்கை தரும் இளம் நாடகக் கலைஞர்?’’

``அஸ்வினி காசி - கண்ணப்பத் தம்பிரானின் பேத்தி, தோழர் காசியின் மகள். கராத்தே கலைஞர் சம்பத்தின் இணையர்.”

``வீ.அரசு?’’

``என்னுடன் எவ்வளவு மல்லுக்கட்டினாலும் என்மீது உறுதியான நம்பிக்கைகொண்டவர், என் முதல் விமர்சகர், என் மனசாட்சி, தமிழ் ஆய்வுலகில் புதிய தடங்களைப் பதித்த ஆய்வாளர்.”

``பிடித்த சினிமா நடிகர்கள்?’’

``மறைந்த ஷோபா, சில்க் ஸ்மிதா.”

``திராவிட இயக்கம்?’’

``பெரியார் கண்ட கனவு...
கலைந்த கனவு.”

``விரும்பும் உடை?’’

``சேலை. வேலையைப் பொறுத்து விருப்பம் மாறும். அலங்காரத்தைவிட பயன்பாடு முக்கியம்.”

``பிடித்த தத்துவ ஆசிரியர்?’’

``மார்க்ஸியப் பெண்ணியவாதி அலெக்சாண்ட்ரா கொலாந்தாய்.”

``மனதில் நிற்கும் அரசியல் முழக்கம்?’’

``இன்குலாப் ஜிந்தாபாத்”

``யாரின் பிரிவை உணர்கிறீர்கள்?’’

``கவிஞர் இன்குலாப் இல்லாத கொடுமையை.”

``பெண் எழுத்துகளில் பிடித்தமானது?’’

``அம்பை, தமிழ்ச்செல்வி, ஆழியாள்... இன்னும் பலர் - தமிழில்.”

``நீள் கூந்தல் ஆசை?’’

``வைக்கவும் முடியாமல்,
காக்கவும் முடியாமல்...”

``சங்ககாலப் பெண் கவிஞர்களில் யாரைப் பிடிக்கும்?’’

``ஔவை, வெள்ளிவீதி.”

``கோபம் என்பது?’’

``பழக வேண்டிய அறச் சீற்றம். மூக்கு நுனியில் இல்லை, அடிவயிற்றில் கனலும் கங்கு.”

``பெண்ணிய அரங்கம்?’’

``பெண் நோக்கில் உலகைக் காணவைக்கும் ஒரு வழிமுறை. மாற்றுப் பெண் பிம்பங்களை உருவாக்கும் பட்டறை. திருநங்கையரோடு இணைந்து நாடகங்களை உருவாக்கியது பெரும் அனுபவம்.”

``உங்கள் மொழிபெயர்ப்பில் பிடித்தவை?’’

`` `தேரிகாதை - பௌத்த பிக்குணிகளின் பாடல்கள்’,

`என் நினைவில் சே.’ ”

``இப்போது?’’

``டிசம்பர் 2-ல் ஔவையை மீண்டும் மேடையேற்றும் மும்முரம்.”

தொகுப்பு: வரவணை செந்தில்