Published:Updated:

பாகிஸ்தானில் வாழ்ந்த மன்டோ இந்தியாவுக்கு எப்படிப் பொருந்திப் போகிறார்? #Manto

பாகிஸ்தானில் வாழ்ந்த மன்டோ இந்தியாவுக்கு எப்படிப் பொருந்திப் போகிறார்? #Manto

பாகிஸ்தானில் வாழ்ந்த மன்டோ இந்தியாவுக்கு எப்படிப் பொருந்திப் போகிறார்? #Manto

Published:Updated:

பாகிஸ்தானில் வாழ்ந்த மன்டோ இந்தியாவுக்கு எப்படிப் பொருந்திப் போகிறார்? #Manto

பாகிஸ்தானில் வாழ்ந்த மன்டோ இந்தியாவுக்கு எப்படிப் பொருந்திப் போகிறார்? #Manto

பாகிஸ்தானில் வாழ்ந்த மன்டோ இந்தியாவுக்கு எப்படிப் பொருந்திப் போகிறார்? #Manto

ஒரு எழுத்தாளன் தனது உணர்வின் மீது கேள்வி எழுப்பப்படும்போதுதான் பேனாவைக் கையில் எடுக்கிறான் . மற்றபடி அவன் அநாவசியமாக எழுதுவதில்லை.
- சாதத் ஹசன் மன்டோ

னது உணர்வு  கேள்வி எழுப்பப்பட்டபோதெல்லாம் பென்சிலை எடுத்து எழுதிய எழுத்தாளன் சாதத் ஹசன் மன்டோ. அண்மையில் நவாஸுதின் சித்திக் நடிப்பிலும் நந்திதா தாஸ் எழுத்திலும் இயக்கத்திலும் வெளியாகி இருக்கும் ‘மன்டோ’ திரைப்படம், அவரது வாழ்க்கையை திரைமொழியில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. பிரிட்டிஷ் காலனிய ஆதிக்க இந்தியாவில் பிறந்து பிரிந்துச் சென்ற பாகிஸ்தானில் வாழ்ந்த ஓர் எழுத்தாளரைப் பற்றி இந்திய தேசத்துக்குச் சொல்ல என்ன இருக்கிறது? தபோல்கர், கௌரி, கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, சையது சுஜாத் புஹாரி என கருத்துச் சுதந்திரம் கொல்லப்படும் தேசத்தில் மன்டோவைப் பற்றிப் பேசுவதும் மன்டோவின் வரலாற்றைப் பதிவு செய்வதும்தான் பொருத்தமாக இருக்கிறது.  

’என்னுடைய கதைகளை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நாம் சகிப்புத்தன்மையற்ற காலத்தில் வாழ்கிறோம்’ என்கிறார் மன்டோ. ’உண்மையை ஒப்புக்கொள்ள மறுப்பதாலும் கண்ணாடியில் நான் காண்பிக்கும் உங்களது பிம்பத்தைப் பார்க்க மறுப்பதாலும் நாம் எப்படி மேம்பட்ட தேசமாக முடியும்... பொய் எப்படி மெய்யாக முடியும்’ என்கிற கேள்வியை முன்வைக்கிறார் அவர். 'சுதந்திரம் கிடைக்கும் வரை விடுதலைக்காகச் சிந்தித்தோம் சுதந்திரம் கிடைத்தபின்பு எதற்காகச் சிந்திப்போம்' என்கிறார்.  மனிதர்களுக்காகச் சிந்தித்தோமா என்பதுதான் அவரது மறைமுகக் கேள்வி. நாம் சிந்திக்கவில்லை என்பதே நிதர்சனம். ஏனென்றால் கிடைத்த சுதந்திரம் மனிதர்களையும், மக்களையும் பிரித்தது. நாடுகள் பிரிந்தாலும் அங்கே மனிதர்கள் அடிமையாகவே இருந்தார்கள். உயிர்களைக் கொன்றது, பெண்களைத் தின்றது. மன்டோவைப் பொறுத்தமட்டில் அவரது நண்பர்களைப் பிரித்தது, தனது தாயின் கல்லறையை இறுதியாகக் காணக்கூட வாய்ப்பு தராமல் இந்த மண்ணை விட்டு அவரை வெளியேற்றியது.

சுதந்திரம் கிடைத்தபின்பு மதங்கள் இருந்தன அது நாட்டைப் பிரித்தது. மதங்களில் சாதிகள் இருந்தன அது நாட்டுக்குள் மக்களைப் பிரித்தது. ஆனால், அத்தனைப் பிரிவினைகளுக்குள்ளும் பெண் பெண்ணாகவே பார்க்கப்பட்டாள். பிரிவினைகள், இரண்டு தரப்பிலும் பெண்களைப் பண்டமாகவே வைத்திருந்தன என்கிறார். தான் பார்த்ததையும் அனுபவப்பட்டதையும் தனது சொற்களின் வழியாகப் பதிவு செய்தவர் மன்டோ. 

”உங்களது கதைகள் பெண்களுக்கான தனிப்பரிவுடன் இருக்கிறதே?” என்கிறார் மன்டோவிடம் ஒருவர். 

அதற்கு மன்டோ, ”என் கதைகள் அத்தனைப் பெண்களுக்குமானது இல்லை. என் கதைகளில் வரும் பெண்கள் தங்களை விற்றுக்கொள்ளாதவர்கள். ஆனால், சூழ்நிலையால் சமரசம் செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். இரவுகளில் உழைத்துவிட்டு பகலின் உறக்கங்களில் தனது வாழ்க்கையையும் கனவுகளையும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்” என்கிறார். 

42 வயதில் அவரது அந்திமக் காலத்தில் எழுதிய ’டோபா டேக் சிங்’ கதை இவ்வாறு முடிகிறது. “இந்தியா என்று வரையறுக்கப்பட்ட கோட்டுக்கும் பாகிஸ்தான் என்று வரையறுக்கப்பட்ட கோட்டுக்கும் இடையே பெயரிடப்படாத ஒரு மிச்ச நிலத்தில் அதுவரை உயரமாக நின்றுகொண்டிருந்த டோபா டேக் சிங் விழுகிறான்" என்கிறார் மன்டோ.

உண்மையில் மன்டோதான் அந்த டோபா டேக் சிங். ’நான் ஒரு கலைஞன். காரணமற்ற காயங்களுக்கு எனது உயிரை நான் பலிகொடுக்கப்போவதில்லை’ என்றவர் தனது வாழ்வையும் தனது நண்பர்களையும் பிரித்த இரண்டு தேசங்களுக்கிடையே அந்தப் பெயரிடப்படாத நிலத்தில்தான் ஆன்மாவாகக் கிடக்கிறார். அங்கே கௌரிக்கும், கல்புர்கிக்கும், தபோல்கருக்கும், கோவிந்த் பன்சாரேவுக்கும், சையது சுஜாத் புஹாரிக்குமாகவும் கொஞ்சம் இடம் இருக்கிறது.