நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பட்ஜெட் 2018 : தொழில் துறை எதிர்பார்ப்புகள் ஜி.எஸ்.டி வரியைக் குறித்த காலத்துக்குள் திரும்பத் தரவேண்டும்!

பட்ஜெட் 2018 : தொழில் துறை எதிர்பார்ப்புகள் ஜி.எஸ்.டி வரியைக் குறித்த காலத்துக்குள் திரும்பத் தரவேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
பட்ஜெட் 2018 : தொழில் துறை எதிர்பார்ப்புகள் ஜி.எஸ்.டி வரியைக் குறித்த காலத்துக்குள் திரும்பத் தரவேண்டும்!

பட்ஜெட் 2018 : தொழில் துறை எதிர்பார்ப்புகள் ஜி.எஸ்.டி வரியைக் குறித்த காலத்துக்குள் திரும்பத் தரவேண்டும்!

ருகிற பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. இந்த பட்ஜெட்டில் உங்கள் எதிர்பார்ப்புகள் என்னென்ன எனத் தொழில் துறை சார்ந்த சிலரிடம் கேட்டோம். அவர்களின் கோரிக்கை இனி...  

பட்ஜெட் 2018 : தொழில் துறை எதிர்பார்ப்புகள் ஜி.எஸ்.டி வரியைக் குறித்த காலத்துக்குள் திரும்பத் தரவேண்டும்!

‘‘திறன் அபிவிருத்தி மையங்கள் தேவை’’

வி.சுந்தரம், தலைவர், கொடீசியா

பட்ஜெட் 2018 : தொழில் துறை எதிர்பார்ப்புகள் ஜி.எஸ்.டி வரியைக் குறித்த காலத்துக்குள் திரும்பத் தரவேண்டும்!



“சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க ஏதுவாக, தொழிலகங்களுக்கான நிலத்தேர்வு நடைமுறையை ஒற்றைச்சாளர முறையில் வரையறுக்கப்பட்ட கால அளவான 30 நாள்களுக்குள் முடிக்க வேண்டும்.

வங்கிகள், 8 சதவிகிதத்திற்கும் குறைவான வட்டி விகிதத்தில் கடனுதவி தந்து இவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். அரசின் மின் சப்ளை, ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறையினர், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களின் தயாரிப்பு களை 20% கட்டாயக் கொள்முதல் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க, மத்திய அரசின் சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

காலத்தின் தேவைக்கேற்ப சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கையை  விரிவுபடுத்தவும், நவீனப்படுத்த வும் தேவையான மானிய உதவிகளை வழங்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவர்களைப் பங்குச்சந்தையில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் திறன் அபிவிருத்தி மையங்களை அமைத்து, திறமையான பணியாளர்களை உருவாக்க வேண்டும்.

தொழில் மேலாண்மைப் பயிற்சிகள் வழங்கவும், தொழில் தொடங்க இடவசதி அளிக்கவும்  உதவக்கூடிய கொடீசியா போன்று இன்னும் பல தொழிற்கூடக் கூட்டமைப்புகளை உருவாக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.   எம்.எஸ்.எம்.இ தொழிற்கூடங்களில் புதிதாகச் சேரக்கூடியப் பயிலுநர்களுக்கு குறைந்தபட்சம் ஓராண்டுக்கான நிதி உதவியை அளிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் பங்கேற்பதற்கேற்ற மார்க்கெட்டிங் உதவிகளைச் செய்துதர வேண்டும்.     

பட்ஜெட் 2018 : தொழில் துறை எதிர்பார்ப்புகள் ஜி.எஸ்.டி வரியைக் குறித்த காலத்துக்குள் திரும்பத் தரவேண்டும்!

நிறுவனங்களை விரிவுபடுத்த முயற்சி செய்யும் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு உதவும்பொருட்டு, தேய்மானக் கால அளவை மூன்று ஆண்டுகள் என்பதிலிருந்து அதிகரிக்க வேண்டும். நீதித் துறை அதிகாரங்களுடன் கூடிய நன்கு வரையறுக்கப்பட்ட ஊக்குவிப்பு கவுன்சில் அமைக்கப்பட்டு, எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களால் செலுத்தப்படாத நிலுவைத் தொகைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவாக வழங்குவதற்கேற்ப, இந்த நிறுவனங்களுக்கென தனிப்பட்ட அறிவுசார் சொத்துரிமை வழங்கும் பிரிவை நிர்மாணிப்பதற்கான நிதி ஆதாரங்களை அரசு உருவாக்க வேண்டும். தர மேலாண்மை அமைப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான மானியங்களைத் தொடர வேண்டும்.

தொழிலாளர் நலச் சட்டங்களை எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு உதவும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும். இந்தியாவிலுள்ள தேசிய சிறு தொழில்கள் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான பொருள் பாதுகாப்புக் கிடங்குகளில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் தயாரிப்புகளை மானிய வாடகையில் இருப்பு வைக்க அனுமதியளிக்க வேண்டும்.”

பட்ஜெட் 2018 : தொழில் துறை எதிர்பார்ப்புகள் ஜி.எஸ்.டி வரியைக் குறித்த காலத்துக்குள் திரும்பத் தரவேண்டும்!

‘‘ஜி.எஸ்.டி-க்குத் தனிப்பிரிவு தேவை!’’

டாக்டர் ஸ்ரீதர் கணேசன், நிர்வாக இயக்குநர், கேப்ளின் பாயின்ட் லேபாரட்டரீஸ்.

‘‘கார்ப்பரேட் மற்றும் மேட் (MAT) வரி விகிதங்களைத் தற்போதுள்ள அளவைவிடக் குறைக்க வேண்டும். வெளிநாட்டு டிவிடெண்ட் வரியை 15 சதவிகிதத் திலிருந்து 10-12.5 சதவிகிதத்துக்குள்  கொண்டுவர வேண்டும். டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரிகளை, பிரிவு 115-O-வின்கீழ் 12.5 சதவிகிதத்திற்குக் கீழ் கொண்டுவர வேண்டும். தேய்மான விகிதம் 40 சதவிகிதத்திற்கு மேலிருக்கும் பொருள்கள், தனித் தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, 60% தேய்மான விகிதத்திலிருக்கும் மென் பொருள்களும், அதனினும் அதிகமாக 100% தேய்மான விகிதம் கொண்ட இ.டி.பி (ETP) பொருள் களும் தனித்தனித் தலைப்பின் கீழ் தொடர வேண்டும்.

ஒரு மருத்துவக்கூடம், அதன் இயந்திரங்களின்மீது குறைந்த பட்சம் 100 கோடி முதலீடு செய்யும்போது, முதலீட்டு உதவித் தொகையாக 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் 15% வழங்கப்பட்டது. அதேபோல, முதலீட்டுத் தொகையைத் தருவதை, பிரிவு 32AC கீழ் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். உற்பத்தித் துறையில், பிரிவு 35(2AB)-ன் கீழ், ரிசர்ச் & டெவலப்மென்ட் தொடர்பான செயல்பாடுகளுக்கு வழங்கப்படும் 150% வரித் தள்ளுபடியானது தொடர வேண்டும். தள்ளுபடியைக் குறைக்கும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும். அப்படியிருந்தால்தான் மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் பல உருவாகும்.  

பட்ஜெட் 2018 : தொழில் துறை எதிர்பார்ப்புகள் ஜி.எஸ்.டி வரியைக் குறித்த காலத்துக்குள் திரும்பத் தரவேண்டும்!

ஜி.எஸ்.டி-யைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரியைத் திருப்பிச் செலுத்துவதைத் துரிதப்படுத்த வேண்டும். அதேபோல், வரி செலுத்தப்படும் கணக்கீட்டில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் திரும்பப் பெறும் தொகை எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஜி.எஸ்.டி.ஆர் போர்ட்டலின்மூலம் எப்போது வேண்டுமானாலும் அறிந்துகொள்ள இயலும். ஜி.எஸ்.டி வரியைத் திரும்பபெறுவது குறித்த சந்தேகங்களுக்குப் பதிலளிக்க தனிப்பிரிவு உருவாக்க வேண்டும். ஏற்றுமதி தொடர் புடைய மருந்துப்பொருள் யூனிட்டு களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.’’

‘‘ஏற்றுமதி உரிமம் பெற எளிய நடைமுறை தேவை!’’

பட்ஜெட் 2018 : தொழில் துறை எதிர்பார்ப்புகள் ஜி.எஸ்.டி வரியைக் குறித்த காலத்துக்குள் திரும்பத் தரவேண்டும்!



கே.எஸ்.கமாலுதீன், இயக்குநர், புளூபாரத் எக்சிம் பிரைவேட் லிமிடெட்.

‘‘கடந்த பல வருடங்களாக ஏற்றுமதியாளர்களுக்கு வருமான வரிவிலக்கு இல்லை. அனை வருக்கும் 30% வரி விதிக்கப் பட்டுள்ளது. எனவே, வரவிருக்கும் பட்ஜெட்டில் ஏற்றுமதி யாளர்களுக்கு வரிவிலக்கு அறிவிப்பை எதிர்பார்க்கிறோம். வரிவிலக்கு இல்லையென்றால் 30% வரிவிகிதத்தைக் குறைக்க வேண்டும். தற்போது, இ.ஓ.யு (EOU) சிறப்பு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மட்டும் வரிவிலக்கு இருக்கிறது. சாதாரண ஏற்றுமதியாளர்களுக்கும் ஸ்டார் ஏற்றுமதியாளர்களுக்கும் வரிவிலக்கு தரப்படுவதில்லை. இந்தியாவிலிருந்து அரிசி பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், அந்த ஏற்றுமதியாளர்களுக்கு மானிய உதவிகள் அளிக்கப்படுவதில்லை. அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு எம்.இ.ஐ.எஸ் (MEIS), டூட்டி ட்ராபேக் (Duty Drawback) மானியங்கள் வழங்கப்பட வேண்டும்.

இந்திய ஏற்றுமதியாளர்களில், கடல் சார்ந்த பொருள்களை ஏற்றுமதி (MPEDA) செய்வதற்கான உரிமம் பெறுவதில் நிறைய நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. இதை எளிமைப்படுத்தினால் ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கைப் பெருகும். நம் நாட்டுக்கு வருவாய் அதிகரிப்பதோடு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.’’

தெ.சு.கவுதமன்