மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இன்னும் சில சொற்கள் - காசி ஆனந்தன்

இன்னும் சில சொற்கள் - காசி ஆனந்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்னும் சில சொற்கள் - காசி ஆனந்தன்

ஓவியம்: பிரேம் டாவின்சி

கவிதை என்பது?

“நெஞ்சின் வெடிப்புகள்.”

வீரம்?

“தமிழரின் தனிக்குணம்.”

மறக்க நினைக்கும் காலம்?

“சிங்களவனிடம் அடி வாங்கிக் காசநோயாளியாகக் கிடந்த காலம்.”

மறக்க முடியாத மனிதர்?

“தலைவர். மேதகு பிரபாகரன்.”

நம்பிக்கை?

“நம்பிக்கை மீது நம்பிக்கை வை.”

இன்னும் சில சொற்கள் - காசி ஆனந்தன்

ஈழம்?

“விடுதலை உறுதி.”

துரோகம்?

“தமிழன் அழிய முதல் காரணம்.”

பாலு மகேந்திரா?

“உயிர் நண்பன்.”

தமிழகத் தமிழர்கள்?

“ஈழத் தமிழர்களின் தாய்மடி.”

மட்டக்களப்பு?

“என் இருப்பைத் தொடக்கிவைத்த கருப்பை.”

மொழியுணர்வு?

“தமிழன் மீண்டும் தலை நிமிர வேண்டுகிற உணர்வு.”

தாய்?

“என் மொழிக்கும், என் நாட்டுக்கும் முன்பாக நிற்பவள்.

தாய்மொழி, தாய்நாடு.”