நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பட்ஜெட் 2018... தொழில்துறைக்கு ஏமாற்றமா?

பட்ஜெட் 2018... தொழில்துறைக்கு ஏமாற்றமா?
பிரீமியம் ஸ்டோரி
News
பட்ஜெட் 2018... தொழில்துறைக்கு ஏமாற்றமா?

பட்ஜெட் 2018 ஸ்பெஷல்

திர்வரும் 2018-19-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. இந்த பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கும், கிராம முன்னேற்றத்துக்கும் அதிக அளவிலான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்கிறார்கள் பலர். தொழில் துறைக்கு எதிர்பார்த்த நிறைய விஷயங்களைச் செய்யவில்லை எனத் தொழில் துறை வட்டாரத்தில் பலத்த குரல் ஒலிக்கவே செய்கிறது. சிறு குறு தொழில்களுக்கு ஏற்றம் தரும் விஷயங்கள் ஏதாவது இந்த பட்ஜெட்டில் உள்ளதா, ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமான விஷயங்கள் ஏதாவது உள்ளதா என்பது போன்ற பல்வேறு கேள்விகளுடன் தொழில் துறையினர் சிலரைச் சந்தித்துப் பேசினோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

‘‘நிறுவனங்களுக்குத் தனி எண் தருவது நல்ல விஷயம்!’’


கவின்கேர்  சி.கே.ரங்கநாதன், தலைவர்,

 ‘‘ரூ.250 கோடி ரூபாய்க்குக் குறைவாக வர்த்தகம் செய்யும் நடுத்தர நிறுவனங்களின் கார்ப்பரேட் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகக் குறைத் திருப்பது நல்ல முடிவே. 

பட்ஜெட் 2018... தொழில்துறைக்கு ஏமாற்றமா?நடுத்தர நிறு வனங்களின் வளர்ச்சிக் காகவும், நெடுஞ்சாலை, ரயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைக்கு அதிகளவில் ஒதுக்கீடு செய்திருப்பதும், முத்ரா யோஜனா திட்டத்தில் அதிக அளவில் கடன் தர இலக்கு நிர்ணயித்திருப்பதும் அமைப்புசாரா நிறுவனங்களின் வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்க வாய்ப்பாக அமையும்.

தொடரும் ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களும், ஆன்லைன் வழியே வருமான வரித் தாக்கல் செய்வதும், பணப் பரிவர்த்தனைக் கட்டுப்பாடுகளும், ஆதார் எண் போல் நிறுவனங்களுக்குத் தனி எண் வழங்க முடிவு செய்திருப்பதும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்துவதும் பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கு முக்கியமான விஷயங்கள். சுருக்கமாக, இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பட்ஜெட் என்று சொன்னால் அதில் எந்தத் தவறும் இல்லை”.

‘‘வளர்ச்சிக்குரிய பட்ஜெட்!’’

வி.சுந்தரம், தலைவர், கொடீசியா.

பட்ஜெட் 2018... தொழில்துறைக்கு ஏமாற்றமா?

``இந்த பட்ஜெட்டில் ரூ.3,794 கோடி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முதலீட்டுக்காக ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், முத்ரா யோஜனா திட்டத்தில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்குக் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்திருப்பதும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் புதிய பணியாளர் களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாக 12 சதவிகிதத்தை மத்திய அரசு வழங்க முன்வந்திருப்பதும் நல்ல விஷயம்.

இந்த பட்ஜெட்டில், உள்கட்டமைப்புக்கு அதிகளவில் செலவு செய்ய இருப்பதால் பொருளாதாரம் வளர்ச்சியடையும். 10 கோடி குடும்பங்களுக்கு ரூ.5 லட்சத்துக்கு மருத்துவ செலவுக்கான திட்டமும், ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதும், உடான் (UDAN) திட்டத்தின்கீழ், இணைப்பில் இல்லாத 64 விமான நிலையங்களை மேம்படுத்துவதும், இரண்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையங்கள் அமைய இருப்பதும் சிறப்பு அம்சங்களாகும். இதில் ஒரு பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் தமிழ்நாட்டில் அமைய வாய்ப்புள்ளது.

பட்ஜெட்டில் பாதிப்புக்குரிய விஷயங்களாக, கூட்டு நிறுவனங்கள் (Partnerships), வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டு நிறுவனங்கள் (LLP), தனிநபர் நிறுவனங்கள் (Sole Proprietory) போன்றவை வரிச் சலுகைக்குள் கொண்டுவரப்படவில்லை.

மேலும், நீண்ட கால முதலீட்டு லாபம் ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால், அதற்கு 10%  வரி என்று சொல்லியிருப்பதும் பாதிப்பே.

இந்த பட்ஜெட்டை ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிகளவில் செலவு செய்ய திட்டமிட்டிருப்பதால், வளர்ச்சிக்குரிய பட்ஜெட்டாகப் பார்க்கலாம்.’’

“முத்ராவின்கீழ் கூடுதல் கடன் இலக்கு வரவேற்கத்தக்கது!”

பட்ஜெட் 2018... தொழில்துறைக்கு ஏமாற்றமா?வி.சங்கர், தலைவர், டை (TiE), சென்னை. 

“ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் ஐந்து லட்சம் ரூபாய்க்கான மருத்துவக் காப்பீடு, கிராமங்களில் வைஃபை வசதி, பள்ளிகளில் டிஜிட்டல் வசதி எனக் கிராமப்புற உள்கட்டமைப்புக்கு நிறையவே ஒதுக்கீடு செய்திருக்கிறார் நிதி அமைச்சர்.

இது கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவரும் வேளையில், இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியம்

முத்ரா திட்டத்தின்கீழ் கூடுதலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை நிச்சயம் வரவேற்கலாம். இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர், ‘புதுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் வெஞ்சர் கேப்பிட்டல் மற்றும் ஏஞ்சல் இன்வெஸ்டர்களுக்குப் புதிய வரைமுறைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் முதலீட்டாளர்களின் பங்கை அதிகப்படுத்தவும், பயன்பாட்டை மேம்படுத்தவும் முடியும்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே, ஏஞ்சல் முதலீட்டை வரைமுறைப்படுத்த, தொழில் கொள்கை மற்றும் மேம்படுத்துதல் துறையும், ஏஞ்சல் ஃபண்டுகளை மேம்படுத்த செபியும் முயற்சி மேற்கொண்டு வரும்வேளையில் இந்தப் புதிய அறிவிப்புத் தெளிவில்லாமல் இருக்கிறது. விரைவில் இதற்கான விளக்கம் கிடைக்கும் என்றும், ஏஞ்சல் முதலீட்டுக்கான வரி விலக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

கல்விக்கு செஸ் வரி, டிவிடெண்டுக்கு வரி, பங்கு வருமானத்துக்கு வரி என்பது மட்டும்தான் இந்த பட்ஜெட்டில் குறை.’’ 

பட்ஜெட் 2018... தொழில்துறைக்கு ஏமாற்றமா?

ரியல் எஸ்டேட்டில் பெருத்த ஏமாற்றமே!’’

ஆர்.குமார், இயக்குநர், நவீன்ஸ் 

பட்ஜெட் 2018... தொழில்துறைக்கு ஏமாற்றமா?‘‘இந்த பட்ஜெட்டைப் பொறுத்தவரை, மிகப் பெரிய ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நான்கு முக்கியமான அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். ஒன்று, தற்போது கட்டுமானத்துக்கு 18% ஜி.எஸ்.டி வரி இருக்கிறது. இதனை 6 சதவிகிதமாகக் குறைக்கும் கொள்கை அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். அப்படி எதுவும் வரவில்லை. இரண்டு, ரியல் எஸ்டேட் துறைக்கு இண்டஸ்ட்ரி அந்தஸ்தும், வீடுகள் கட்டுமானத் துறைக்கு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அந்தஸ்தும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். சாலை அமைப்பது, விமான நிலையம் உள்பட எல்லாத் துறைகளுக்கும் இன்ஃப்ரா அந்தஸ்தைத் தந்துவிட்டு, இந்தத் துறைக்கு மட்டும் அப்படிப்பட்ட அந்தஸ்தைத் தராமல் இருப்பது ஏன்? மூன்றாவதாக, ரியல் எஸ்டேட் புராஜெக்டுகளுக்குக் குறித்த காலத்தில் ஒற்றைச் சாளர முறையில் ஆன்லைன் மூலம் அனுமதி தருவதற்கான வழிகாட்டுதல் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். அதுவும் வரவில்லை. நான்காவதாக, வீட்டுக் கடனில் வீடு வாங்கும் மக்களுக்கு அந்தக் கடனைத் திரும்பக் கட்டுவதில் கட்டும் வட்டிக்கும் அதிக அளவில் வரி விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். வீட்டுக் கடனுக்கு மட்டுமல்ல, தனிநபர் வருமான வரி வரம்பில்கூட எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  

பல்வேறு பிரச்னைகளினால் துவண்டுபோயிருக்கும் ரியல் எஸ்டேட் துறையை, மீண்டும் துரிதப்படுத்தும் அருமையான வாய்ப்பை இந்த பட்ஜெட் இழந்துவிட்டது. 2022-க்குள் 2.5 கோடி வீடுகள் வேண்டும் என்கிறார்கள். இத்தனை வீடுகளையும் கட்டுவதற்கு அரசாங்கத்திடம் என்ன திட்டம் இருக்கிறது என்பதற்குத் தெளிவான எந்த விளக்கமும் இல்லை. வளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக சென்றுகொண்டிருக்கும்போது, வாய்ப்புகளை வழங்குவதை விட்டுவிட்டு, இலவசங்களை வாரி வழங்குவது சரியா என்கிற கேள்விதான் இந்த பட்ஜெட்டைப் பார்க்கும்போது வருகிறது.’’

- ஞா.சக்திவேல் முருகன்