நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பட்ஜெட் 2018 நாட்டின் முன்னேற்றமா... தேர்தல் வியூகமா?

பட்ஜெட் 2018 நாட்டின் முன்னேற்றமா... தேர்தல் வியூகமா?
பிரீமியம் ஸ்டோரி
News
பட்ஜெட் 2018 நாட்டின் முன்னேற்றமா... தேர்தல் வியூகமா?

பட்ஜெட் 2018 ஸ்பெஷல்

பா.ஜ.க தலைமையிலான நரேந்திர மோடி அரசின் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் வெற்றிகரமாகத் தாக்கல் ஆகியிருக்கிறது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கைகளால் பல தரப்பினரும் அதிருப்தி அடைந்திருந்த நிலையில், அவர்களின் நல்லெண்ணத்தைச் சம்பாதிக்க இந்த பட்ஜெட் மூலம் பல சலுகைகளை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தருவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். 

பட்ஜெட் 2018 நாட்டின் முன்னேற்றமா... தேர்தல் வியூகமா?

ஆனால், நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மாறி மாறி படித்து முடித்தபோது, சிலர் மனநிறை வடைந்தனர்; பலர் ஏமாற்ற மடைந்தனர். ‘இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதாக இருக்கிறது’ என்றனர் ஒரு தரப்பு ஆய்வாளர்கள். ‘இல்லை, இது தேர்தலுக்கான பட்ஜெட்தான்’ என அடித்துச் சொன்னார்கள் இன்னொரு தரப்பு ஆய்வாளர்கள். உண்மையில், இந்த பட்ஜெட் எப்படியிருக்கிறது?

மீண்டும் ஒரு விவசாய பட்ஜெட்


இந்த 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் விவசாய வளர்ச்சி தொடர்பான பல அறிவிப்புகள் இருந்தன. வேளாண் துறை சார்ந்த உள்கட்டமைப்புகளுக்காக ரூ.22 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, 42 வேளாண் பூங்காக்கள் அமைப்பு; விவசாயக் கூட்டுறவு சங்கங்களுக்கு 100 சதவிகித வருமான வரி விலக்கு, வேளாண் துறையின் மேம்பாட்டுக்காக ரூ.500 கோடி நிதியில் ‘ஆபரேஷன் க்ரீன்’ திட்டம், வேளாண் ஏற்றுமதியை 10,000 கோடி டாலராக உயர்த்த இலக்கு, உணவுப்பதப்படுத்துதல் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கியிருப்பது, மீன் வளத்துறையின் மேம்பாட்டுக்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு என பல அறிவிப்புகள் விவசாயத் துறை மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு வழிசெய்து தருவதாக இருந்தது. இதுதவிர, விவசாயிகள் விளைவிக்கும் சில முக்கிய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் 1.5 மடங்கு உயர்த்தப்படும் என்கிற அறிவிப்பும் விவசாயிகளை உள்ளபடியே மனம் குளிரச் செய்திருக்கிறது.

விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் இத்தனை முன்னுரிமை தந்ததில் எந்தத் தவறும் இல்லை. காரணம், பணமதிப்பு நீக்கம் நடைமுறைக்கு வந்தபின், ரொக்கமாகப் பணப் பரிமாற்றம் செய்வது கணிசமாகக் குறைந்தது. இதனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமலே போனது. இந்தப் பிரச்னையின் காரணமாக விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர். தவிர, விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சியானது அடிமட்டத்திலிருந்து ஏற்படும். அப்போது விவசாயிகளின் வருமானம் பெருகும். அவர்கள் செலவழிக்கும் தொகை அதிகரிக்கும். இதனால், பொருள்களின் விற்பனை அதிகரித்து, உற்பத்தித் துறையும், சேவைத் துறையும் இன்னும் சிறப்பாகச் செயல்படும். எனவேதான், விவசாயத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

முக்கியத்துவம் பெற்ற மருத்துவம்

விவசாயத்துக்கு அடுத்தபடியாக, மருத்துவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் 5 லட்சம் மருத்துவ மையங்களை அமைப்பது, 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது தவிர, 10 கோடி ஏழைக் குடும்பங்களின் சுகாதாரத்துக்காக, தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்குவது போன்றவை முக்கியமான அறிவிப்புகளாகும். நடுத்தர மக்கள் தங்கள் மருத்துவத் தேவைகளுக்குத் தாங்கள் சம்பாதித்த பணத்தைச் செலவு செய்தோ அல்லது காப்பீடு எடுத்தோ நிறைவேற்றிக்கொண்டுவிடுகிறார்கள். ஆனால், கிராமப்புற மக்களும், ஏழைகளும் நோய்வாய்ப்பட்டால் அரசு மருத்துவமனைகளை மட்டுமே அண்டியிருக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், ஏழைக் குடும்பமொன்றுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயமே.

பெண்களும், மூத்த குடிமக்களும்

உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் 8 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது, முதல்முறையாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இ.பி.எஃப் தொகையை 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைத்திருப்பது, மிகவும் மூத்த குடிமக்களின் மருத்துவச் செலவுக்கு ரூ.50 ஆயிரம் வரை வரிச் சலுகை, ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட்டில் போடப்படும் பணத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை வரித் தள்ளுபடி என்கிற அறிவிப்புகள், நாட்டின் வளர்ச்சிக்கு நேரடியாகப் பங்களிப்பதாக இருக்காது என்றாலும், வளர்ச்சிக்குப் பக்கத் துணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நம்பிக்கை இழக்கச் செய்யும் வேலைவாய்ப்பு


பட்ஜெட்டில் சில பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தாலும், சில நெகட்டிவ் அம்சங்களும் இருக்கவே செய்கின்றன. உதாரணமாக, கிராமப்புற வேலைவாய்ப்புக்காக ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீட்டை அறிவித்த நிதி அமைச்சர் அதற்கான சில செயல் திட்டம் எதையும் தெரிவிக்கவில்லை. வேலை வாய்ப்பு பெருகாமல் பொருளாதாரம் வளர்ச்சி காணும் என எப்படி? .

பின்னுக்குத் தள்ளப்பட்ட உற்பத்தித் துறை

நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயத் துறை பெருமளவில் உதவி செய்தாலும், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் தொழில் துறை மற்றும் சேவைத் துறையின் வளர்ச்சிக்கான எந்த முக்கியமான அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

நாட்டு முன்னேற்றமே தேர்தல் வியூகம்

விவசாய மற்றும் கிராமப்புற மக்களுக்கு அதிக நன்மைகளைச் செய்வதன் மூலம் அவர்களின் வாக்குகளைப் பெற பா.ஜ.க அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது என்பதை இந்த பட்ஜெட்டை ஊன்றிப் படிப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் விவசாய மற்றும் கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்குப் பல நடவடிக்கைகளை எடுத்தால், பிறகு அது வாக்குகளாக மாறலாம் என்கிற எதிர்பார்ப்பில் பா.ஜ.க இப்படிச் செய்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு வாக்குகளாக மாறுமா, இந்த பட்ஜெட் மீண்டும் பா.ஜ.க ஆட்சியைக் கொண்டுவர உதவி செய்யுமா என்பது போக போகத்தான் தெரியும்.

- ஜெ.சரவணன்

பட்ஜெட் 2018 நாட்டின் முன்னேற்றமா... தேர்தல் வியூகமா?

பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு மிகுந்த  ஏமாற்றம்!

இந்த பட்ஜெட் பா.ஜ.க ஆட்சியின் முழு ஆண்டுக் கான கடைசி பட்ஜெட் என்பதால், தனிநபர் சார்ந்த பல பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்த பட்ஜெட்டில் வரு மான வரி வரம்பை சிறிதளவுகூட அதிகரிக்கா மல் விட்டது தனிநபர் களுக்கு மிகுந்த ஏமாற்றத் தையே தந்து இருக்கிறது.

தனிநபர்களுக்கு நிலைக் கழிவு சலுகையை மீண்டும் கொண்டு வந்தி ருப்பதுடன், அந்தத் தொகை ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி என்றாலும், கல்வித் தீர்வை 1 சதவி கிதம் உயர்த்தப் பட்டிருப் பது என்பது எல்லோருக்கும் சிறு பாதிப்பையே ஏற் படுத்தும்.