நடப்பு
அறிவிப்பு
Published:Updated:

இனி வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பலாம்!

இனி வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பலாம்!

இனி வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பலாம்!

ன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதில் பேடிஎம், இந்தியாவில் முக்கிய இடத்தை வகிக்கிறது. சென்ற ஆண்டு கூகுள் ‘டெஸ்’ (Tez) என்கிற பெயரில் பணப் பரிவர்த்தனை செயலி ஒன்றை அறிமுகம் செய்தது. இப்போது இந்தக் கோதாவில் தனது புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்அப், களத்தில் இறங்குகிறது.

வாட்ஸ்அப் டிஜிட்டல் பணப் பரிவர்த் தனைகளுக்காக, புதிய அப்டேட் ஒன்றை சோதனை முயற்சியாக இந்தியாவில் மட்டும் வெளியிட்டுள்ளது. இது யு.பி.ஐ-யை (UPI -Unified Payment Interface) அடிப்படையாகக் கொண்டு செயல்படும். இந்தியாவின் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளும் இதன் சேவையில் இணைக்கப் பட்டுள்ளன. நூறு கோடிக்கும் மேல் பயனாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப், பேமென்ட் வசதியை அறிமுகப்படுத் தினால், டிஜிட்டல் பணப் பரிவர்த்தைனையில் முன்னணியில் உள்ள பேடிஎம், மொஃபி க்விக்  போன்ற நிறுவனங்கள் நேரடியாகக் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இனி வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பலாம்!

மற்ற செயலிகளுடன் ஒப்பிடும் போது, இந்த வாட்ஸ்அப் பேமென்டில் பணப் பரிவர்த்தனை செய்வது சுலபமாகவே உள்ளது. நீங்கள் ஒரு குறுஞ்செய்தி அனுப்புவதுபோல, பணப் பரிவர்த்தனை செய்துவிட முடியும். தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே இந்த வசதி, சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ரூ.1 முதல் ரூ.5,000 வரை மட்டுமே தற்போது பணப்பரிவர்த்தனை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பெரிய அளவிலான தொகையை இதன்மூலம் இப்போதைக்கு அனுப்பவோ, பெறவோ முடியாது.

“இந்த முறையைப் பயன்படுத்த லாக் இன் செய்ய வேண்டிய அவசியமோ அல்லது உங்கள் ஆதார் கார்டை இணைக்க வேண்டிய அவசியமோ இல்லை. எனவே, இது பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வாட்ஸ்அப், இந்திய வாடிக்கையாளர் களை ஏமாற்றுகிறது” என்கிறார் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா கூறினார்.

   எப்படிச் செயல்படுகிறது?

நீங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்ததும் கீழே டெக்ஸ்ட் பாரில் உள்ள அட்டாச் மென்ட் ஐகானை க்ளிக் செய்தால், மெனுவில் பேமென்ட் ஆப்ஷன் தோன்றும். பேமென்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ததும் டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸை ஓகே செய்துவிட்டுத் தொடர வேண்டும். அதன் பின்னர், உங்கள் கணக்கு இருக்கும் வங்கியைத் தேர்வு செய்யவேண்டும். அதில் தரப்பட்டுள்ள பட்டியலில் நீங்கள் பயன்படுத்தும் வங்கி இல்லை யென்றால், உங்களால் பரிவர்த்தனை செய்ய இயலாது. எனினும் அனைத்து வங்கிச் சேவை களையும் பயன்படுத்தும் வகையில் அதனை மேம்படுத்தி வருகிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

நீங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்ததும் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கைக் காட்டும். அந்த வங்கிக் கணக்கை தேர்ந்தெடுத்ததும் உங்களுடைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை உறுதிப்படுத்த வேண்டும். இவையனைத்திற்கும் உங்கள் வாட்ஸ்அப் எண்ணும், வங்கிக் கணக்கில் தரப்பட்டுள்ள எண்ணும் ஒன்றாக இருக்கவேண்டும். அதன்பின்,  யு.பி.ஐ பின் ஒன்றை உங்கள் மொபைல் எண்ணின் உதவியுடன் உருவாக்கிக் கொள்ளவேண்டும். இந்தச் செயல்பாடு முடிந்ததும் உங்கள் வாட்ஸ் அப் பணப் பரிவர்த்தனை செய்யத் தயாராகி விடும்.

   பணப் பரிவர்த்தனை செய்வது எப்படி?

இப்போது உங்கள் மொபைலில் உள்ள எந்த வொரு எண்ணுடனும் உங்களால் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். ஆனால், அவர்களும் வாட்ஸ்அப் பேமென்ட் வைத்திருக்க வேண்டும். ஓர் ஆடியோவையோ அல்லது வீடியோவையோ அனுப்புவதுபோல கீழே தரப்பட்டுள்ள மெனுவில் பேமென்ட்டைத் தேர்வுசெய்து, ஒன்று முதல் ரூ.5,000 வரை அனுப்பலாம். அதற்குமுன் உங்கள் யு.பி.ஐ பின்னைத் தரவேண்டியிருக்கும். அனுப்பியதும் ‘completed’ என்ற வாசகத்துடன் டபுள் டிக் காண்பிக்கும். அதன்பின்னர் வங்கியிலிருந்து வழக்கம்போல் வரும் குறுஞ்செய்தி வரும்.

தற்போது இந்தியாவில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்கள் மட்டும் பயன்படுத்தும் அளவுக்கு, சோதனை முயற்சி நடைபெறுகிறது. இந்தச் சோதனை வெற்றிபெற்றால், அடுத்த அப்டேட்டில் அனைவரின் பயன்பாட்டுக்கும் வரும்.                 

- மு.பிரசன்ன வெங்கடேஷ்