
ஆர்.சரண், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி
எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

* `நான் என்ன தக்காளித் தொக்கா?’ என்னிடம் கேட்கிறான் ஒருவன் `அடேய், தக்காளி தொக்கு எனக்குப் பிடிச்ச ஐட்டம்டா!’

* வித் அவுட்டில் வந்தவனுக்கு அப்பர் என்ன சுந்தரர் என்ன..?

* முற்றும் துறந்த முனிவர்தான் கேமராவுக்குப் பயந்தார்!

* கண்ணாடி பார்த்துத் திருத்தம் செய்கிறாள் இனி கண்ணாடி திருத்திக்கொள்ளும்!

* `என் இருமலை உறுமலாய் நினைத்து பயப்படாதே... தண்ணியக்குடி தண்ணியக்குடி..!’

* விக்கிரவாண்டி மோட்டல்காரரே `ஸ்வச் பாரத்’ அம்பாசிடராக சாலச் சிறந்தவர்
‘ஏய், அங்க போகாத... டாய்லெட்ல போ!’

* ஃபேஸ்புக்கில் உனக்கு இருக்கலாம் லட்சம் ஃபாலோயர்ஸ்... உன் வீடு வரை வரும் ஒரே ஃபாலோயர் நான்தான்1

* ஒழுங்காகச் சாப்பிடாவிட்டால் மிலிந்த் சோமன்கூட மெலிந்த சோமனாகிவிடுவார்.
வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள். பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!