தொடர்கள்
Published:Updated:

இங்கே அனல் பறக்காது!

இங்கே அனல் பறக்காது!
பிரீமியம் ஸ்டோரி
News
இங்கே அனல் பறக்காது!

கானப்ரியா

மார்ச் மாதமே அனல் கக்குகிறது. `இப்பவே இப்படி... கத்திரி வந்தா என்ன ஆகுமோ’ எனப் புலம்புபவர்கள்,  கொஞ்சம்  மாத்தி யோசித்து, உடை அணிவதில் மாற்றங்கள் கொண்டு வந்தால் வெப்பத் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.

இங்கே அனல் பறக்காது!

பருத்தி, லினென், கதர் ஆடைகள்தாம் கோடையைச் சமாளிக்கும் துணிவகைகள். இவை காற்றை நன்கு உட்புகுத்தி, வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டவை. மென்மையாகவும் எடை குறைவாகவும் இருக்கும் இந்தத் துணிவகைகளில் உருவான ஆடைகளை, போதுமான அளவுக்கு உங்கள் பீரோவில் சேர்த்துவைத்துக்கொள்ளுங்கள். இது நீண்ட நாள்கள் நீடித்து உழைக்கும். துவைப்பதற்கும் மிகவும் எளிது.

‘சாம்ப்ரே’(Chambray) துணிவகை, பார்ப்பதற்கு டெனிம் போலத் தோன்றினாலும், மிகவும் மென்மையானது. எடை குறைவான இந்தத் துணிவகை, துவைக்கத் துவைக்க மேலும் மென்மையாகும். இதில் ஷர்ட், பேன்ட், ஸ்கர்ட் என எல்லாவகையான ஆடைகளும் உள்ளன.

இங்கே அனல் பறக்காது!

நிச்சயதார்த்தம், திருமணம், பார்ட்டி போன்ற நிகழ்வுகளுக்கு, கனமான துணிகளில் வடிவமைத்த ஆடைகள் இனி தேவையில்லை. ‘Original Silk’ இதற்கு சரியான தீர்வு. எடை குறைவாகவும் மென்மையாகவும் இருக்கும் இந்தப் பட்டுத் துணி, வெப்பத்தினால் உண்டாகும் எரிச்சலைக் கட்டுப்படுத்தும். இதன் இயல்பான உறிஞ்சும்தன்மை, வியர்வையை உடனடியாக  உறிஞ்சி  உலர்த்திவிடும்.

இங்கே அனல் பறக்காது!

கண்களைக் கவரும் வைப்ரன்ட் நிறங்களில் ஆடை அணிய ஆசைப்படுகிறவர்களுக்கு, ‘மெட்ராஸ் ப்ளைட்’ துணிவகை சரியான சாய்ஸ். வானவில் நிறங்களில், செக்டு பேட்டனுடன் உருவாகும் இந்தத் துணிவகை, கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. ஷார்ட்ஸ், ப்ளேஸர், ஷர்ட், ஸ்கர்ட் ஆகியவை  மெட்ராஸ் பேட்டனில் கிடைக்கும்.

இங்கே அனல் பறக்காது!

அயர்ன் செய்வதிலிருந்து விடுதலை வேண்டுமா? அதற்கு ஏற்ற துணிவகை ‘சியர்சக்கர்’ (Seersucker). இந்த ட்ரெண்டியான துணிரகம் மிகவும் மென்மையானது. பேருக்கு ஏற்றதுபோல, வியர்வையை உறிஞ்சும்தன்மை இதற்கு அதிகம் உண்டு. ஷார்ட்ஸ், டீ-ஷர்ட், ப்ளேஸர், ஸ்கர்ட், குர்த்தா என எல்லா வகையான ஆடைகளையும் சியர்சக்கர் துணிவகை கொண்டு வடிவமைக்கலாம்.