மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 6

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 6
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 6

டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்

`ஒரு பெண் தொட்டுப் பேசுகிறாளா? அவளுக்கு செக்ஸ் உணர்வு அதிகமிருக்கும்’ என நினைக்கும் ஆண்கள் இருக்கிறார்கள். இது அறியாமை. ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது செக்ஸ். `என் மனைவி செக்ஸ் வைத்துக்கொள்ள அடிக்கடி அழைக்கிறாள். என்ன செய்யலாம்?’ என்று என்னிடமே பலர் கேட்டிருக்கிறார்கள். இந்த ஆணாதிக்க மனநிலையைத் தூக்கி எறிந்துவிட்டு, பெண்ணின் எதிர்பார்ப்பைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 6

காரணத்தைத் தெரிந்துகொள்ளாமல், மனைவிமீது பழிபோடுவது தவறு. தினமும் செக்ஸ் வைத்துக்கொண்டால்தான் குழந்தை பிறக்கும் என்ற மூடநம்பிக்கை... கணவன் வேறு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வதைத் தடுக்க... பெண்ணுக்கு செக்ஸில் ஆர்வம் இருந்து, ஆணுக்குக் குறைவாக இருப்பதால் ஏற்படும் தவறான புரிந்துணர்வு... செக்ஸின்போது ஆணுக்கு சீக்கிரமாக விந்து வெளியேறி (Premature ejaculation) பெண்ணுக்கு முழுமையான இன்பம் கிடைக்காமல் போவது... எனக் காரணங்கள் எத்தனையோ இருக்கின்றன அல்லது அப்படி உங்களுக்குத் தோன்றலாம். உடல்ரீதியாக சிலருக்கு செக்ஸ் ஈடுபாடு அதிகமாகவோ, குறைவாகவோ இருப்பது இயல்பு. செக்ஸில் ஆண்தான் ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வைக்க வேண்டும் என்ற ஆணாதிக்க மனநிலை பெண்ணைக் குறை சொல்ல முக்கியக் காரணம். அதிக செக்ஸ் உணர்வுக்கு சில நோய்களும் காரணங்களாகின்றன. பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் (Personality disorder)  பிரச்னையாக இருக்கலாம்; மூளையின் சில இடங்களில் கட்டி (Brain tumour) இருக்கலாம்.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 6

`முதலிரவில் என் மனைவிதான் முதலில் செக்ஸைத் தூண்டும்விதமாக முத்தமிட்டாள், கட்டியணைத்தாள். அவளுக்கு ஏன் இத்தனை ஆசை, அவள் வர்ஜினா (Virgin) இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?’ என்று பல இளைஞர்கள் என்னிடம் கேட்கிறார்கள். இவர்களின் மனநிலை வேதனையளிக்கிறது. செக்ஸ் உணர்வு ஒருவருக்கொருவர் மாறுபடக்கூடியது. மனைவிமீது சந்தேகப்படாதீர்கள். மனம்விட்டுப் பேசுங்கள். அவளின் தேவையைப் புரிந்துகொள்ளுங்கள். மனைவிக்கு எந்த இடம் இன்பம் கொடுக்கும், எப்படியெல்லாம் செக்ஸில் ஈடுபட விரும்புகிறாள் என்பதைக் கவனிக்க வேண்டும். சின்னச் சின்ன தொடுதல்கள், சீண்டல்கள்கூட அவளைத் திருப்திப்படுத்தலாம். உதாரணமாக, காதைக் கடிப்பது, விரலுக்குச் சொடுக்கு எடுப்பது..! பிறகென்ன... தாம்பத்தியத்தில் இன்பம் காணுங்கள்.’

கேள்வி: டாக்டர் எனக்கு 27 வயது. ஒரு வருடத்துக்கு முன்பாகத்தான் என் மனைவிக்குக் குழந்தை பிறந்தது. இப்போது, இரண்டாவது குழந்தைக்காக முயற்சி செய்கிறோம். ஆனால், ஒவ்வொரு முறை செக்ஸில் ஈடுபடும்போதும், என் மனைவி `அதிகமாக வலிக்கிறது’ என்கிறார். என்ன பிரச்னையாக இருக்கும்?

பதில்: முதலில் உங்கள் மனைவியை நல்ல மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்று இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். முதல் குழந்தை பிறக்கும்போது, பெண்ணுறுப்புக்கும், ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதி கிழிந்துவிடும். இதைச் சரிசெய்ய, எபிசியோடமி (Episiotomy) ஆபரேஷன் செய்து, கிழிந்த இடத்தைத் தைத்துவிடுவார்கள். ஆபரேஷனைச் சரியாகச் செய்யவில்லையென்றாலும் வலி ஏற்படும். அப்படி இருந்தால் நல்ல மருத்துவரிடம் சென்று ஆபரேஷன் செய்துகொள்வது நல்லது. கர்ப்பப்பை, யோனிக் குழாயில் ஏதாவது பிரச்னை இருந்தாலும் வலி ஏற்படலாம். மருத்துவரிடம் சென்று வலிக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்வதே சிறந்தது.

 (இன்னும் கற்றுத் தருகிறேன்...)

- மு.இளவரசன்