மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்

பிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்

த்ரில் தொடர் - 2ரவி சுப்ரமணியன் (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

ஜில்லியன் டான், தனது அழகிய வாட்சுகளின் சேகரிப்பை வைத்திருக்கும் ஆர்பிட்டா டர்பியான் வாட்ச் வைண்டரிலிருந்து ஜேகர்-லேகூத்ர் (Jaeger-LeCoultre) வாட்ச்சை எடுத்தார். இவர் கலந்துகொள்ளவேண்டிய செனட் கூட்டத்துக்கு நேரமாகிக்கொண்டிருந்தது. காலை உணவுக்காகப் பலவகையான உணவு வகைகள் இவருக்காகக் காத்துக்கொண்டிருந்தன. ஆனால், அதைச் சாப்பிடுவதற்கு அவருக்கு நேரமில்லை.

அவர் ஏழு வயதில் தன் அப்பாவை இழந்தார். அதன்பின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே கஷ்டப்பட்ட அம்மாவை நினைத்துப் பார்க்கும்போது இந்த உணவு மிகவும் ஆடம்பரமானதுதான். அவரின் அம்மா காலையில் டிபார்ட்மென்ட் ஸ்டோரிலும், இரவில் மதுக்கூடத்திலும் வேலை பார்த்து, அதில் கிடைத்த வருமானத்தின் உதவியால்தான் மகனைப் படிக்க வைத்தார். அதன்பின், ஸ்காலர் ஷிப்பின் உதவியால் தனது பட்டப்படிப்பை முடித்தார் ஜில்லியன் டான்.

அவர் மிகவும் புத்திசாலியாக இருந்ததோடு, கணிதப் பாடத்திலும் புலியாக இருந்தார். கணிதத்தில் அவருக்கிருந்த பகுப்பாய்வுத் திறமை, அவருடைய அறைநண்பராக இருந்தவனின் பிரசாரக் குழுவில் பங்கேற்கும் வாய்ப்பைத் தந்தது. அந்த நண்பர் அதன்பின் இல்லினாய் மாநிலத்தின் கவர்னராகி, இப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கிறார்.

பிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்

ஜில்லியன், அரசியலில் நுழைந்தபோது, கல்வித் துறையிலிருந்த ஈடுபாடு பின்வாங்கியது. அதற்குப் பதிலாக அதிகாரமிக்க அமெரிக்க அரசியலில் சிறப்பு பெறவேண்டுமென்கிற ஆசை அவரை ஆக்ரமித்துக்கொண்டது. அதில் அவர் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

‘`எனக்கு ப்ரேக் ஃபாஸ்ட் எதுவும் வேண்டாம். நான் உடனே கிளம்ப வேண்டும்!” என்று அடுக்களையிலிருந்து இரண்டு குவளைகளில் கார்ன் ஃப்ளேக்ஸையும், ஒரு க்ளாஸில் ஆரஞ்ச் ஜூஸையும் தட்டில் வைத்துக் கொண்டுவந்த தனது மனைவியைப் பார்த்துச் சத்தமாகச் சொன்னார்.

அவரின் தேவைக்குக் குரல் கொடுத்தால் வருவதற்கு மூன்று வேலைக்காரப் பெண்கள், இரண்டு பட்லர்கள் இருந்தாலும் நிக்கிதான் அவருக்குத் தினமும் பிரேக் ஃபாஸ்ட் எடுத்து வருவார். மற்ற எந்தவொரு திருமணத்தைப் போலவும், இவர்களின் திருமண வாழ்க்கையிலும் மேடும், பள்ளமும் இருந்தது. ஒரு சமயத்தில், அது மோசமானதொரு   கட்டத்தைத் தொடவிருந்தபோது, நிக்கி தன்னுடைய முயற்சியால் அது நடக்காமல் தடுத்து நிறுத்திப் பழைய வாழ்க்கைக்குக் கொண்டு வந்தார்.

``நீங்கள் ஏன் ஜூஸையாவது குடிக்கக்கூடாது? அது நீங்கள் `ஹில்’-லுக்குச் சென்றடையும் வரை தாக்கு பிடிக்கும்’’ என்றார்.

பிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்



‘`நல்லது” என்று சொல்லிக் கொண்டே மனைவியை நோக்கிச் செல்லும்போது, தனது வாட்ச்சை மீண்டுமொருமுறை பார்த்துக் கொண்டார். அவர் விரும்பியதை விட வாட்ச் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது போலத் தோன்றியது. சிவில் ஒர்க்ஸ் டிபார்ட்மென்டைச் சேர்ந்த முட்டாள்கள் வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்துக்கு வேறு ரோட்டைத் தோண்டிப் போட்டிருந்தார்கள். கேட்டால், ‘`கேபிள் ஒர்க்’’ என்றார்கள். அந்த ரோடு முழுவதுமே கடந்த மூன்று நாள்களாகப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கிறது. அதனால், வேறு ரோடு வழியாகச் சுற்றித்தான் போக வேண்டும். இது அவர் பயண நேரத்தை ஒன்பது நிமிடங்கள் அதிகரிக்கும்.

அவர் ஒரே மடக்கில் ஜூஸைக் குடித்துவிட்டு, கதைவை வேக மாகத் தள்ளினார். ‘`பை, நான் போயிட்டு வர்றேன்’’ என்று சொன்ன அவர், “ஹனி!” என்று  கூப்பிட, நிக்கி அவரை நோக்கி ஓடிப்போய் வழக்கமாகக் கொடுக்கும் குட்பை முத்தத்தைக் கொடுத்தார்.

‘`க்ளோரியா எங்கே?” எனக் கேட்டார். ‘`இன்னுமா தூங்குகிறாள்?” அவர்களுடைய மகள் இப்போதுதான் இருபது களில் நுழைந்திருக்கிறாள். நிக்கி இன்னொரு பக்கம் பார்த்தார். ஆனால், பார்ப்பதற்கு அவர்  தலையாட்டுவதுபோலத்  தெரிந்தது.

அவர் நிக்கிக்கு கன்னத்தில் முத்தத்தைப் பதித்துவிட்டுப் போகும்போது, ‘`நீங்கள் இன்னைக்கு ஜனாதிபதியை சந்திப்பீர்களா?’’ என்று கேட்டாள்.

``வேற ஏதாவது சாய்ஸ் இருக்கா, என்ன?’’ என்று அவர் நெற்றியைச் சுருக்கினார். ‘`செனட் மீட்டிங்குக்குப்பிறகு சந்திப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்’ என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்கு வெளியே வந்தார்.

கார்ல், அவருடைய டிரைவர், பாதுகாப்புக் கவசவசதி கொண்ட மெர்சிடீஸ்-பென்ஸ் காரின் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார். பிரத்யேகமான மெர்சிடீஸ் என்பது வழக்கமான என்டைட்டில்மென்ட் இல்லை. `தெற்கு ஆசிய வெளியுறவுக் கொள்கை’ சம்பந்தமாக அரசுக்கு ஆலோசனை வழங்கும் செனட் கமிட்டியில் ஜில்லியன் ஒரு உறுப்பினராக இருந்தார். அவருடைய இந்த வேலை அவரை ஒரு `ஹை-ரிஸ்க் டார்கெட்’-ஆக ஆக்கியிருந்தது.

பிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, வேறு இரண்டு கார்களுக்கு இடையில் இவருடைய மெர்சிடீஸ் சாண்ட்விட்ச்போல சென்று கொண்டிருந்தது.

‘`இன்னும் இருபது நிமிடத்துக் குள் நாம் அங்கே இருக்க வேண்டும், கார்ல்’’ - ஜில்லியன் கட்டளை யிட்டார். அவருடைய மனம்,  ஜனாதிபதி சந்திப்பு குறித்தே  இன்னும் நினைத்துக்கொண் டிருந்தது. எப்படி அவரிடம் சொல்வது என்பதே யோசனையாக இருந்தது.

அவருக்குப் பக்கத்தில் இருந்த ஃபைலிலிருந்து சில பேப்பர்களை வெளியே எடுத்தார். ட்ரிப் மீட்டர் 180 வினாடி எனக் காட்டியது. ஜில்லியன் வழக்கமான வேலையில் ஈடுபட ஆரம்பித்த சமயம், கார் சத்தத்துடன் நின்றது. பேப்பர்கள் எல்லாம் கீழே விழுந்தன.

‘`டாமிட், கார்ல்! வேகமாக போ என்றால் இந்த மாதிரிக் கவனம் இல்லாமல், முரட்டுத்தனமாக  பிரேக் போட வேண்டும் என்று  அர்த்தமில்லை’’ என்றார்.

‘`சாரி சார்.’’

அப்போதுதான் அவர் தனது காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பைலட் கார்களும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார். கார்லும் அதனால்தான் திடீரென்று பிரேக் போட வேண்டியிருந்தது என்பதைத் தெரிந்துகொண்டார்.

கார்லின் இயர்போனில் ஒரு குரல் கேட்க, அவர் ஏதோ பேசிவிட்டுப் பின்னால் திரும்பி னார். “பழைய ரோடு திறக்கப் பட்டுவிட்டதாம். நாம் அந்த வழியாகப் போகலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” எனக் கேட்டார்.

வழக்கமாக, கார்ல் இது குறித் தெல்லாம் கேட்பதில்லை ஆனால், கடந்த மூன்று நாள்களாக மாற்றுப் பாதை வழியாகச் செல்வதால், போகும் வழியில் ஸ்டார்பக்ஸில் நுரை ததும்பும் `மாக்கியாட்’டோவை ஜில்லியன் வாங்குவதுண்டு. எனவே, அவரிடம் கார்ல் கேட்டிருக்கக் கூடும். பழைய வழியில் செல்வ தென்றால், ஜில்லியன் ஒன்பது நிமிடங்களைச் சேமிக்கலாம் என்பதால், அந்த வழியில் செல்வதற்கு அவர் சரியென்றார். கார்ல் தனது இயர்போனில் ஏதோ முணுமுணுக்க, முன்னால் பவனி சென்ற வாகனங்கள் நகர ஆரம்பித்தது.

ஜில்லியன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துவிட்டு, தனக்குப் பக்கத்தில் இருக்கும் ஃபெட்எக்ஸ் பேக்கேஜைப் பார்த்தார். இவர் வீட்டிலிருந்து வெளியே வரும் போது நிக்கி கொடுத்தது. இவருக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த பேக்கேஜில் அனுப்பியருடைய முகவரி இல்லை. அந்த பேக்கேஜுக்குள் ஆறு இஞ்ச் அளவிலான ஒரு சிறிய சைக்கிள் இருந்தது. அது ஏதோ வாரச் சந்தையில் வாங்கப்பட்டதுபோல இருந்தது. யாரோ ஒருவர் இவருக்கு அதை அனுப்பிவைத்திருந்தது விநோதமாக இருந்தது.

இவருடைய பாதுகாப்புக் குழுவினர் அதில் வெடிப்பதற்கான பொருள்கள் இருக்கிறதா, இல்லையா என்பதைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, எதுவும் பிரச்னை இல்லை என்று உறுதி செய்தபின்பு அதைத் தந்திருந்தார்கள்.

பிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்

மிகவும் கவனமாக பேக் செய்யப்பட்டிருந்த அந்தச் சிறிய சைக்கிளை ஜில்லியன் வெளியே எடுத்தார். அவர் அந்த சைக்கிளை தன்னுடைய கண்களுக்கு நேராக வைத்து உற்றுப் பார்த்தார். ஏன் அப்படிச் செய்கிறோம் என்று அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை.

மெர்சிடீஸ் சாலையில் பறந்துகொண்டிருந்தது. சில நாள்களுக்குமுன்பு மூடப்பட்டிருந்த சாலையை கார் அணுக ஆரம்பித்தது. கொஞ்சம் முன்னால், அந்த வளைவின் இன்னொரு பக்கத்தில், சாலையோரத்தில், குன்றை ஒட்டி ஒரு சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை அவரால் பார்க்க முடிந்தது. அவர் கையிலிருந்த சிறிய சைக்கிளின் பெரிய வடிவத்தில் அது இருந்தது.

அவர் வலதுபக்கம் பார்த்தார். புற்கள் நிறைந்த அருமையான நிலப்பரப்பு, ரோட்டைத் தோண்டி வேலை செய்ததால் சேதமாகி இருந்தது. அதைப் பார்க்கும்போது தோண்டின குழியை ஏதோ அவசரமா மூடிவிட்டுச் சென்றமாதிரி இருந்தது. வழக்கமா, சப்டிவிஷன் கான்ட்ராக்டர்கள் இப்படி அரைகுறையாகவெல்லாம் வேலை செய்து விட்டுப் போகமாட்டார்கள். சிட்டி கவுன்சில் சம்பந்தப்பட்டவர்களிடம் இதுபற்றிச் சொல்ல வேண்டுமென நினைத்துக்கொண்டார்.

அப்போதுதான் அவருக்கு `டக்’கென்று நினைவு வந்தது… எங்கே இருந்துவந்தது என்று தெரியாத ஒரு பேக்கேஜ், சின்ன சைக்கிள், பெரிய சைக்கிள், நேர்த்தியற்ற சாலையோர வேலை…. இதையெல்லாம் பார்த்தால் ஏதோ `செட்-அப்’ போல இருக்கே!

‘`நிறுத்து!” - அவர் கத்தினார்.

முன்னால் சென்ற கார், சைக்கிள் நிறுத்தி வைத்திருந்த இடத்தைத் தாண்டிச் சென்றுவிட்டிருந்தது, கார்ல் தனது காரின் பிரேக்கை அழுத்த.... ‘‘இட் வாஸ் டூ லேட்....’’

ஜில்லியன் என்னவெல்லாம் சொன்னாரோ, அதெல்லாம் அவர் இருந்த மெர்சிடீஸ் அந்த சைக்கிளைத் தாண்டியபோது ஏற்பட்ட வெடிச் சத்தத்தில் கேட்க முடியாமல் காற்றோடு காற்றாக கலந்தது.

தாக்குதலுக்குள்ளான பாதுகாப்புக் கவசம்கொண்ட மெர்சிடீஸ் கார் காற்றில் மேலே சென்று தடாலென்று கீழே தரையில் விழுந்து, சுற்றிச் சுழன்று நின்றது. ஒசாமா பின்லேடன் ‘ஒயிட் ஹவுஸில்’ விருந்து சாப்பிடுவதற்கு எவ்வளவு சாத்தியம் உள்ளதோ, அந்த அளவுக்கான சாத்தியம்தான் அந்த காரில் இருந்தவர்கள் உயிரோடு இருப்பதற்கும்  இருந்தது!

(பித்தலாட்டம் தொடரும்)
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

பிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்

மிகப்பெரிய சூரியசக்தி ஆலை தொடக்கம்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் இருவரும், சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய சூரிய சக்தி ஆலையைத் தொடங்கி வைத்தனர். உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் 380 ஏக்கர் பரப்பளவில் 1,18,600 சூரியசக்தி பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்ஜீ எனப்படும் பிரெஞ்ச் நிறுவனத்தால் ரூ.500 கோடி முதலீட்டில் கட்டப் பட்டுள்ள இந்த ஆலையி லிருந்து 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலையி லிருந்து ஆண்டுக்கு 15.6 கோடி யூனிட்டுகள் அளவுக்கு மின்சாரம் உற் பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.