Published:Updated:

`எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஆணை 45 நாட்களில் கிடைக்கும்' - சுகாதாரத்துறை செயலாளர் நம்பிக்கை!

மதுரையில் எய்ம்ஸ் அமைவது தொடர்பாக அடுத்த 45நாட்களில் ஆணை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை   செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை  அண்ணா பேருந்துநிலையம் அருகே, புதிதாக கட்டப்படும் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையின் கட்டுமான பணியை இன்று ஆய்வு செய்த பின், தமிழக சுகாதாரத் துறைச்  செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது," மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பாக, சுணக்கம் இன்றி பணிகள் நடைபெற்றுவருகிறது. தற்போது வரை மண் பரிசோதனை நடைபெற்றுவருகிறது. இதில் எந்த தயக்கமும் காட்டவில்லை. மத்திய சுகாதார துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.

விரைவில் பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. அடுத்த 45நாட்களில் ஆணை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் மதுரை, நெல்லை, தஞ்சை ஆகிய மூன்றுஇடங்களில் தலா 150கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டுவரும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துமனையை மத்திய சுகாதார துறை அமைச்சரிடம், உடனடியாக திறக்க வலியுறுத்தியுள்ளோம். மிக விரைவாக திறக்கபடவுள்ளது. ராஜஸ்தான் மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பரவிவரும் நிலையில்,  வெளியில் சென்று வருபவர்கள் கை கழுவும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும், காய்ச்சல் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.மழைக்காலங்களில் நோய்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது'' என்றார்.