மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன், விஷ்ணுபுரம் சரவணன்

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன், விஷ்ணுபுரம் சரவணன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன், விஷ்ணுபுரம் சரவணன்

இங்கேயும்... இப்போதும்...

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன், விஷ்ணுபுரம் சரவணன்

உமையவன்

“ஏர்வழியே நேர்வழி என்றெண்ணி வாழ்ந்த எளிய வேளாண் குடும்பத்துப் பிள்ளை நான். என் எந்தத் தலைமுறையோடும் எழுத்துக்குப் பந்தமில்லை. உயிர்ச்சூடு தனியாமல் பதமாக்கிவைத்த வைக்கோல் கோட்டைக்குளிருந்து தெறித்து விழுந்து துளிர்த்த முதல் விதை நான். கைவிட்டுப்போன உழவு வாழ்க்கையைத் தேடித் திரிந்து ஓலமிடும் ஒரு குடியானவனின் துயரத்தைப் பின்தொடர்கிறது என் எழுத்து. என் மொழியென்பது, வயல் நீரோட்டத்தின் ஈரம் தோய்ந்தது. எவரின் பார்வையும் விழாத, ஊர்ப்புறச் சுவற்றில் கிறுக்கப்படும் கரிக்கோட்டுச் சித்திரங்களை நான் எழுத்தாகப் பெயர்க்கிறேன். அதன் வழி என் பெயர் கவிஞனாகிறது...”

ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த உமையவன், கோவை டைடல் பார்க்கில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ‘சீனியர் அனாலிசிஸ்ட்’ ஆகப் பணிபுரிகிறார். ‘நீர் தேடும் வேர்கள்’, ‘விதையின் விருட்சம்’ ஆகிய கவிதை நூல்களையும்  ‘பறக்கும் யானையும் பேசும் பூக்களும்’, ‘ஆகாய வீடு’ உள்ளிட்ட சிறுவர் கதை நூல்களையும் எழுதியிருக்கிறார். ‘உழுத புழுதி’ என்ற கவிதை நூலும், ‘குட்டி யானையும் குறட்டைச் சத்தமும்’ என்ற சிறுவர் நூலும் விரைவில் வெளிவரவுள்ளது. இவரது இயற்பெயர் ப.ராமசாமி.

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன், விஷ்ணுபுரம் சரவணன்

கு.அ.தமிழ்மொழி

“சமூகப் பார்வைகொண்ட படைப்புகளை எளிமையான மொழிநடையில் எழுதவே விரும்புகிறேன். குறிப்பாக, பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை நுணுக்கமாகப் பதிவுசெய்வதில் ஆர்வம் காட்டுகிறேன். நாம் வாழும் காலத்தில் நடக்கும் சமூகச் சீர்கேடுகளுக்கான எதிர்வினையாக எம் படைப்புகளைத்

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன், விஷ்ணுபுரம் சரவணன்

தகவமைத்துக்கொள்வதையும், படிப்பவருக்கு ஏதேனும் ஒருவகையில் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதையும் கவனத்தில்கொள்கிறேன்.”

புதுச்சேரியில் வசிக்கும் கு.அ.தமிழ்மொழி, பண்பலை வானொலியில் ஆர்.ஜே-வாகப் பணிபுரிகிறார். ‘சிறகின் கீழ் வானம்’ , ‘புத்தனைத் தேடும் போதி மரங்கள்’ ஆகிய ஹைக்கூ தொகுப்புகளும் ‘கல் நில் வெல்’ எனும் குழந்தைப் பாடல்கள் தொகுப்பும் வெளிவந்துள்ளன. சமீபத்தில் ‘நினைவில் வராத கனவுகள்’ எனும் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன், விஷ்ணுபுரம் சரவணன்

கோ.பாரதிமோகன்

“வாழ்வில் ஏராளமான நிராகரிப்புகளைச் சந்தித்தவன் நான். அதனால், அதை மற்றவருக்குக் கொடுத்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு இருக்கிறேன். அன்பைப் பரிமாறிக்கொள்ளும் விரும்பத்தையே என் படைப்புகள் ஏந்திவருகின்றன. என்னுடைய வேலைநேரம் என்பது நான் தயாரிக்கும் பொருளின் தேவையைப் பொறுத்ததுதான் என்பதால், ஓய்வும் வேலைப்பளுவும் மாறி மாறி வரும். கிடைக்கும் ஓய்வில் புத்தகங்களை வாசிக்கிறேன். அதுவே என்னை எழுதவும்வைக்கிறது.எழுதுவதும் இயங்குவதுமே எல்லாவற்றுக்குமான ஆறுதலாக இருக்கிறது.”

கும்பகோணம், பட்டீஸ்வரத்தில் வசிக்கும் கோ.பாரதிமோகன், வளையப்பேட்டையில் எவர்சில்வர் குடங்களின் வாய்ப்பகுதிக்கான வளையம் தயாரிக்கும் வேலைசெய்து வருகிறார். ‘மெளனத்தின் சிறகடிப்பு’, ‘காதலில் மோதிக்கொண்டேன்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.  கஸல் பாணிக் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம்கொண்டவர். இதழ்களில் கட்டுரைகளும் எழுதிவருகிறார். நண்பர்களோடு இணைந்து ‘தாழ்வாரம்’ எனும் இலக்கிய அமைப்பினைத் தொடங்கி, இயங்கிவருகிறார்.

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன், விஷ்ணுபுரம் சரவணன்

பகவத் கீதா

“எழுத்தென்பது எனக்கு ஞானதரிசனம். என் உயிர்ப்பின் இழையாய் அதுவும் எனைத் தொடர்கிறது. என் படைப்புக்கான வார்த்தைகள் ஆன்மவெளியில் உலவுகின்றன. அவற்றைக் கண்டடைந்து தனக்குரிய இடத்தில் பொருத்திக்கொள்கிறது கவிதை. நானோர் மூன்றாம் ஊடகம். கவிதை, தானே எழுதிக்கொள்கிறது. மானுடத்தின் சகல ஆன்மாக்களும் என் கவிதையின் பாடுபொருளாக ஊடாடுகின்றன. தனக்கேயான தனித்த மொழிக்கட்டை உடுத்திக்கொண்டு இந்தப் பிரபஞ்சவெளியில் உலவிக்கொண்டே இருக்கும் என் கவிதை. இந்தப் பிரபஞ்சம் இருக்கும் வரை.

திருச்சியைச் சேர்ந்த பகவத் கீதா, துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ‘மானுடத்தின் மகரந்த வெளி’ என்ற கவிதைத் தொகுப்பையும், ‘பெளர்ணமியாகா பிறைநிலவுகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘இலக்கியக் கதம்பம்’ என்ற ஆய்வு நூலையும், ‘ஹோலிகா’ என்ற குறுநாடக நூலையும் எழுதியுள்ளார். மணிமேகலையை முன்வைத்துப் பெண்ணிய நோக்கிலான ஒரு நாடகநூல் விரைவில் வெளியாகவிருக்கிறது.