மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்ஏப்ரல் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

மேஷம்: முகமலர்ச்சியுடன் காணப்படு வீர்கள். தைரியமாக முடிவுகள் எடுத்து மற்றவர்களை அசத்துவீர்கள். உறவினர் கள், நண்பர்களின் சுப காரியங்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். உறவினர்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். 

ராசி பலன்கள்வியாபாரம்: போட்டிகள் குறையும். பங்குதாரர்களிடையே அனுசரித்துப்போவது நல்லது.

உத்தியோகம்: தேங்கிக்கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.

அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தி அத்தியாவசிய செலவுகளைச் செய்யும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம்: சுப நிகழ்ச்சிகளால் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் பரபரப் புடன் காணப்படுவீர்கள். உங்களின் மதிப்பு மரியாதை கூடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். 

வியாபாரம்:
கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும்.

உத்தியோகம்: வீண்பழி, வேலைச்சுமை அதிகரிக்கும். கவனமாகச் செயலாற்றுவது நல்லது.

மனநிறைவுடன் காணப்படும் வேளையிது.

மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். அதிரடியான முடிவுகள் எடுத்து, குடும்ப வருமானத்தைப் பெருக்க நினைப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.  நண்பர்கள், உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

ராசி பலன்கள்வியாபாரம்: புதிய யுத்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகம்:
சக ஊழியர்கள், மேலதிகாரியின் பாராட் டைப் பெறுவீர்கள்.

புது முயற்சிகளில் சாதிக்கும் தருணமிது.

ராசி பலன்கள்

கடகம்: மனதில் புத்துணர்ச்சி பெரு கும். தடைப்பட்ட காரியங்களில் இனி வெற்றியுண்டு. குடும்பத்தினருடன் அனுசரித்துப்போவது நல்லது. வீண் செலவுகளைக் குறைத்துச் சேமியுங்கள். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

வியாபாரம்: பங்குதாரர்களிடையே சின்னச் சின்ன மன  ஸ்தாபங்கள் வரும். விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள்.

உத்தியோகம்: பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள்.

எதிர்நீச்சலடிக்கும் வேளையிது.

சிம்மம்: பணவரவு உண்டு. தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்களைப் பரபரப்புடன் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். மன உளைச்சல், டென்ஷன், சொத்துப் பிரச்னைகள் வந்துபோகும்.

ராசி பலன்கள்வியாபாரம்: புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள்.

உத்தியோகம்: அதிகாரிகள் புதுப் பொறுப்பை ஒப்படைப்பார்கள்.

திட்டமிட்டுச் செயல்படுவதால் வெற்றிபெறும் வேளையிது.

ராசி பலன்கள்

கன்னி: மனதில் தைரியமும் உற்சாகமும் பிறக்கும். குடும்பத்தில் அமைதி உண்டா கும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கொஞ்சம் அலைந்து திரிந்துதான் வேலைகளைச் செய்து முடிக்கவேண்டிவரும். ஒருமுறைக்கு இரண்டு முறை எதையும் யோசித்துச் செய்வது நல்லது.

வியாபாரம்: போட்டிகளை எதிர்கொண்டு லாபம் காண்பீர்கள்.

உத்தியோகம்: மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

விடாமுயற்சியால் வெற்றிபெறும் வேளையிது.

துலாம்: எதிர்காலத்துக்காக முக்கியத் திட்டங்களைத் தீட்டு வீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேர்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் வீண்வாதம் வர வாய்ப்பிருப்பதால் அநாவசிய பேச்சைத் தவிர்ப்பது நல்லது.

ராசி பலன்கள்வியாபாரம்: வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகம்: சக ஊழியர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுவீர்கள்.

யதார்த்தமான பேச்சால் வெற்றிபெறும் காலமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்: நீண்ட நாள்களாக மனதில் இருந்த கவலைகள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும். கொடுத்த பணம் திரும்பிவரும். சுப நிகழ்ச்சிகளில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்.

வியாபாரம்: அதிரடி சலுகைகளை அறிவித்து சரக்கு களை விற்றுத் தீர்ப்பீர்கள்.

உத்தியோகம்: வேலைச்சுமை இருந்தாலும், அதிகாரிகள் உதவுவார்கள்.

சுற்றியிருப்பவர்களைப் புரிந்துகொள்ளும் தருணம் இது.

தனுசு: புதிய இடத்தில் வேலை கிடைக்கும். புத்திசாலித்தனமாக சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தந்தையின் உடல்நலம் சீராகும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். யாருக்காகவும் எதற்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.

ராசி பலன்கள்வியாபாரம்:
பங்குதாரர்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்துகொள்வார்கள்.

உத்தியோகம்:
கொஞ்சம் வேலைச்சுமை இருக்கும்.

அலைச்சலுடன் ஆதாயம்கிட்டும் வேளையிது.

ராசி பலன்கள்

மகரம்: அடகுவைத்திருந்த ஆபரணங்களை மீட்பீர்கள். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை உண்டாகும். வி.ஐ.பி-க்களுடன் சகஜமாகப் பேசி காரியம் முடிப்பீர்கள்.  கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். கடனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். குடும்பத்தின் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

வியாபாரம்: பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள்.

உத்தியோகம்: சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.

உற்சாகத்துடன் வலம்வரும் நேரமிது.

கும்பம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய கடனை அடைப்பீர்கள். சேமிக்கத் தொடங்கு வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். பணத்தட்டுப்பாடு ஓரளவு நீங்கும். வெளிநபர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுப காரியங்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.

ராசி பலன்கள்வியாபாரம்: கூடுதல் லாபம் கிடைக்கும்.

உத்தியோகம்: சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும்.

தளராத நெஞ்சுறுதியுடன் செயல்படும் தருணமிது.

ராசி பலன்கள்

மீனம்: எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். கைமாற்றாகக் கொடுத்த கடன் பாக்கியை வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்களைக் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். பயணங்களால் மன நிம்மதி கிட்டும்.

வியாபாரம்:
புதிய வாடிக்கையாளர்கள், உங்களைத் தேடி வருவார்கள்.

உத்தியோகம்: உயர் அதிகாரியின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

புதிய பாதை தென்படும் தருணமிது.