சமூகம்
Published:Updated:

போ - கவிதை

போ - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
போ - கவிதை

ராஜா சந்திரசேகர், ஓவியம்: ரவி#WeWantCMB#GoHomeEPSnOPS

போ - கவிதை

வகாசம் கேள்
தள்ளிப்போடு
காலம் கடத்து
கத்திப் பேசு
குழப்பு
மயக்கம் கொள்
மந்தமாக இரு
அடிமைகளை உன் பாட்டுக்கு ஆடவிடு
விக்கல் வருது பார்
நீயே நீர் குடி
விவசாயிகள் தற்கொலை பட்டியலைப் பிரி
உரக்கப்படி
உடல் அதிர்வு இருக்கட்டும்
கண்ணீர் விடு
கள்ள மெளனத்தைக் கைவிடாதே
மேடை அபகரி
வேடங்கள் போடு
நடி
உளறு
உணர்ச்சிவசப்படு
உன் வசதிக்கு வளை
ஊடக வெளிச்சத்தில் உருகு
வசனங்களை மாற்றிக்கொண்டே இரு
விடாமல் அரசியல் செய்
மக்கள் மனதிலிருந்து அழிந்து போ!