Published:Updated:

IoT நெட்வொர்க்கை குறிவைக்கும் சைபர் தீவிரவாதம்!

IoT நெட்வொர்க்கை குறிவைக்கும் சைபர் தீவிரவாதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
IoT நெட்வொர்க்கை குறிவைக்கும் சைபர் தீவிரவாதம்!

இரா.கீதா

ஹேக்கிங், சைபர் தாக்குதல் போன்றவை தெரியும். சைபர் தீவிரவாதம் என்ற வார்த்தையைக் கேட்டதுண்டா? வளர்ந்துவரும் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்க்கு சவால்விடும் விஷயங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது இந்த சைபர் தீவிரவாதம்.

IoT நெட்வொர்க்கை குறிவைக்கும் சைபர் தீவிரவாதம்!

இதுவரைக்கும் உலகில் நடைபெற்ற ஹேக்கிங்களின் நோக்கமெல்லாம் பிறரது தகவல்களைத் திருடுவது மட்டும்தான். ஆனால், இந்த சைபர் தீவிரவாதிகளின் நோக்கம் அதற்கும் மேல். இவர்கள் ஹேக் செய்வதோடு நின்றுவிட மாட்டார்கள்; இன்னும் ஒருபடி மேலே போய் அந்தக் கருவிகளை தவறான நோக்கங்களுக்காகவும் பயன்படுத்துவார்கள். இங்கே கருவிகள் என நான் குறிப்பிடுவது வெறும் மொபைல் போனையும், கணினியையும் மட்டுமல்ல. நம் வீட்டில் இருக்கும் எல்லா ஸ்மார்ட் டிவைஸ்களையும்தான். ஃபிரிட்ஜ், வெப் கேமரா, செக்யூரிட்டி கேமரா, கார், பைக், ஸ்மார்ட் டிவி ரிமோட், ஏசி ரிமோட், தண்ணீர் டேங்க் சென்சார்ஸ், டிவி செட்டாப் பாக்ஸ், காலிங் பெல், சென்சார் மூலம் இயங்கும் லைட், மின்விசிறிகள் என எல்லாமே இவர்களின் ஹிட் லிஸ்டில் அடங்கும். ஆனால், ஒரே கண்டிஷன் இவையெல்லாம் ஏதேனும் ஒரு வகையில் இணையத்துடன் இணைந்திருக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு சைபர் தீவிரவாதி இணையத்தில் இணைக்கப்பட்ட ஒரு காரினைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் அந்தக் காரை தவறான திசையில் செலுத்தி, சாலையைக் குழப்புவார். இந்தக் காரின் போக்கு புரியாமல் மற்ற வாகனங்கள் தடுமாறும்; விபத்துகள் நிகழும். இதேபோல ஒவ்வொரு கருவிக்கும் ஏற்ப தாக்குதல் முறைகளும், நோக்கமும் மாறுபடும். இப்படித்தான் இவர்களின் தாக்குதல்கள் இருக்கும்.

இந்த சைபர் தீவிரவாதத்திற்கு ஆதிமூலம் IoT. இந்த சைபர் தீவிரவாதத்தின் முக்கிய ஆயுதம் பாட்நெட் (Botnet). பாட்நெட் என்பது ஹேக் செய்யப்பட்ட பல கணினிகளின் ஒரு நெட்வொர்க். இதில் எத்தனை ஆயிரம் கணினிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். எதிர்காலத்தில் இது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கலாம் என்பதால் தொழில்நுட்ப நிபுணர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் ராணுவமும் இவற்றிற்கு எதிராகப் போராட தயாராகி வருகின்றன.