Published:Updated:

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
பிரீமியம் ஸ்டோரி
News
இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா விஷயத்தில் ஃபேஸ்புக் சிக்கியதும், உடனே #DeleteFacebook என ஹேஷ்டேக் போட்டு பொங்க தொடங்கிவிட்டனர் போராளி நெட்டிசன்ஸ். அதில் எத்தனை பேர் நிஜமாகவே டெலிட் செய்தார்கள் எனத் தெரியாது. ஆனால், எலான் மஸ்க் நிஜமாகவே அதை செய்துகாட்டிவிட்டார்.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

"இது ஃபேஸ்புக்கை டெலிட் செய்ய வேண்டிய நேரம்" என ட்விட்டரில் முதல் திரியைக் கொளுத்தியவர் வாட்ஸ்அப்பின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன். அதற்கு ரிப்ளை செய்த மஸ்க், "ஃபேஸ்புக்னா என்ன?" எனக் கேட்க, உடனே ஒரு ட்விட்டர் யூசர் "ஃபேஸ்புக்னா என்னாவா? எங்க முடிஞ்சா உங்க ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா பேஜை எல்லாம் டெலிட் பண்ணுங்க பார்ப்போம்" என வம்பிழுத்தார். என்ன டென்ஷனில் இருந்தாரோ தெரியவில்லை. "இதோ உடனே டெலிட் பண்ண சொல்றேன்" எனச் சொல்லி அந்த இரண்டு பக்கங்களையும் நிஜமாகவே டிஆக்டிவேட் செய்துவிட்டார். "இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!" என ஜெர்க் ஆன எல்லா யூசர்களும், "சூப்பர்... இதே மாதிரி இன்ஸ்டாகிராமையும் டெலிட் பண்ணுங்க. மஸ்க் மானஸ்தர்ன்னு ஒத்துக்கிறோம்" எனக் கமென்ட் தட்ட ஆரம்பித்தனர்.

இந்தமுறை கொஞ்சம் சீரியஸான மஸ்க், "நான் இதுவரைக்கும் ஃபேஸ்புக் பயன்படுத்துனதே இல்லை. பயன்படுத்தவும் மாட்டேன். அதேசமயம், இன்ஸ்டாகிராம் அந்தளவுக்கு ஆபத்து இல்லன்னு நினைக்கிறேன். நான் எங்க கம்பெனி பேஜை டெலிட் பண்ணதும் அவ்ளோ பெரிய தியாகம்லா இல்ல. நாங்க எப்படியும் ஃபேஸ்புக்ல விளம்பரம்லாம் செய்யப்போறதில்ல. அப்புறம் என்ன பிரச்னை?" என விளக்கம் அளித்து அந்தப் பஞ்சாயத்தை முடித்துவைத்தார். இந்த கருத்துக்கு மார்க் என ரியாக்ஷன் என்னவா இருக்கும்?