Published:Updated:

மண்ட்டோ வெளிப்படத் தொடங்கியிருக்கிறார்... அதுவும் சரியான நேரத்தில்..!

மண்ட்டோ வெளிப்படத் தொடங்கியிருக்கிறார்... அதுவும் சரியான நேரத்தில்..!

எல்லாவற்றிலும் என் அடையாளத்தைத் தேடும் உங்கள் கண்களில் தெரியும் வெறிக்கு என்ன பெயர், என்னும் கேள்வியும் தன் தாய் முன்பு நிற்கும் ஒரு காஷ்மீரி இளைஞனின் கதைதான், கனவுகளும் கற்பிதங்களும் என்னும் பெயரில் நாடகமாக்கப்பட்டிருந்தது.

Published:Updated:

மண்ட்டோ வெளிப்படத் தொடங்கியிருக்கிறார்... அதுவும் சரியான நேரத்தில்..!

எல்லாவற்றிலும் என் அடையாளத்தைத் தேடும் உங்கள் கண்களில் தெரியும் வெறிக்கு என்ன பெயர், என்னும் கேள்வியும் தன் தாய் முன்பு நிற்கும் ஒரு காஷ்மீரி இளைஞனின் கதைதான், கனவுகளும் கற்பிதங்களும் என்னும் பெயரில் நாடகமாக்கப்பட்டிருந்தது.

மண்ட்டோ வெளிப்படத் தொடங்கியிருக்கிறார்... அதுவும் சரியான நேரத்தில்..!

`கேட்டுக்கிட்டோம் சாமி... கேட்டுக்கிட்டோம்...
போட்டுக்கிட்டோம்... சூடம் காட்டிக்கிட்டோம்...
சொன்னத மீறிச் செய்யவும் மாட்டோம்...
சோத்துல உப்பையும் போட்டுக்க மாட்டோம்!'

- பாடலாசிரியர் தனிக்கொடியின் வரிகளை, த.மு.எ.க.ச (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் )-வைச் சேர்ந்த சுகந்தி பாடி முடித்தபோது அங்கு அவ்வளவு கைத்தட்டல்.

த.மு.எ.க.ச-வின் `கருத்துரிமை போற்றுதும்’ நிகழ்வில் பாடப்பட்ட இந்தப் பாடல், கருத்துச் சுதந்திரம் குறித்து போடப்பட இருக்கும் பல மீம்களுக்கு கன்டென்ட் கொடுத்தது. இந்தப் பாடலைத் தொடர்ந்து, 70 நிமிடத்துக்கு அவரைத் தெரிந்தவர்களுக்குப் பழக்கமாகிக்கொண்டும், தெரியாதவர்களுக்கு அறிமுகமாகிக்கொண்டும் இருந்தார் சாதத் ஹசன் மண்ட்டோ.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையையும், இரு நாட்டு மக்களின் அழிக்க முடியாத காயங்களையும் தாக்கங்களையும் தன் எழுத்தின் வழி ரத்தமும் கண்ணீருமாகப் பதிவுசெய்தவர் மண்ட்டோ. இவரின் புகழ்பெற்ற சிறுகதையான  `டோபா டேக் சிங்’கையும், அதன் சாரத்தை வைத்து எடுக்கப்பட்ட `கனவுகளும் கற்பிதங்களும்’ நாடகத்தையும் அரங்கேற்றியது சென்னைக் கலைக்குழு. 

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, இந்திய அரசும் பாகிஸ்தான் அரசும் மனநலமற்றவர்களை மாற்றிக்கொள்ள முடிவெடுக்கின்றன. `அரசியல் கொள்கைகளை மாற்றிக்கொண்டதுபோல், மனநலம் இல்லாதவர்களை மாற்றிக்கொண்டனர்’ எனக் குறிப்பிடுகிறார் மண்ட்டோ. பிஷன் சிங் எனும் மனச்சிதைவுக்குள்ளான முதியவர், பாகிஸ்தானில் `டோபா டேக் சிங்’ எங்கு இருக்கிறது என அறியத் துடிக்கிறார். மனதளவிலும் உடலளவிலும் தேடிக்கொண்டே இருக்கிறார். தனது கால்களிடம் பேசிக்கொள்கிறார். எங்கு என்றாலும், தன்னோடு கூடவே வரும் கால்களுக்கு மட்டுமே, டோபா டேக் சிங்குக்கு தன்னை அழைத்துப்போகும் சக்தி இருக்கிறது என நம்புகிறார். கேட்கும் யாரிடமும் விடையில்லை. 

டோபா டேக் சிங் என்பது, அமைதியான, பிரச்னையற்ற அவருக்குச் சொந்தமான நிலம் என்பதாக உருவகப்படுத்திக்கொள்ளலாம். அளந்து அளந்து நிலத்துக்கும் எவற்றுக்கும் சண்டையிடாத மக்கள்தான், டோபா டேக் சிங்கில் வசிப்பார்கள் என உருவகப்படுத்திக்கொள்ளலாம். கொஞ்சம் நாள்கள் தேடி வந்து கவனித்துக்கொண்டிருந்த அவரது குடும்பமும் இப்போதெல்லாம் வருவதில்லை. சடைமுடியோடு அந்த முதியவர், தன் கேள்விக்கான விடை கிடைக்காமல் அலைந்து திரிந்துகொண்டே இருக்கிறார். டோபா டேக் சிங் ஓர் இடம் மட்டுமல்ல, வானத்தையும் பூமியையும் அளவற்று நேசிக்கும் மனிதனுடைய நினைவு, கனவு, சுவாசம், நேசம், ஒட்டுமொத்த தேவை என்பதை உணர்த்திக்கொண்டே இருந்தது கலைக்குழு. அந்த முதியவர் ஒரு `சீக்கியர்’ என்பதால் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். இந்திய எல்லைக்கு வந்து சேர்ந்தவர், `டோபோ டேக் சிங் எங்கு இருக்கிறது?' எனக் கேட்க, `அது பாகிஸ்தானில் இருக்கிறது!’ எனப் பதில் வருகிறது. எந்தப் பக்கம் செல்வதெனத் தெரியாமல், இரண்டு தேசத்துக்கும் நடுவே, அடையாளப்படுத்தப்படாத சிறு நிலத்தில் அவரின் உயிர் பிரிகிறது. 

`தேசம் என்பது, மக்களா; நிலமா; அடையாளமா... எனக் கேள்விகளால் ஆன பலருக்கும், மகத்தான எழுத்தாளரான மண்ட்டோவுக்கு `டோபா டேக் சிங்’ முதியவரின் நிலைதான் என்பதை உணர்த்தியபடியே இருள் பூசிக்கொண்டது அரங்கம். தேசம் எது, அடையாளம் என்ன, எல்லாவற்றிலும் என் அடையாளத்தைத் தேடும் உங்கள் கண்களில் தெரியும் வெறிக்கு என்ன பெயர் என்னும் கேள்விகளும், தன் தாய் முன்பு நிற்கும் ஒரு காஷ்மீரி இளைஞனின் கதைதான், `கனவுகளும் கற்பிதங்களும்’ என்னும் பெயரில் நாடகமாக்கப்பட்டிருந்தது.                                   

கடந்த காஷ்மீர் தேர்தலின்போது ராணுவ வாகனங்கள் மீது கல்லெறிந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஃபாரூக் அகமதுவை, வாகனத்தோடு சேர்த்துக் கட்டி மனிதக் கேடயமாகப் பயன்படுத்திய நிகழ்வைச் சித்திரித்தது கலைக்குழு, `தேசம் என்பது என்ன, மக்களா; நிலமா; அடையாளமா?' என்னும் பல கேள்விகளுடன்...

உண்மைகளை கொஞ்சமும் அச்சமின்றி உடைத்துப் பேசிய மண்ட்டோ, அதிகம் வெளிப்படத் தொடங்கியிருக்கிறார். அதுவும் சரியான நேரத்தில்!