அலசல்
Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

ற்கெனவே தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்னைகள். இதுபோதாதென்று எஸ்.வி.சேகரும் ஹெச்.ராஜாவும் வேறு குறுக்கே மறுக்கே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை நாள்களாக சிரிப்பொலியாக இருந்த இவர்களின் ஸ்டேட்மென்ட்கள் இப்போது தனிநபர் தாக்குதல்களாக மாறியிருக்கின்றன. பாவம், தமிழிசைதான் இவை எல்லாவற்றுக்கும் மாய்ந்து மாய்ந்து பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். எஸ்.வி.சேகரும் ஹெச்.ராஜாவும் பேசாமல் இருப்பதற்கு என்ன வழி என்று பி.ஜே.பி நலன் கருதி யோசித்திருக்கிறோம்.

கம்பேரிஸன் கோவாலு!

• மொபைலுக்கு பில் கட்டச் சொல்லி மெசேஜ் வந்தாலும், ‘மோடி ஆட்சியின் மகிமையைப் பாரீர்’ என போஸ்ட் செய்து விடுகிறார்கள் இவர்கள் இருவரும். எனவே, இருவரின் ஏரியாக்களிலும் தமிழிசையே காசு போட்டு சிக்னல் ஜாமர்கள் வைத்துவிட்டால் நலம்.

• ஜாமர் வழி எப்போதும் பயனளிக்கும் என்று சொல்லமுடியாது. எனவே, இவர்களுக்கு ஃபார்வர்டு செய்து தொல்லை கொடுக்கத் தூண்டும் அத்தனை பேரையும் லிஸ்ட் எடுத்து, ‘‘இனிமே இப்படி அனுப்பினா, அதுக்கு தண்டனையா எஸ்.வி.சேகர் நாடகத்தை ஒருநாள் முழுக்க பார்க்கணும்’ என அறிவிக்கலாம். அதுக்கப்புறம் ஒரு மெசேஜூம் வராதே!

• மனிதர்குல மாணிக்கங்களான இவர்கள் இருவருக்கும் இத்தனை பிரச்னைகள் வரக் காரணமே, அந்த ‘இல்லாத’ அட்மின்கள்தான். அவர்களை நாடு கடத்திவிட்டால், மொத்தப் பிரச்னைகளும் முடிவுக்கு வந்துவிடும். எனவே, மோடி அடுத்த வாரம் வெளிநாடு போகும்போது கூடவே அழைத்துச் சென்று, அங்கே ஏமாற்றி விட்டுவிட்டு வந்துவிடலாம்.

• மாற்றுக் கட்சியினரை அவமதிக்கும் போக்கைக் கண்டித்து எஸ்.வி.சேகர் அந்தக் கட்சிகளில் உறுப்பினராக வேண்டும் என்று தலைமை அறிவுறுத்தலாம். ஏற்கெனவே பல கட்சிகளிலும் குத்தகைக்கு இருந்தவரென்பதால், இந்தத் தண்டனை சேகருக்கா, கட்சிகளுக்கா என்பதை முடிவு செய்தல் அவசியம்!

• எஸ்.வி.சேகரும் அவரின் வாரிசு அஸ்வினும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத லெஜண்ட்கள்! எனவே, கோலிவுட்டை பின்பற்றி சேகரையும் ராஜாவையும் மவுனப் போராட்டம் இருக்கச் செய்யலாம். குறைந்தபட்சம் ஆட்சியைப் பிடிக்கும் வரையிலோ, அதிகபட்சம் ஆயுள்காலம் முழுவதுமாகவோ... ஓ, ரெண்டும் ஒண்ணுதானே! 

ஓவியம்: பிரேம் டாவின்ஸி