நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சொந்தக் கட்டடத்தில் எம்.எம்.ஏ!

சொந்தக் கட்டடத்தில் எம்.எம்.ஏ!
பிரீமியம் ஸ்டோரி
News
சொந்தக் கட்டடத்தில் எம்.எம்.ஏ!

சொந்தக் கட்டடத்தில் எம்.எம்.ஏ!

சொந்தக் கட்டடத்தில் எம்.எம்.ஏ!

மிழக இளைஞர்களின் நிர்வாகத் திறமையை வளர்க்கும் நோக்கில் 1956-ல்   12 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசி யேஷன், இன்று 8,000 உறுப்பினர்களுடன் ஆலமரம்போல வளர்ந்து நிற்கிறது. பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த இந்த நிறுவனம், தற்போது சென்னையின் மையப்பகுதியில், அண்ணா சாலைக்கருகில் சொந்தக் கட்டடத்திற்குள் குடிபுகுந்திருக்கிறது. 

‘‘எங்கள் நிறுவனம் கடந்த பல ஆண்டு களாக துரைப்பாக்கத்தில் இயங்கி வந்தது. நாங்கள் நடத்தும் நிர்வாகத்திறன் மேம்பாட்டுக் கூட்டங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வருகிறவர் களுக்கு அது சிரமமாகவே இருந்தது.  எனவே, நகருக்குள்  சொந்தக் கட்டடத்தில்  இயங்க வேண்டுமென்பது எங்களது நீண்ட நாள் கனவு. இப்போதுதான் அந்தக் கனவு நிறைவேறியிருக்கிறது’’ என்கிறார் அந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநர், கேப்டன் விஜயகுமார். 

சொந்தக் கட்டடத்தில் எம்.எம்.ஏ!

சுமார் ஏழு கிரவுண்ட் இடத்தில்  கட்டப்பட்ட இந்தப் புதிய கட்டடத்தில், 300 பேர் அமரக்கூடிய அளவில் குளிர்சாதன வசதி யுடன்கூடிய, தரமான கருத்தரங்கு அறை உள்ளது. மேலும், 25 பேர் முதல் 100 பேர் வரை அமரக்கூடிய வகையிலான மூன்று லெக்சர் ஹால்கள் புதிய கட்டடத்தில் உள்ளன. 25 பேர் அமரக்கூடிய வகையில் நவீன் வசதியுடன்கூடிய போர்டு மீட்டிங் ஹால் ஒன்றும் உள்ளது. 

நிர்வாகம் குறித்த லேட்டஸ்ட் புத்தகங்களைப் படிக்கிறமாதிரி ஒரு நூலகத்தையும் அமைத்திருக் கிறார்கள். இந்த நூலகத்தில் கிண்டில் வசதி மற்றும் வீடியோ, ஆடியோ நூலக வசதியும் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மின் சேமிப்பைக் கணக்கில்கொண்டு, இந்தக் கட்டடம்  சூரிய மின்சக்தியால் இயங்குகிற மாதிரி உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்தப் புதிய கட்டடம் அமைந்துள்ள பகுதியை ஒட்டிக் குடிசை மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் பெண்களுக்குச் சுயதொழில் கற்றுத் தருவதுடன், பள்ளி செல்லமுடியாத குழந்தை களுக்குப் பயிற்சியும் அளிக்கிறது எம்.எம்.ஏ!                                        

 -தெ.சு.கவுதமன்,

படம் : வீ.நாகமணி