நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பிரசவ செலவுகளுக்கு பாலிசி எடுக்க முடியுமா?

பிரசவ செலவுகளுக்கு பாலிசி எடுக்க முடியுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
பிரசவ செலவுகளுக்கு பாலிசி எடுக்க முடியுமா?

கேள்வி - பதில்

பிரசவ செலவுகளுக்கு பாலிசி எடுக்க முடியுமா?

என் மனைவியின் பிரசவ செலவுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க முடியுமா?

வடிவேல், சேலம்

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

பிரசவ செலவுகளுக்கு பாலிசி எடுக்க முடியுமா?

“இன்ஷூரன்ஸ் என்பதே விபத்து அல்லது எதிர்பாராத நிகழ்வின்போது ஏற்படும் நிதி இழப்பிலிருந்து சம்பந்தப்பட்டவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ காப்பாற்ற கொண்டுவரப்பட்ட திட்டமாகும். பிரசவம் அந்த வகையில் சேராது. ஆனால், குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கூடுதல் பிரீமியம் கட்டுவதன் மூலம் பிரசவச் செலவுக்கும் கவரேஜ் கிடைக்கும். இதற்கும் காத்திருப்புக் காலம் இருக்கிறது.”

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் (Senior Citizen Saving Schemes) மூலம் கிடைக்கும் வட்டிக்குப் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள 80TTB பிரிவின் கீழ் வரிக்கழிவு கிடைக்குமா?

செந்தில்குமார், மதுரை

என்.எம்.இளங்குமரன், ஆடிட்டர்

பிரசவ செலவுகளுக்கு பாலிசி எடுக்க முடியுமா?

“மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கும் 80TTB பிரிவுக்கும் தொடர்பு இல்லை. ஏற்கெனவே, இருந்த 80 TTA பிரிவில் சீனியர் சிட்டிசன் மட்டுமல்லாமல் அனைவரின் வங்கிச் சேமிப்பு மூலம் கிடைக்கும் வட்டிக்கும்  நிதியாண்டுக்கு ரூ.10,000 வரைக்கும் வரிக்கழிவு உண்டு. கடந்த ஏப்ரல் 1, 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 80 TTB பிரிவில், சீனியர் சிட்டிசன்களுக்கு மட்டும் அவர்களின் சேமிப்பு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு ரூ.50,000 வரை வரிக்கழிவு உண்டு. 80TTB பிரிவின்கீழ் வரிக்கழிவுக்கு விண்ணப்பித்தவர்கள், 80TTA பிரிவின் கீழ் விண்ணப்பிக்க முடியாது. நீங்கள் கேட்டுள்ள மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிப் பிரிவு 80சி-யின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கும். இந்த முதலீடு மூலமான வட்டிக்கு வருமான வரம்புக்கேற்ப வரிச் செலுத்த வேண்டி வரும்.”

என் வயது 30. எஸ்.ஐ.பி முறையில்  பிரின்சிபல் பேலன்ஸ்டு ஃபண்ட்- ரூ.4,000, மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் 35 ஃபண்ட்-  ரூ.3,000, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட்-  ரூ.4,000 என 20 ஆண்டுகள் முதலீடு செய்தால் ரூ.5 கோடி வருமானம் கிடைக்குமா? 

ராஜேஷ், காரைக்குடி

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

பிரசவ செலவுகளுக்கு பாலிசி எடுக்க முடியுமா?

‘‘உங்கள் முதலீட்டுத் தேர்வில்  ஒரு மாற்றத்தை மட்டும் பரிந்துரைக்கிறேன். ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டிற்குப் பதிலாக, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிடீஸ் ஃபண்டினைத் தேர்வு செய்யவும். நீங்கள் முதலீடு செய்யும் மாத தவணையான ரூ.11,000, இருபது வருட கால இடைவெளியில், சுமார் 1.5 கோடியாகப் பெருக வாய்ப்பிருக்கிறது. உங்கள் முதலீட்டைப் படிப்படியாக அதிகரித்தால், அதிகத் தொகையைச் சேர்க்கலாம்.’’ 

சொத்து விற்றதில் நீண்ட கால மூலதன ஆதாயமாக தலா ரூ.32 லட்சம் எனக்கும், என் மனைவிக்கும் கிடைத்தது. வருமான வரியை மிச்சப்படுத்த அதனை என்.ஹெச்.ஏ.ஐ / ஆர்.இ.சி பாண்டில் முதலீடு செய்தால், எவ்வளவு காலம் அந்த முதலீட்டைத் தொடர வேண்டும், இதற்கு மாற்றான பாண்டுகள் இருக்கிறதா?

நெடுஞ்செழியன், கோயமுத்தூர்


எஸ்.பாலாஜி, ஆடிட்டர்

பிரசவ செலவுகளுக்கு பாலிசி எடுக்க முடியுமா?

‘‘நேஷனல் ஹைவே அத்தாரிட்டி ஆஃப் இந்தியா(என்.ஹெச்.ஏ.ஐ), ரூரல் எலெக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன்(ஆர்.இ.சி) இந்த இரண்டு பாண்டுகளில் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஒருவர் அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். நீங்கள் 32 லட்சம்தான் முதலீடு செய்யவிருப்பதால், இதில் சிக்கல் வராது. இந்த பாண்டுகளுக்கு ஐந்தாண்டுகள் லாக் இன் பீரியட். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டிற்கு எடுக்க முடியாது. கடந்த பட்ஜெட்டுக்கு முன்புவரை இந்த லாக் இன் பீரியட் மூன்றாண்டுகள் என்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரு பாண்டுகளைத் தவிர, மாற்று பாண்டுகள் கிடையாது. இதில் 5 - 5.5%  வட்டி கிடைக்க வாய்ப்புள்ளது. வட்டிக்கு வரி உண்டு.’’

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.