நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சுற்றுலா வர்த்தகம்... பிரமிக்க வைக்கும் துபாய்!

சுற்றுலா வர்த்தகம்... பிரமிக்க வைக்கும் துபாய்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுற்றுலா வர்த்தகம்... பிரமிக்க வைக்கும் துபாய்!

சுற்றுலா வர்த்தகம்... பிரமிக்க வைக்கும் துபாய்!

வெளிநாட்டுச் சுற்றுலா என்றால், இன்றைக்குப் பலருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது துபாய். துபாய்க்குச் சுற்றுலாவுக்காக வரும் பயணிகளில் இந்தியாவுக்குத்தான் முதலிடம். உலக அளவில் மேற்கு ஐரோப்பியர்கள் மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் துபாய்க்கு அதிக அளவில் வருகின்றனர் என்கிறார்கள் துபாய் சுற்றுலா அமைச்சக அதிகாரிகள்.   

சுற்றுலா வர்த்தகம்... பிரமிக்க வைக்கும் துபாய்!

துபாய் அரசு வருகிற 2020-ம் ஆண்டு சுற்றுலாக் கண்காட்சியை நடத்தவுள்ளது. இதற்காக உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்திவரும் துபாய் அரசாங்கம், அடுத்த இரண்டாண்டுகளில்  சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை இரண்டு கோடியாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

இந்தச் சுற்றுலாக் கண்காட்சி தொடர்பாக துபாய் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி எடுத்துச்சொல்ல, உலகம் முழுக்க உள்ள பத்திரிகையாளர்கள் துபாய்க்கு அழைக்கப் பட்டிருந்தனர். இந்தக் குழுவில் நாமும் செல்ல, துபாயைப் பார்த்து அதிசயித்துப் போனோம்.

பாலைவனத்தில் பயணம் செய்பவர்களுக்கான வசதிகள், பனி விளையாட்டுகள் நிறைந்த ஸ்கீ (Ski)  துபாய், மார்வெல், டிசி என சூப்பர் ஹீரோ பிரியர்களுக்கான அட்வென்ச்சர் விளையாட்டு களுடன்கூடிய ஐ.எம்.ஜி வேர்ல்டு ஆஃப் அட்வென்ச்சர்ஸ் ஆகியவை வித்தியாசமான சுற்றுலா அனுபவங்களுக்கானவை. மால் ஆஃப் எமிரேட்ஸ், துபாய் மால் ஆகியவை இந்தியர்கள் மற்றும் அதிக வெளிநாட்டுப் பயணிகளின் ஷாப்பிங் இடங்களில் முக்கியமானதாக உள்ளன. 
 
பாலிவுட் தீம் பார்க்குகள் இந்தியர்களை கவரும்விதமாக அமைந்திருக்கின்றன. பாலிவுட் கதாபாத்திரங்களை மையப்படுத்தி அமைக்கப் பட்டுள்ள 3டி, 4டி ஷோக்களும், ரைடுகளும்  திரைப்படத்தின் களத்துக்குள்ளேயே நம்மை அழைத்துச் செல்கிறது. க்ரிஷ் 4டி ரைடில் நமது இருக்கை 90 டிகிரி சாய்ந்து திரைக்குள் நம்மை இழுத்துச் செல்லும். மாடியிலிருந்து கீழே விழும் உணர்வை நம்மால் அப்படியே உணர முடியும். அடுத்த நொடியே க்ரிஷ், தனது சக்தியால் நம்மை மேலே இழுப்பதையும் உணரவைக்கும்.
 
லீகோ லாண்ட், கார்டூன் நெட்வொர்க், அவெஞ்சர்கள், மடகாஸ்டர் என ரோலர்கோஸ் டரில் ஏற்றித் திகிலூட்டும் அட்வென்ச்சர்களை கண்முன்னே நிறுத்துகின்றன. தீம் பார்க்குகளில் அதிகம் வியக்கவைத்த ஷோ எது என்றதற்கு அங்கு வந்த சுற்றுலாப்பயணிகள் அனைவரிடத் திலும் ஒரே பதிலாக வந்தது மடகாஸ்டர் மற்றும் ரோலர்கோஸ்டர் ரைடுகள்தான். வேகம், திகில் என எல்லாவற்றிலும் வியக்க வைத்தது என்று சொல்கிறார்கள் அவர்கள். குழந்தைகளைக் கவரும் அத்தனை விஷயங்களும் பார்த்துப் பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளதுதான் சிறப்பு. 

சுற்றுலா வர்த்தகம்... பிரமிக்க வைக்கும் துபாய்!
சுற்றுலா வர்த்தகம்... பிரமிக்க வைக்கும் துபாய்!

ஐ.எம்.ஜி வேர்ல்டு ஆஃப் அட்வென்ச்சர் ஒரு இன்டோர் தீம் பார்க். நீங்கள் மார்வெல் ரசிகராக இருந்தால், இந்த தீம் பார்க் உங்களுக்குச் சொர்க்கம். மார்வெல் ஸ்டூடியோஸின் உங்களது ஃபேவரைட் கதாபாத்திரத்தோடு நீங்கள் பயணிக்கும் வாய்ப்பு இந்த தீம் பார்க்கில் காத்திருக்கும். தோர், ஸ்பைடர் மேன், ஹல்க், ப்ளாக் பந்தர், கேப்டன் அமெரிக்கா என சூப்பர் ஹீரோக்கள் மற்றும் பென் டென் போன்ற சுட்டி ஹீரோக்களின் உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறார்கள். 

டெல்லியிலிருந்து சுற்றுலா வந்திருந்த பயணி ஒருவரின் அனுபவம் சுவாரஸ்யமானது. ‘‘மார்வெல் ஹீரோக்களின் மிகப் பெரிய ரசிகை நான். இங்கு உள்ள எல்லா ரைடுகளையும் சுற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்தேன். இவை அனைத்துமே உங்களை சூப்பர் ஹீரோ உலகுக்குள் இழுத்துச் செல்பவையாக உள்ளது’’ என்றார்.

உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் 148-வது தளம் வரை லிஃப்டில் செல்வதே ஒரு தனி அனுபவம். தரையிலிருந்து 148-வது தளத்துக்கு 75 நொடிகளில் லிஃப்ட் இயங்குகிறது. மேலே சென்றதும் துபாயின் மொத்த அழகும் கண்முன்னே தெரிவது ஆச்சர்யத்தின் உச்சம்.

“2017-ம் ஆண்டு 31 லட்சம் சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு வந்துசென்றுள்ளனர். 2018-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் துபாய்க்கு 30.5 லட்சம் பயணிகள் வந்துள்ளனர். இதில் இந்தியர்கள் மட்டும் சுமார் 4.25 லட்சம் பேர். இது, சென்ற ஆண்டைவிட 10% அதிகம்” என்கின்றனர் துபாய் டூரிஸம் அண்டு கமர்ஷியல் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரிகள்.

ஆண்டுக்கு நான்கு மடங்கு வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ள துபாய் சுற்றுலா வர்த்தகம், தற்போது சுற்றுலாப் பயணிகளுக்காக நான்கு பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை மேற்கொள்கிறது. 2020-ம் ஆண்டு எக்ஸ்போவின் போது உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத்தளம் துபாய் என்பதை இலக்காகக் கொண்டு செயல் படும் துபாயின் சுற்றுலாக் கட்டணங்கள் தனி நபருக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தச் செலவில் 10% குறைந்துள்ளது.

துபாயில் ஒருவர் ஒரு வாரம் சுற்றுலா செல்ல ரூ.40 ஆயிரத்திலிருந்து டூர் பேக்கேஜ்கள் இந்தியா விலிருந்து இயக்கப்படுகின்றன. ஒருவர் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல குறைந்தபட்சம்  ரூ.1.5 லட்சத்திலிருந்து டூர் பேக்கேஜ்கள் உள்ளன.

மறக்கமுடியாத அனுபவங்களைத் தரும் துபாய்க்கு நீங்களும் ஜாலியாகப் போய்வரலாமே! 

- ச.ஸ்ரீராம்