
புடவை பரிசுப் போட்டி-3
மதிப்புக்குரிய வாசகியரே!
உங்களுக்காகவே இந்தச் சிறப்புப் போட்டி!
இங்கே இடம்பெற்றிருக்கும் பாடல், ஆன்மிகச் சொற்பொழிவாளரும் எழுத்தாளருமான திருப்புகழ் திலகம் மதிவண்ணன் எழுதியது. தமிழரின் தனித் தெய்வமாம் முருகனைப் போற்றுவதுடன், தமிழின் சிறப்பான ‘ழ’கரத்துக்குச் சிறப்பு சேர்க்கும் துதிப்பாடல் இது.
பாடலை முழுவதுமாகப் படித்து மகிழுங்கள். இந்தப் பாடலில் ழ, ழி, ழு, ழை என்று `ழ’கர அடிப்படை யிலான எழுத்துகள் எத்தனை இடம்பெற்றுள்ளன என்பதைக் கண்டறிந்து, அந்த எண்ணிக்கையைக் கீழ்க்காணும் கட்டத்தில் பூர்த்தி செய்யவேண்டும்.
அழகொழுகும் அறுமுகமும்
தழல் திகழும் எழில் அயிலும்
விழையநட மிடுமயிலும் புகழாதே
அழுதுழலும் விழலனிவன்
பழையவினை முழுதும்அற
அருள் கமழும் திருவடிகள் தருவாயே
நிழலில்வளர் தெய்வானை
தழையில்வளர் குறமாது
பழகிவளர் திருமுருக உனைநாளும்
மொழிகுழற மனம்நெகிழ
கழலடியில் முழுமைபெற
முனிவன்என புனிதம்எழ அருளாயே
குழையணிகள் செவ்குழைய
முழுதுமொளிர் உடைதழைய
மழலையென தவழவரு எழிலோனே
எழுபிறவி சுழியில் அழி
பழியனையும் பனிருவிழி
இழிமழையில் முழுகவரம் பொழிவாயே
பொழிலழகும் வயலழகும்
மதிலழகும் திகழ வழி
பொலிவுபெறு பழநி மலை விழைவோனே
பொதியமலை முனி அருண
கிரி மகிழ இனியதமிழ்
பொழியும்முழு உலகுதொழு பெருமாளே!

விடையை இங்குள்ள கட்டத்தில் பூர்த்தி செய்வதுடன், முருகனின் மகிமை குறித்த தகவல்களில் ஒன்றை ஓரிரு வரிகளில் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். (ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம்). சரியான விடையுடன், கச்சிதமான தகவலை அனுப்பும் பத்து வாசகியருக்கு, சிறப்புப் புடவைப் பரிசு காத்திருக்கிறது.
விடைகள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி: 15.5.18. விடைகளைச் சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.
`புடவை பரிசுப்போட்டி- 3’ - சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002
புடவை பரிசுப் போட்டி-2
விடைகள்:
பக்க எண்கள்: 48, 37, 22, 63, 69
வெற்றி பெற்றவர்கள்
1. என்.கல்யாணி, ஈரோடு
2. எம்.உமாரானி, திண்டுக்கல்
3. கவிதா சரவணன், ஶ்ரீரங்கம்
4. சி.மணிமேகலை, காட்பாடி
5. கா.தேன்மொழி, குடியாத்தம்
6. பி.ஜெயரம்யா, கோவை
7. மா.தேவிகா, சேலம்
8. ஜி.ப.காஞ்சனா, மதுரை
9. எஸ்.கார்த்திகை செல்வி, விருதுநகர்
10. சாவித்திரி ஹரிஹரன், சென்னை