
மே 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

மேஷம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். முன்கோபம் விலகும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள்களாகப் போக நினைத்திருந்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை மீட்டெடுப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களுடன் இருந்த ஈகோ பிரச்னைகள் விலகும்.
பிரச்னைகள் தீர்வதுடன் பணப்புழக்கமும் அதிகரிக்கும்.
ரிஷபம்: பழைய சொந்த பந்தங்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்தில் தங்களுக்குச் சேர

வேண்டிய பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் பேசும்போது கவனம் தேவை.
வியாபாரத்தில் வேலையாட்கள் மற்றும் பங்குதாரர்களின் நிறைகுறைகளைக் கனிவுடன் சுட்டிக்காட்டுவீர்கள்.
உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை
வந்து நீங்கும்.
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் தருணமிது.

மிதுனம்: அழகு, இளமை கூடும். ஓரளவு பணவரவு உண்டு. பல விஷயங்களையும் போராடியே முடிக்க வேண்டிவரும். பழைய பிரச்னைகள் தலைதூக்கும். சகோதரர்கள் வகையில் சங்கடங்கள் வந்து போகும். மின்பொருள்களைக் கவனமாகக் கையாளுங்கள்.
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள்.
உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால், திறன்படச் செய்து முடித்துத் தலைமையின் பாராட்டைப் பெறுவீர்கள்.
புதிய திட்டங்கள் நிறைவேறும் வேளையிது.
கடகம்: அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளுமளவுக்குப் பணம் வரும். குடும்பத்தில்

அமைதி திரும்பும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சொத்து சேரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது.
வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து உதவுவார்கள்.
எதிர்பாராத திடீர்த் திருப்பங்கள் நிகழும்.

சிம்மம்: நிர்வாகத் திறமை கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடிவரும். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். சகோதரர் வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். முக்கிய வேலைகளை விரைந்து முடிப்பது நல்லது.
வியாபாரச் சூட்சுமங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள், அலுவலக விஷயங்கள் பற்றி யாரிடமும் விமர்சனம் செய்ய வேண்டாம்.
ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரமிது.
கன்னி: பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக

இருப்பார்கள். வெளியூர்ப் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். எதையும் முறையாகத் திட்டமிட்டுக்கொண்டு செயல்படுவது நல்லது.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு புதிய முதலீடுகள் செய்வீர்கள்.
உத்தியோகத்தில் உங்கள் பணியைச் சிறப்பாகச் செய்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.
வி.ஐ.பி-க்களால் பாராட்டப்படுவீர்கள்.

துலாம்: இதுநாள் வரை இருந்த மனப்போராட்டங்கள் விலகும். சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர் களுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள்.
உத்தியோகத்தில் உங்களுக்கான வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது.
தன் கையே தனக்கு உதவி என்பதை உணர்வீர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். நட்பு வட்டம்

விரியும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் வீட்டுக்கு வருகை தருவார்கள். அப்படி வரும்போது அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்து மகிழ்வீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கேற்ற பொருள்களில் முதலீடு செய்வீர்கள்.
உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களின் வேலை களைப் பகிர்ந்துகொண்டு சூழலை எளிதாக்குவார்கள்.
தடைகள் பல வந்தாலும் வெற்றி உங்களுக்கே.

தனுசு: உறவினர் வழியில் நல்ல செய்திகள் வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசு வகையில் சில சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். வீடு, சொத்து விஷயங்களில் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாத நிலை தொடரும்.
வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். புதிய முதலீடுகளுக்குத் திட்டமிடுவீர்கள்.
உத்தியோகத்தில் அலுவலகப் பணிகள் காரணமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும்.
செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாக இருக்க வேண்டிய நேரமிது.
மகரம்: விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். புதிய

இடங்களில் சிலருக்குப் பணிச்சூழல் அமையும். கணவரின் உடல் நலனில் கவனமாக இருங்கள். யாரிடம் பேசும் போதும் முன்னெச்சரிக்கையுடன் பேசுவது நல்லது.
வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். வேலையாட்கள் உற்சாகமாகப் பணி புரிவார்கள்.
உத்தியோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்கும். உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள்.
சத்தமில்லாமல் சாதிக்கத் தொடங்குவீர்கள்.

கும்பம்: உங்கள் செயலில் உத்வேகம் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். பிள்ளைகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உறவினர்களால் பக்கபலமாக இருப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
வியாபாரத்தில் அதிரடியான சலுகைகள் மூலம் போட்டிகளை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை நிரூபிக்க நல்ல வாய்ப்புகள் வரும்.
உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும்.
மீனம்: அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வழக்கில் சாதகமான

தீர்ப்பு வரும். பழைய கடன் தீர பண உதவிகள் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் அடங்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாகப் பணியாற்றுவது நல்லது.
உங்கள் திறமைகள் யாவும் வெளிப்படும் தருணமிது.