மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

மே 29-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதி வரை `ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

 மேஷம்  எதிர்பாராத பண வரவு உண்டு. வீடு, மனை வாங்குவீர்கள். புதிய வேலை கிடைக்கும்.

ராசிபலன்

அயல்நாட்டுப் பயணம் அமையும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். விலகிச் சென்ற சொந்தங்கள் தேடி வந்து உதவுவார்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.

வியாபாரம்: பெரிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்வதன் மூலம் புகழ்பெறுவீர்கள்.

உத்தியோகம்: சவாலான பணிகளையும் சாதாரண மாக முடிப்பீர்கள்.

உங்களின் நீண்ட நாள் கனவு ஒன்று நனவாகும்.

 ரிஷபம்  உங்களின் திறமை அதிகரிக்கும். பழைய நகைகளைக் கொடுத்து நவீன டிசைனில் நகை

ராசிபலன்

வாங்குவீர்கள். மனோபலம் அதிகரிக்கும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். வீடு மாற்றம், இட மாற்றம் ஒரு சிலருக்குத் தவிர்க்க முடியாமல் போகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

வியாபாரம்: விற்பனையாகாமல் இருந்த சரக்குகள் யாவும் இப்போது விற்றுத் தீரும்.

உத்தியோகம்: உங்கள் மதிப்பு உயரும். கௌரவப் பதவி தேடி வரும்.

சாதுர்யமான பேச்சால் எதையும் சாதிப்பீர்கள்.

 மிதுனம்  சோர்வு நீங்கி, துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.

ராசிபலன்

உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உறவினர்களுடன் பழகும்போது கவனமாகப் பேசுங்கள். பூர்வீகச் சொத்துகள் கைக்கு வரும். வீட்டுக்குத் தேவையான அடிப்படை சாதனங்கள் வாங்குவீர்கள். யாருக்காகவும் பண விஷயத்தில் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரம்: பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.

உத்தியோகம்: சக ஊழியர்களுடன் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

உங்களின் அனுபவ அறிவு பலன் தரும்.

 கடகம்  சவாலில் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். பொறுப்புகள்

ராசிபலன்

தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சகோதரர்கள் உதவிக்கு வருவார்கள். கணவன் மனைவி உறவு பலப்படும்

வியாபாரம்: பணியாளர்களிடம் கனிவு காட்டி வேலை வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

உத்தியோகம்: பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

எதிர்பார்க்காத திடீர்த் திருப்பம் நிகழும்.

 சிம்மம்  உங்கள் செயலில் வேகம் கூடும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சுப

ராசிபலன்

நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வெளியூர்ப் பயணங்கள் மகிழ்ச்சி தரும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். யாருக்காகவும் பண விஷயத்தில் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரம்: அதிரடியான முடிவுகளால் லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகம்: சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.

புரட்சிகரமான முடிவுகள் எடுப்பீர்கள்.

 கன்னி  எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உங்கள் ரசனைக் கேற்ற வீடு, மனை அமைவதுடன்

ராசிபலன்

வங்கிக் கடனும் கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீட்டு விசேஷங்களைத் திறம்பட எடுத்து நடத்துவீர்கள். வீண் டென்ஷன், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

வியாபாரம்: போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது.

உத்தியோகம்: அதிக பணிச் சுமையிருந்தாலும் செல்வாக்கு உயரும்.

இதுவரை இருந்த தடைகள் யாவும் அகலும்.

 துலாம்  அனுபவ அறிவால் முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே சென்று நல்வழிப்படுத்துவீர்கள். செலவுகளைப் போராடி சமாளிப்பீர்கள். கணவரின் உடல்

ராசிபலன்

நலனில் கவனமாக இருங்கள். யாரிடம் பேசும் போதும் முன்னெச்சரிக்கையுடன் பேசுவது நல்லது.

வியாபாரம்: பங்குதாரர்கள் நீங்கள் சொல்வதை மதித்து நடந்துகொள்வார்கள்.

உத்தியோகம்: புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். துணிச்சலாக முடிவெடுத்து வெற்றி பெறுவீர்கள்.

உங்களின் உள்ளார்ந்த திறமைகள் பளிச்சிடும் நேரமிது.

 விருச்சிகம்  எதிர்காலம் குறித்த யோசனைகள் பிறக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, வாகன வசதிகள்

ராசிபலன்

பெருகும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளை அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்திலும் பாடப்பிரிவிலும் சேர்ப்பீர்கள். 

வியாபாரம்: பழைய கடன்களை வசூலிப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

உத்தியோகம்: பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உங்கள் பணிச்சுமையைக் குறைக்க உதவுவார்கள்.

பிரச்னைகளைச் சுலபமாகத் தீர்ப்பீர்கள்.

 தனுசு  விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரிய

ராசிபலன்

பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. உறவினர்கள், நண்பர்களிடம் நிதானித்துப் பேசுவது, செயல்படுவது நல்லது.

வியாபாரம்: பங்குதாரர்களிடம் கனிவாகப் பேசிக் காரியங்களை முடிப்பது நல்லது.

உத்தியோகம்: அதிகாரிகள் உங்கள் ஆலோசனை களை மதித்து அதற்கேற்ப செயல்திட்டம் வகுப்பார்கள்.

எதிர்பார்ப்புகளில் சில இப்போது நிறைவேறும்.

ராசிபலன்

 மகரம்  இல்லத்தில் அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பாதியில் நின்ற பணிகளைத் தொடங்குவீர்கள். உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். உறவினர்கள், நண்பர்களுடன் பேசும்போதும் கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரம்: அனுபவ அறிவால் நஷ்டங்களைச் சரிசெய்வீர்கள்.

உத்தியோகம்: திறமைகள் வெளிப்படும். சம்பள நிலுவைத் தொகை கைக்கு வரும்.

புதிய பாதையில் பயணத்தைத் தொடங்குவீர்கள்.

 கும்பம்  சவாலான விஷயங்களைச் சாமர்த்திய மாகப் பேசி முடிப்பீர்கள். பிரபலங்களின் அறிமுகம்

ராசிபலன்

கிடைக்கும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பட்ஜெட்டில் வீடு, மனை அமையும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்தி அத்தியாவசியச் செலவுகளில் கவனம் செலுத்துங்கள்.

வியாபாரம்: தேங்கிக் கிடந்த சரக்குகளை ஓரளவு நல்ல லாபத்தில் விற்றுத் தீர்ப்பீர்கள்.

உத்தியோகம்: வேலைச்சுமை குறையும். எதிர்ப்புகள் அடங்கும்.

முன்யோசனையுடன் செயல்பட்டுச் சாதிப்பீர்கள்.

ராசிபலன்

மீனம்  மனதில் புதிய உற்சாகமும் தெம்பும் பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். உறவினர்கள் ஒன்றுபடுவார்கள். சிலர் வீடு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். அவ்வப்போது அலைச்சலும் டென்ஷனும் இருக்கும். செலவுகள் அதிகமாகும். ஆனாலும், பணம் பலவழிகளில் வரும்.

வியாபாரம்: லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகம்: வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து வாய்ப்புகள் வரும்.

எதிலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரமிது.