தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

இப்படிக்கு...

இப்படிக்கு...
பிரீமியம் ஸ்டோரி
News
இப்படிக்கு...

இப்படிக்கு...

ஆன்மிகப் பொக்கிஷம்!

இப்படிக்கு...

`நடராஜ அற்புதங்கள்’ தகவல் ஒவ்வொன்றும் மிக அருமை; தற்கால சந்ததிகள் அறியவேண்டிய ஆன்மிகப் பொக்கிஷம். கோனேரிராஜபுரம் நடராஜரின் மகிமையைப் படித்துச் சிலிர்த்தோம்.

- கே.கல்பனா, திருச்சி-3

பிறைசூடிய பெருமானின் திருவுருவைத் தாங்கிவந்த அட்டைப் படம் கொள்ளை அழகு. `ஒரு சிற்பியும் ஐந்து விக்கிரகங்களும்’ நடராஜ சிற்பங்கள் குறித்த தகவல்கள், பயனுள்ளவை.

- பி.ராமமூர்த்தி, கழுகுமலை

`தன்னம்பிக்கையா... இறை நம்பிக்கையா’ எனும் கேள்விக்கு சண்முக சிவாசார்யர் அளித்த பதில் அற்புதம். ஆன்மிகச் சந்தேகங் களுக்கு எளிய விளக்கங்களுடன் திகழ்கிறது `கேள்வி - பதில்’ பகுதி.

- கோ.ராமநாதன், திருநெல்வேலி-2

ண் மணக்கும் தகவல்களோடு கிராமிய தெய்வங்களின் கதையை மிக அற்புதமாக விவரிக்கிறது, `மண்... மக்கள்... தெய்வங்கள்!’ தொடர். பாராட்டுகள்.

- சங்கரிகிருஷ்ணன், முசிறி

ண்ணாயிரம் நரசிம்மர் ஆலயம் குறித்த தகவல்கள் இதுவரை நாங்கள் அறிந்திராதது. அடுத்த முறை விழுப்புரம் செல்லும்போது அவசியம் இந்தத் தலத்துக்குச் சென்றுவர திட்டமிட்டுள்ளோம்.

- கா.வேலப்பன், சென்னை-44

`அழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்!’ இணைப்பிதழ் தொகுப்பு மிக அருமை; வாசகர்களுக்கு வழிகாட்டியாகப் பயன் படும். அதேபோல், சிலிர்க்கவும் சிந்திக்கவும் வைக்கிறது `மகா பெரியவா’ தொடர்.

- கி.முருகேசன், பெரியதாழை