
ஜூன் 26-ம் தேதி முதல் ஜூலை 9-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
மேஷம்

மனோபலம் கூடும். தெளிவாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வார்கள். கணவர் உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருப்பதால் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
அலுவலகத்தில் பதவி உயர்வுடன் இட மாற்றம் உண்டு.
அதிரடியாக நல்ல நல்ல மாற்றங்கள் நிகழும்.
ரிஷபம்

தைரியம் கூடும். பிள்ளைகளின் எதிர்கால முயற்சிகள் வெற்றியுடன் முடியும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவரின் போக்கில் நல்ல மாற்றமும் பதவியில் முன்னேற்றமும் உண்டாகும். அதிகம் விவாதிக்க வேண்டாம். அக்கம்பக்கம் வீட்டாரைப் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த பொருள்களை யெல்லாம் விற்றுத் தீர்ப்பீர்கள்.
அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றிபெறுவீர்கள்.
மிதுனம்

தோற்றப்பொலிவு கூடும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்பார்கள். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். கணவரை வீண் சந்தேகம் கொண்டு தொந்தரவு செய்யாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.
வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். ஆனாலும், சமாளித்து முன்னேறுவீர்கள்.
அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டியிருக்கும்.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
கடகம்

சுபச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும். விலகிச்சென்றவர்கள் வலியவந்து பேசுவார்கள். வீடு, வாகன வசதிகள் பெருகும். பிள்ளைகளின் திறமைக்கு மதிப்பளிப்பீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருந்துகொண்டே இருக்கும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக் கேற்ப நடந்து லாபத்தைப் பெருக்குவீர்கள்.
அலுவலகத்தில் உங்களின் உழைப்புக்குப் பாராட்டு கிடைக்கும்.
சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.
சிம்மம்
சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர் உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வார். வருமானம் உயரும்.

செயல்களில் புத்திசாலித்தனம் வெளிப்படும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். அரசு வகையில் அனுகூலமான செய்தி வரும். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு நல்வழிப்படுத்துவது நல்லது.
வியாபாரத்தில் அயல்நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள்.
அலுவலகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.
நீண்டநாள் கனவுகள் நிறைவேறும்.
கன்னி

செய்யும் செயல்கள் யாவற்றிலும் வெற்றிபெறுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். கணவரின் குறைநிறைகளைப் பக்குவமாகச் சுட்டிக் காட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். யாருக்காகவும் ஜாமீன் கையொப்பமோ, சாட்சிக் கையொப்பமோ போட வேண்டாம்.
வியாபாரத்தில் பெருக்க வங்கிக்கடன் உதவி கிடைக்கும்.
அலுவலகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள்.
சாதனை படைக்கும் நேரமிது.
துலாம்

சமூகத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களின் புதிய சிந்தனைக்கு வடிவம் கொடுப்பீர்கள். கணவரின் அன்புப்பரிசு ஒன்றைப் பெறுவீர்கள். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்துகொள்வார்கள். உறவினர்கள், தோழிகளின் பாசமான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள்.
வியாபாரத்தில் போட்டிகளை மீறி லாபம் வரும்.
அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும், அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள்.
சமயோசிதச் செயலால் சாதிக்கும் நேரமிது.
விருச்சிகம்

மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். பெரிய பதவிக்குத் தேர்ந் தெடுக்கப்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவர் உங்கள் மனம்கோணாமல் நடந்துகொள்வார். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். வெளியூர்ப் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.
வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.
உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்.
அநாவசியச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு
நீண்ட நாள்கள் இருந்த மனப் போராட்டங்கள் குறைந்து உற்சாகம் பிறக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும்

அந்தஸ்தும் உயரும். ஒதுங்கி நின்ற உடன் பிறந்தவர்கள் இனி தேடி வருவார்கள். பணம் பல வழிகளில் வந்தாலும் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் இருக்கும்.
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும்.
அலுவலகச் சூழ்நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு மன அமைதி திரும்பும்.
சகிப்புத்தன்மையுடன் முன்னேற வேண்டிய நேரமிது.
மகரம்

மனதில் புதுத் திட்டங்கள் உதிக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் எதிர் காலத்துக்குத் திட்டமிடுவீர்கள். வீண் செலவுகள் அதிகமாகும். துணை சில நேரங்களில் கடுகடுத்தாலும் நீங்கள் கனிவாகப் பேசுவது நல்லது.
வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்து லாபம் அடைவீர்கள்.
அலுவலகத்தில் வேலைச் சுமையுடன் செல்வாக்கும் உயரும்.
விட்டுக்கொடுத்து முன்னேறும் நேரமிது.
கும்பம்
மனதில் தைரியமும் உற்சாகமும் பிறக்கும். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த பந்தங்கள் வீடு

தேடி வருவார்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங் களைத் திணிக்க வேண்டாம்.
வியாபாரத்தில் சலுகைகளை அறிவித்து வாடிக்கை யாளர்களைக் கவர்வீர்கள்.
உத்தியோகத்தில் நவீனத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.
உங்களின் போட்டியாளர்களை வீழ்த்தி, செல் வாக்குப் பெறுவீர்கள்.
மீனம்

பணத்தட்டுப்பாடு வரும் என்றாலும், சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். மகனை விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வாகனம் பழுது வந்து நீங்கும். கணவன் வழி உறவினர் அன்போடு இருப்பார்கள். ஓய்வில்லாத வேலைகளால் உடல் நலனில் அக்கறையில்லாமல் இருந்துவிடாதீர்கள். எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது.
வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள்.
உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.
சவால்களில் வெற்றியடைந்து முன்னேறுவீர்கள்.