தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

வீட்டுக்குள் சிரிக்கும் இண்டோர் ப்ளான்ட்ஸ்!

வீட்டுக்குள் சிரிக்கும் இண்டோர் ப்ளான்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக்குள் சிரிக்கும் இண்டோர் ப்ளான்ட்ஸ்!

க்ரீன் ஷாப்பிங்சு.சூர்யா கோமதி, படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

னிவீடும் தோட்டமும் பலரது கனவு. இன்றைய அப்பார்ட்மென்ட் வாழ்க்கையிலோ, பால்கனி தொட்டிகளில்தான் பசுமையைப் பார்க்க முடியும் என்கிற நிலை. இருப்பினும், இன்னுமொரு வாய்ப்பாகக் கிடைக்கின்றன ‘இண்டோர் ப்ளான்ட்’ என்று அழைக்கப்படும், வீட்டுக்குள்ளேயே வளர்க்கக்கூடிய அலங்காரச் செடி வகைகள். அதை விரும்புபவர்களுக்கான ஒரு விண்டோ ஷாப்பிங் இதோ...

வீட்டுக்குள் சிரிக்கும் இண்டோர் ப்ளான்ட்ஸ்!
வீட்டுக்குள் சிரிக்கும் இண்டோர் ப்ளான்ட்ஸ்!
வீட்டுக்குள் சிரிக்கும் இண்டோர் ப்ளான்ட்ஸ்!

அலங்காரச் செடிகள்... டிப்ஸ்!

* அலங்காரச் செடிகள் நர்சரி பண்ணைகளில் விதவிதமாகக் கிடைக்கின்றன. உங்கள் வீட்டின், ஊரின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப வளரும் செடி வகைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கவும். அத்துடன், அந்தச் செடிகள் வளர்ப்புக்கு உகந்த மண் ரகம் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளவும்.

*   வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளுக்கு, அதன் இலைகளில் உள்ள தூசியை நீக்கத் தேவையான அளவுக்குத் தண்ணீரை ஸ்பிரே செய்தால் போதும்.

*   வாரம் ஒருமுறை மிதமான சூரிய ஒளி படுமாறு பால்கனியிலோ, வீட்டின் வெளியிலோ, மொட்டை மாடியிலோ செடியை வைத்து எடுக்கவும்.

*   சூரிய ஒளியில் வைப்பதற்கு முன் செடியின் அடி மண்ணைக் கிளறிக் கொத்திவிட வேண்டும்.

*   தண்டுச் செடிகளாக இருந்தால், தண்டின் அடிப்பாகத்தில் மட்டுமே தண்ணீர்விட வேண்டும்.

*   பூச்சிகள் தாக்காமல் இருக்க வேப்பெண் ணெயை ஸ்பிரே செய்யலாம். இது வீட்டினுள் கிருமிநாசினியாகவும் செயல்படும்.

*   தேவைப்பட்டால் இயற்கை உரங்களைப் பயன் படுத்தலாம்.

நன்றி: தி ப்ளான்ட் ஷாப், சென்னை

ஹரித் தரங், சென்னை