ஹெல்த்
Published:Updated:

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?
பிரீமியம் ஸ்டோரி
News
விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

ஷைலஜா, சித்த மருத்துவர்

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

`உணவே மருந்து' என்பதுதான் நம் வாழ்வியல் முறை. தனியாக மருந்து, மாத்திரைகள் என்று நம் முன்னோர் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. உணவு என்பது நோய்கள் வராமல் தடுக்கும் மருந்தாக இருந்தது. அப்படியே நோய்கள் வந்தாலும் உணவையே மருந்தாகக்கொண்டு குணப்படுத்திக் கொள்ளும் நுட்பத்தையும் நம் முன்னோர் அறிந்து வைத்திருந்தனர்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

எப்போது எந்த உணவைச் சாப்பிட வேண்டும்; எந்த உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்ற கணக்கீடுகள் எல்லாம் அப்போது உண்டு. ஆனால் இன்றைய தலைமுறை அந்த வாழ்க்கை முறையிலிருந்து மாறிவிட்டது. பலருக்கு எதை, எப்படி, எப்போது சாப்பிட வேண்டும் என்றே தெரியவில்லை. முன்னோர் கைகொண்டிருந்த அந்த நுட்பத்தை விரிவாகப் பார்க்கலாம். உணவு சார்ந்து எழக்கூடிய எல்லா சந்தேகங்களுக்கும் விடை சொல்கிறார் சித்த மருத்துவர் ஷைலஜா.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?
விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தலாமா என்ற கேள்வி பலருக்கு உண்டு. கண்டிப்பாக அருந்தலாம். அப்படியானால் வெதுவெதுப்பான நீரை அருந்துவது நல்லதா, குளிர்ச்சியான நீரை அருந்தலாமா என்கிற கேள்வி எழும். குளிர்ச்சியான நீரைத் தவிர்க்க வேண்டும். சாதாரண நீர் அல்லது சற்று வெதுவெதுப்பான நீரை அருந்தலாம்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

வெறும் வயிற்றில், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து குடிக்கலாம். இது உடலில் உள்ள கழிவுகளையும் நச்சுகளையும் வெளியேற்றும். இப்படிக் குடித்தால் உடல் எடை குறையும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அது தவறு. தினமும் வெந்நீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து குடிப்பது சோர்வு நீக்கி சுறுசுறுப்பைக் கொடுக்கும்; செரிமானத்தைத் தூண்டும்.

காலையில் பால் சேர்க்காமல் டீ, காபி குடிக்கலாம். கருப்பட்டி சேர்த்துக் குடிப்பது நல்லது. கருப்பட்டி சேர்ப்பதால் கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் சிறுநீரகக் கோளாறுகளும் நீங்கும்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

காலை உணவை 9 மணிக்குள் முடித்துக்கொள்வது நல்லது. குறிப்பாக, காலை 7.30 மணிக்குள் உணவு உண்ணும் பழக்கமுள்ள பலர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 11 மணிக்குமேல் காலை உணவைச் சாப்பிடுகிறார்கள். இப்படித் தாமதமாகச் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. இந்நிலை தொடர்ந்தால் 40, 45 வயதில் சர்க்கரைநோய் வரவும் வாய்ப்புண்டு.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

பள்ளி செல்லும் குழந்தைகளும் இல்லத்தரசிகளும் பெரும்பாலும்  காலை உணவைத் தவிர்க்கிறார்கள். இதனால் வயிற்றுப்பிரச்னைகள், ரத்தச்சோகை மற்றும் சத்துக் குறைபாட்டு நோய்கள் வரலாம். எனவே, காலை உணவைத் தவிர்ப்பது உடல்நலத்துக்கு நல்லதல்ல.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கும் அறிவு வளர்ச்சிக்கும் காலை உணவு மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் காலை உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

இட்லி, சிறந்த காலை உணவு. அரிசி, உளுந்து சேர்த்துத் தயாரிக்கப்படுவதால் கொழுப்பு குறைவதுடன் உடலில் நார்ச்சத்தின் அளவு அதிகரிக்கும். எளிதில் செரிமானமாகும். தினை இட்லி, கேழ்வரகு இட்லி, கோதுமை இட்லி என விதம்விதமாகச் செய்து சாப்பிடலாம். இட்லியைப் போல இடியாப்பமும் மிக எளிதில் செரிமானமாகும். சர்க்கரை நோயாளிகள், இடியாப்பத்துடன் சர்க்கரைக்குப் பதில் கொஞ்சமாகத்  தேங்காயைத் துருவிப் போட்டுச் சாப்பிடலாம்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

காலை உணவாக தோசை சாப்பிடுவதும் நல்லதே. இதில் புரதம் மற்றும் கனிமச் சத்துகள் அதிக அளவில் உள்ளன. எண்ணெய் இல்லாத தோசை நல்லது. எண்ணெய் சேர்க்காத தோசை சாப்பிடுவதால் கொழுப்புச்சத்து குறைந்து இதயத்தின் செயல்பாடு சீராகும்.

அரிசி மாவு மட்டுமல்லாமல் கம்பு, கேழ்வரகு போன்றவற்றிலும் தோசை செய்து சாப்பிடலாம். தோசையைப் போலவே ஆப்பமும் உடலில் கொழுப்பு தங்காமல் பார்த்துக் கொள்ளும். உடல் பருமன் ஏற்படாமல் பாதுகாக்கக்கூடியது ஆப்பம்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

புட்டும் காலை உணவுக்கு ஏற்றது. அதில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும். பெரும்பாலும் சிவப்பரிசியில் புட்டு செய்வார்கள். தினை, சாமை அரிசி போன்றவற்றில் புட்டு செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ச் சிக்கல், ரத்தச்சோகை, மலச்சிக்கல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்.

நார்ச்சத்து அதிகமாகவும் கொழுப்பு மற்றும் சர்க்கரைச் சத்தின் அளவு குறைவாகவும் உள்ள வெண்பொங்கலும் காலையில் சாப்பிடத் தகுந்த உணவு. கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும் என்பதால், தினசரி உணவாக இல்லாமல் அவ்வப்போது சாப்பிடலாம்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

காலை உணவாகச் சிலர் வெறும் பழங்கள் அல்லது ஓட்ஸ் கஞ்சியை மட்டுமே சாப்பிடுவார்கள். அது எனர்ஜியைக் கொடுக்காது. பழம் சாப்பிட நினைப்பவர்கள் காலை உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். ஜூஸாக இல்லாமல் பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது.

பழங்கள் சாப்பிடுகிறவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை வராது. மேலும் அவற்றிலுள்ள கனிம உப்புச் சத்துகளும் இனிப்புச் சத்தும் உடல் உறுதியை அதிகரிக்கும். மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள் காலை உணவாக வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

காலை உணவுக்குப் பிறகு காபி, டீ குடிப்பது நல்லதல்ல. அவற்றுக்குப் பதில் லெமன் ஜூஸ் அல்லது கிரீன் டீ குடிக்கலாம். அல்லது, இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம். இஞ்சியை நசுக்கிப்போட்டு கொதிக்கவைத்து வடிகட்டித் தேன் கலந்து குடிப்பதும் செரிமானக் கோளாறுகளைப் போக்கும். கழிவுகள் வெளியேற்றப்படுவதால் மந்தத்தன்மை நீங்கும். இதை, ‘கற்ப மருந்து' என்றும் சொல்வார்கள். சீக்கிரம் முதுமை வராமல் பாதுகாக்கும்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

காலையில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள கஞ்சி, அவல் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது. பட்டாணி, பாசிப்பயறு போன்றவற்றை சுண்டலாகச் செய்து காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். முளைகட்டச் செய்து, பச்சையாகவோ வேகவைத்தோ சாப்பிடலாம். அதிகப் புரதம் உள்ள இந்த உணவுகளைக் காலை உணவாகச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

மதிய உணவில் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) அதிகமாகவும் புரதச்சத்து, கொழுப்புச்சத்து குறைவாகவும் எடுத்துக் கொள்வது நல்லது. காய்கறிகள், பழங்களில் வைட்டமின்களும் தாதுப்பொருள்களும் அதிக அளவில் உள்ளன. அரிசி, கோதுமை மற்றும் சிறுதானியங்களில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் உடல் பருமன் உள்ளவர்களும் இவற்றைச் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அவரவர் தேவைக்கேற்ப சாப்பிடுவது அவசியம். பொதுவாக எல்லோருமே இரண்டு கைப்பிடி அளவுக்கு உணவு எடுத்துக் கொள்ளலாம்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

தீட்டிய அரிசிகளைச் சாப்பிடுவதற்குப் பதில் கைக்குத்தல் அரிசி மற்றும் சிவப்பரிசியைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இவற்றைச் சமைக்கக் கூடுதல் நேரம் எடுக்கும். அதேபோல செரிமானமாகவும் நேரமாகும். இதனால் இரண்டு கைப்பிடி சாப்பிடுவதற்குப் பதில் ஒரு கைப்பிடி சாப்பிட்டாலே போதுமானது.

உடல் உழைப்பு இல்லாதவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்து புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம் தேவையான அளவு உணவு உண்ணாவிட்டால் கைகால் வலி, மூட்டுவலி மற்றும் வாத நோய் பாதிக்க வாய்ப்புள்ளது. தேவைக்கும் அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றில் மந்தம் ஏற்பட்டு பிரச்னை உண்டாகும்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

மதிய உணவைப் பொறுத்தமட்டில் தென்னிந்தியர்கள் சப்பாத்தி சாப்பிடுவதில்லை. அவரவர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப அந்தந்த இடங்களில் விளையக்கூடிய பொருள்களைச் சாப்பிடுவதே நல்லது. சிறுதானிய உணவுகளை உண்பது நல்லது என்றாலும் மூன்று வேளையும் சிறுதானியங்களாக உண்பது நல்லதல்ல.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

சிறுதானியங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் சிலருக்கு சருமத்தில் அரிப்பு, தடிப்பு மற்றும் வாதக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக சோளம், கம்பு, வரகு போன்றவற்றைத் தினமும் சாப்பிடக்கூடாது. அவற்றை, ‘கரப்பான் பண்டங்கள்' என்பார்கள். இவை கரப்பான் என்கிற சரும நோய்களை ஏற்படுத்திவிடும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. சாமை, எனர்ஜி தரும் உணவு என்பதால் அதை விளையாட்டு வீரர்கள் சாப்பிடலாம். தினை சாப்பிடுவதால் சளி உள்ளிட்ட கபம் சார்ந்த நோய்கள் சரியாகும். ஆனாலும் தினமும் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

காய்கறிகளைப் பொறுத்தமட்டில் அந்தந்த சீசனில் விளையும் காய்கறிகளைச் சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்குக் கிழங்கு வகைகளை உண்ணக் கொடுக்கலாம். பெரியவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் கிழங்கு வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரத்தில் மூன்று முதல் நான்கு நாள்கள் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மதிய உணவுடன் கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்ற சத்து நிறைந்த உணவுகளைக் கொடுப்பது நல்லது. கீரையுடன் நெய், மிளகு சேர்த்துச் சாப்பிடுவதால் கீரையில் உள்ள முழுமையான சத்துகள் கிடைக்கும்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

கீரையுடன் நெய் சேர்த்துச் சாப்பிடுவதால் உடல் சூடு குறைவதுடன் செரிமானக் கோளாறுகள் விலகும்; பார்வைக் கோளாறுகள் சரியாவதுடன் புத்திக்கூர்மை பெறும். கீரையுடன் புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள வைட்டமின் சத்துகள் அப்படியே கிடைக்கும்.

கீரையுடன் மிளகாய்க்குப் பதில் மிளகு சேர்த்துக் கொள்வது நல்லது. கீரையை அதிகமாக வேக வைக்காமல் சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது. 10 மாதக் குழந்தை முதல் அனைவரும் கீரையைச் சாப்பிடலாம்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

கீரைகளில், சிறுகீரை குழந்தைகளுக்கான நல்ல உணவு. இது கல்லீரல் கோளாறையும் பார்வைக் கோளாறையும் போக்கும். பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணியைப்போல சிறுகீரையும் பார்வைக்கு நல்லது. சிறுகீரை சூப் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.

காலை மற்றும் மதிய உணவுடன் கீரைகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. இரவில் சாப்பிட்டால் எளிதில் செரிமானமாகாது. அத்துடன் வாந்தி, வயிற்றுப்போக்கு, மந்தம், வாதம் அதிகரித்துப் பிரச்னையை ஏற்படுத்தும்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

மதிய உணவில் தயிருக்குப் பதில் மோர் சேர்த்துக் கொள்ளலாம். பெரியவர்கள் வெண்ணெய் எடுத்த மோரைச் சாப்பிடுவதே நல்லது. மோர் அருந்துவதால் செரிமானக் கோளாறுகள் சரியாவதுடன் உடல் சூடு குறையும்; மூலம் குணமாகும்.

மூட்டு வலி, உடல் வலி உள்ளவர்களுக்கு மோர் மிகவும் நல்லது. டிரைவர்கள், அதிக நேரம் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் தினமும் மோர் சாப்பிட்டு வந்தால் மூலநோய், உடல் சூடு போன்ற தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

மூளை வளர்ச்சிக்கு நல்லது என்பதால், குழந்தைகளுக்குத் தயிர் சாப்பிடக் கொடுக்கலாம். ஆனால் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வாதக்கோளாறுகள் வர வாய்ப்புள்ளது.

சாப்பாட்டுக்குப் பிறகு இனிப்பு சாப்பிட வேண்டும் என்று ஒரு மரபு உண்டு. இனிப்பு சாப்பிடுவது செரிமானத்தை அதிகரிக்கச் செய்யும். ஆனாலும், அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சர்க்கரை, நெய் அதிகமுள்ள இனிப்புகளைச் சாப்பிடக்கூடாது. அவற்றுக்குப் பதிலாக கடலை மிட்டாய், எள்ளுருண்டை, இஞ்சி முரப்பா, பேரீச்சம்பழம் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

உணவு உண்டதும் பழம் சாப்பிடலாமா என்று சிலர் கேட்பார்கள். தாராளமாகச் சாப்பிடலாம். வெறும் பழமாகவோ, ஜூஸாகவோ எடுத்துக்கொள்வதில் தவறில்லை; மில்க்‌ஷேக் வேண்டாம். சிட்ரிக் அமிலம் உள்ள லெமன் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை எந்தவிதத் தயக்கமுமின்றி சாப்பிடலாம்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

சாப்பாட்டுக்கு முன் சூப் குடிப்பது இன்றைக்கு ஃபேஷனாகிவிட்டது. வெஜிடபிள் சூப், கிளியர் சூப் போன்றவற்றை அருந்துவதில் தவறில்லை. ஆனால் கார்ன் பவுடர் (சோள மாவு) கலந்த சூப் அருந்துவது நல்லதல்ல. தினமும் உணவில் ரசம் சேர்த்துக்கொள்வது நல்லது. புளி ரசம், நெல்லி ரசம், எலுமிச்சை ரசம் என எந்த ரசமாகவும் இருக்கலாம். ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம், பூண்டு போன்றவை செரிமானத்துக்கு நல்லது.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள், ஏலக்காய், பெருங்காயம் போன்றவற்றை உணவுகளில் சேர்ப்பது செரிமானத்துக்கு நல்லது. கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தப் பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்ளும். பருப்புடன் பெருங்காயமும், கிழங்கு உணவுகளுடன் பூண்டும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் போன்றவற்றை நாமே சொந்தமாகத் தயாரித்துப் பயன்படுத்துவது நல்லது. மஞ்சளைப் பொறுத்தமட்டில், சிறிது சிறிதாக வெட்டி, ஆவியில் வேகவைத்துக் காயவைத்துப் பொடியாக்கிப் பயன்படுத்தலாம். இப்படி நாமே தயாரிக்கும் சமையல் பொடிகளைப் பயன்படுத்துவதால், பதப்படுத்துதலுக்கான ரசாயனங்களின் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

மதிய உணவில் முட்டை சேர்த்துக் கொள்ளலாம். வேகவைத்தோ, ஆம்லெட் வடிவிலோ சாப்பிடலாம். நாட்டுக்கோழி முட்டையாக இருந்தால் நல்லது. அசைவம் சாப்பிடுபவர்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கைகால் வலி உள்ளவர்கள் இறால், நண்டு போன்றவற்றைத் தற்காலிகமாகத் தவிர்ப்பது நல்லது.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

பெரும்பாலும் நாம் கடல் நண்டுகளையே சமைத்துச் சாப்பிடுகிறோம். வயல் நண்டுகளைச் சாப்பிட்டால் கபம் விலகும். மேலும் சரும நோய் உள்ளவர்களுக்குக்  கடல் நண்டு சாப்பிட்டால் நோய் அதிகரிக்கும் என்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

ஆட்டுக்கறியைப் பொறுத்தமட்டில் வெள்ளாட்டுக்கறியைச் சமைத்துச் சாப்பிடலாம். செம்மறி ஆட்டுக்கறி சாப்பிட வேண்டாம். கோழிக்கறியைப் பொறுத்தவரை, நாட்டுக்கோழியே நல்லது. பிராய்லர் கோழிகளைத் தவிர்க்க வேண்டும். காடை சாப்பிடலாம். ஆனால் இன்றைக்குக் கிடைக்கும் காடைகள் பெரும்பாலும் வளர்ப்புக் காடைகளாகவே இருக்கின்றன. ஆகவே அவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

மீன், சிக்கன் உணவுகளைச் சாப்பிடும்போது பால், தயிர் சாப்பிடக்கூடாது. பலர் சிக்கனைத் தயிர் விட்டுப் பிசைந்து அது நன்றாக ஊறியதும் பொரித்துச் சாப்பிடுவார்கள். இது சுவையைக் கூட்டும். ஆனால், நோய்களை வரவழைக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் மீன், சிக்கன் உணவுகளைச் சாப்பிட்டதும் தயிர் சாதம் சாப்பிடுவது, மில்க்‌ஷேக் அருந்துவது கூடாது.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

காலை உணவைப்போலவே மதிய உணவிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிலர் அவசரப் பரபரப்பில் நூடுல்ஸ் போன்ற  உணவுகளைக் குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்புகிறார்கள்; அது தவறு.

12.30 மணியிலிருந்து 1 மணிக்குள் மதிய உணவை முடித்துக்கொண்டால் மாலை 4.30 மணிக்குப் பசியெடுக்க ஆரம்பிக்கும். அப்போது டீ, காபி சாப்பிடலாம். காலை, மாலை என ஒருநாளைக்கு இரண்டு கப் டீயோ அல்லது காபியோ குடிப்பதில் தவறில்லை. அதற்குமேல் போனால் பித்தம், அல்சர் உள்ளிட்ட தொல்லைகள் ஏற்படும்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

மாலையில் டீ, காபிக்குப் பதில் சுக்கு காபி குடிப்பது மிகவும் நல்லது. கிரீன் டீ குடிப்பதும் சிறந்தது. பால் சேர்க்காமல் குடிப்பதால் கொலஸ்ட்ரால் குறையும். உடல் பருமன் ஏற்படாமலிருக்க உதவும். சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்றவை கட்டுப்பாட்டில் இருக்கும்.

மாலைநேரச் சிற்றுண்டிகள் என்றதும் வடை, போண்டா, பஜ்ஜி போன்றவற்றையே நாம் விரும்பிச் சாப்பிடுகிறோம். எண்ணெய்ப் பண்டங்களைத் தொடர்ந்து சாப்பிடுவதால் காலப்போக்கில் தொப்பை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆசைக்கு எப்போதாவது சாப்பிடலாம். அதேபோல் டீ, காபியுடன் பிஸ்கட் போன்ற நொறுக்குத்தீனிகளைச் சேர்த்துச் சாப்பிடுவதும் நல்லதல்ல.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

சிற்றுண்டிகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்தால் பச்சைப்பயறு, தட்டைப்பயறு, மொச்சை போன்றவற்றை வேக வைத்துச் சாப்பிடலாம். வெள்ளைக் கொண்டைக்கடலையைத் தவிர்ப்பது நல்லது. மேலே சொன்ன பயறு வகைகளை வேக வைத்து, பூண்டு, சீரகம், பெருங்காயம் சேர்த்துத் தாளித்துச் சாப்பிட்டால் செரிமானமாக உதவும். ஆவியில் வேக வைத்த உணவுகளைச் சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது.

சமையலுக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். நம் பகுதியில் விளையாத தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் பாமாயில், சன்ஃப்ளவர் ஆயில் போன்ற எண்ணெய்களைத் தவிர்க்க வேண்டும்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

இரவு உணவுகள் எப்போதுமே எளிதில் செரிமானமாகக் கூடியவையாக இருப்பது நல்லது. இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வெந்த உணவுகள் சிறந்தவை. சப்பாத்தி, தோசை சாப்பிடுவதில் தவறில்லை என்றாலும் இரவு 7.30 முதல் 8 மணிக்குள் சாப்பிட்டால் எளிதில் செரிமானமாகிவிடும். பரோட்டா, உருளைக்கிழங்கு குருமா, அசைவ உணவுகளை இரவில் சாப்பிடுவது சரியல்ல.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

இரவு வேலை முடிந்தபிறகு 11, 12 மணிக்கு மேல் சாதாரண உணவைச் சாப்பிட்டாலே செரிமானமாவதில் சிக்கல் ஏற்படும். ஆனால் பலர் அதன்பிறகு பரோட்டா, சப்பாத்தி, அசைவ உணவுகளைச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்படித் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரைநோய் வர வாய்ப்புள்ளது. செரிமானப் பிரச்னைகளும் ஏற்படலாம்.

மைதா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பரோட்டாவை ஆசைக்கு எப்போதாவது சாப்பிடலாம். தினமும் சாப்பிட்டால் நாமே தேடிப்போய் நோயை விலைகொடுத்து வாங்குகிறோம் என்று பொருள்.

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

இரவுப்பணி செய்வோர் மாலை 7 மணிவாக்கில் இரவு உணவை முடித்துக் கொள்வது நல்லது. அதன்பிறகு இரவு 11 மணி அளவில் பழங்கள் சாப்பிடலாம். உணவு செரிமானமாகாவிட்டால் இரவில் தூக்கமும் வராது என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். இரவு உணவுக்குப் பிறகு துளசி, சுக்கு சேர்த்த பால் குடிக்கலாம்.

இரவு உணவு உண்டதும் சிறிது தூரம் வாக்கிங் போவது நல்லது. இரவு உணவு செரிமானமடைந்த பிறகு தூங்கச் செல்வது நலம் பயக்கும்.

- எம்.மரியபெல்சின்

விழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்?

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.