தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க!” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா

“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க!” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா
பிரீமியம் ஸ்டோரி
News
“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க!” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா

மனதுக்கு நேரம் ஒதுக்குங்கள்!

ப்போதைய தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா. “ஷ்ரேயா, நயன்தாரா, கேத்ரின் தெரஸா, ஹன்சிகா எனப் பல முன்னணி நடிகைகளோடு வேலை பார்த்துட்டேன். அடுத்து ரஜினி சார், கமல் சாருக்குத்தான் காஸ்ட்யூம் டிசைன் பண்ணணும்” எனப் பூரிக்கும் அர்ச்சா மெஹ்தாவின் முதல் சினிமா என்ட்ரி, இந்தியில் வெளியான ‘ராம் லீலா’.

ஃபேஷன் டிசைனிங் துறையைத் தேர்ந்தெடுத்த காரணம்?


சின்ன வயசுல இருந்து ஃபேஷன்மேல பெரிய ஈடுபாடு. விதவிதமான டிரஸ் போடணும், சின்ட்ரெல்லா மாதிரி ஆகணும்னு பல கனவுகள். ‘இந்தூர்ல (மத்தியப்பிரதேசம்) பொறந்து வளர்ந்த பொண்ணு, எப்படி சினிமாவுக்குப் போகலாம்? அதெல்லாம் தப்பு’னு சுத்தி இருக்கிறவங்க பேச ஆரம்பிச்சாங்க. வீட்டிலும் டிஸ்கரேஜ் பண்ணாங்க. ஆனா, நான் என் முடிவுல தெளிவா இருந்தேன். பள்ளிப் படிப்பை முடிச்சதும் அடம்பிடிச்சு NIIFT-ல ஃபேஷன் டிசைனிங் படிச்சேன். பிறகு, லண்டன்ல முதுகலைப் பட்டம் வாங்கினேன்.

“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க!” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா

முதல் சினிமா வாய்ப்பு?

லண்டன்ல இருந்து வந்ததும் வாய்ப்பு தேடி ஒரு வருடம் அலைஞ்சேன். இடையிடையே நிறைய ஃபேஷன் நிகழ்ச்சிகளுக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணிக்கொடுத்தேன். என் நெருங்கிய நண்பர் ஒருவர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்னை அறிமுகப்படுத்தி வெச்சார். ‘ராம் லீலா’ படத்துக்காக அவர் காஸ்ட்யூம் டிசைனரைத் தேடிக்கிட்டிருந்த நேரம் அது. பெரிய அனுபவம் இல்லாத என்னை நம்பி டிசைனரா வொர்க் பண்ண சொன்னார். என் முதல் படமே ரன்வீர் சிங், தீபிகா படுகோனோடு அமைந்ததை நினைக்கும்போது, அவ்வளவு சந்தோஷம்!

அடுத்து தெலுங்குல பூரி ஜெகன்நாத் சாரோடு ‘ஹார்ட் அட்டாக்’ படத்துல வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது. தெலுங்குல மாஸ் ஹிட் படம் இது. பிறகு, தொடர்ந்து பல சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது.

காஸ்ட்யூம் டிசைனிங்ல இருக்கிற பிரச்னைகள், சவால்கள்..?

டிரெண்டுக்குத் தகுந்தமாதிரி நம்மை மாத்திக்கணும். நான் படிச்சது லண்டன்ல. இந்தியாவுக்கு வந்தப்போ, டிசைன் பண்றதுல நிறைய வித்தியாசங்களை உணர முடிஞ்சது. அதுக்கு ஏத்தமாதிரி என்னை நான் மாத்திக்கிட்டேன். ஒரு படத்துக்கு என்ன தேவைங்கிறதை முதல்ல இயக்குநர்கிட்ட கலந்துரையாடி முடிவு பண்ணணும். அதுக்கப்பறம் நடிகர்கள் அவங்க எந்தளவுக்கு அந்த காஸ்ட்யூம்களை வசதியா உணர்றாங்கனு தெரிஞ்சுக்கணும். இந்த ரெண்டு விஷயங்களையும் கடைப்பிடிக்க வேண்டியது மிக அவசியம்.

பெரிய பிரேக்?

தமிழ்ல எனக்குப் பெரிய பிரேக் கொடுத்தது, ‘மெர்சல்’ படம். இந்தப் படத்துக்காக ஐந்து காஸ்ட்யூம் டிசைனர்கள் சேர்ந்து வேலை பார்த்தோம். போலந்து நாட்டுல ஷூட்டிங் பண்ணோம். விஜய்க்கு கோமல் சஹானி, சமந்தாவுக்கு நீரஜா கோனா... இப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ஆட்கள்.

காஜல் அகர்வாலுக்கு பர்சனல் காஸ்ட்யூம் டிசைனரா இருக்கீங்களே...


காஜல் அகர்வாலுக்கு கடந்த மூணு வருடங்களா நான்தான் காஸ்ட்யூம் டிசைன் பண்ணிக்கிட்டு இருக்கேன். என்மேல அவங்களுக்கு ரொம்ப நம்பிக்கை. எதுவாக இருந்தாலும் என்னைக் கேட்காம முடிவு பண்ண மாட்டாங்க காஜல். இப்போ, ‘குயின்’ படத்தின் தமிழ் ரீமேக்ல காஜலுக்கான காஸ்ட்யூம் டிசைன் வேலைகள் போய்க்கிட்டு இருக்கு

பர்சனல் வாழ்க்கை - சினிமா... பேலன்ஸ் எப்படி?

ஒரே மாசத்துல ஏழு படங்கள்ல வேலை பார்த்திருக் கேன். இப்படி பிஸியா போயிட்டு இருக்குற நம்ம வாழ்க்கையை, ஈஸியாக்க சில விஷயங்களைக் கட்டாயம் பண்ணணும். அதனால, தினமும் ஃபிட்னெஸ், யோகா, டான்ஸ்னு எல்லாத்துக்கும் நேரம் ஒதுக்குவேன். மனசும் உடம்பும் ஆரோக்கியமா இருந்தால்தானே நம்ம வேலையை மகிழ்ச்சி யோடு சரியா பார்க்க முடியும். இது எனக்கு மட்டுமல்ல... எல்லாப் பெண்களுக்கும்தாம்!

- சுஜிதா சென்