
இப்படிக்கு...

விநாயக சதுர்த்தியைக் கொண்டாடும் விதமாக, ஐந்து தலங்களைத் தந்து அசத்திவிட்டீர்கள். அட்டையில் ஆனைமுகனின் தரிசனம் அற்புதம்!
- எம்.குணா, மதுரை-2
அண்ணாமலைக் கவிராயரின் திருக்கதையும், அவர் பற்றிய தகவல்களும் வியக்கவைத்தன. திருவருள் செல்வர்களின் திருக்கதைகள் ஒவ்வொன்றும், இன்றைய தலைமுறைக்கான பாடம்.
- கே.பாலாஜி நாராயணன், தென்காசி
`மகா பெரியவா' தொடர் குருவருள் பொக்கிஷமாகத் திகழ்கிறது. அதேபோல், `மண்... மக்கள்... தெய்வங்கள்!' தொடர், கிராம தெய்வங்களின் சிறப்பை மண்மணக்கச் சொல்லும் விதம் அழகு!
- எஸ்.லட்சுமி, வேலூர்
கடைசிப் பக்க தகவல்கள் மிகச் சிறப்பு. அதிலும் அந்த ஒரு துளி சிந்தனை, சிந்திக்கத் தூண்டுகிறது.
- கே.ரமணா, விழுப்புரம்