பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கடிதங்கள்: உணவோடு வரலாறும்...

கடிதங்கள்: உணவோடு வரலாறும்...
பிரீமியம் ஸ்டோரி
News
கடிதங்கள்: உணவோடு வரலாறும்...

கடிதங்கள்: உணவோடு வரலாறும்...

லையங்கம் சிறப்பு. மத்திய அரசின் தோல்விகளை மறைக்கவே இந்த அடக்குமுறைகள் ஏவப்படுவதாகத் தோன்றுகிறது.

- லோகநாதன், www.vikatan.com

கடிதங்கள்: உணவோடு வரலாறும்...

`வேள்பாரி-100’ விழாவுக்கு வாழ்த்துகள். விழா நாளின் முதல் நாள் வேள்பாரி, வேந்தர்களை வென்ற பாரி ஆவாரா?

- சேது, www.vikatan.com

`அ
டங்க மறு’ இயக்குநர் பேட்டியில் `இது நல்ல போலீஸ் கதை’ என்று படித்தேன். நல்ல போலீஸெல்லாம் கதையிலும் சினிமாவிலும்தான் என நினைத்துக்கொண்டேன்.

- சுப்புரத்தினம், வேதாரண்யம்.

ழகிரி பற்றிய கட்டுரை, இன்றைய அவரது நிலையையும், கட்சியின் போக்கையும் சரியாக எடுத்துச் சொன்னது.

- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

ஷ்வின் மகராஜ் பற்றிய கட்டுரையை, கண்ணீருடன் படித்தேன். அவரது அறக்கட்டளைப் பணிகள் சிறக்கட்டும்.

- எல்.வி.வாசுதேவன், சென்னை.

ந்த வாரம் `சொல்வன’த்தில் நான்கு கவிதைகளும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டன. அதிலும் `பேச்சியின் கேள்விகள்’ மனதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

- ஆர்.ஆர்.உமா, திசையன்விளை.

 `வே
ள்பாரி’ இன்னும் ஆயிரம் அத்தியாயம் இருந்தாலும் ஒரே நாள்ல படிச்சிடுவேன். அதனால, தயவுசெஞ்சு அந்த ஆயிரத்தையும் ஒரே புக்ல குடுத்துடுங்க. இந்த அற்புதப் படைப்புக்கு எந்தப் பரிசும் ஈடாகாது.

- ஷங்கர், www.vikatan.com

`அ
ப்பாஸ்புரம் அய்யனார் சாமி’ சிறுகதை படித்தேன். பறை முழக்கத்தில் தடைச்சுவர்கள் தகர்வதும், சூரியன் விழித்துச் சுடர்வதும் குறியீடாகச் சொல்லப்பட்டுள்ள கதை. வாழ்த்துகள்.

- ஜனநேசன், www.vikatan.com

ந்த வாரம் `கேம் சேஞ்சர்ஸ்’ படித்து முடித்ததும் என் ஆண்ட்ராய்டு போனை எடுக்கும்போதே பெருமையாய் உணர்ந்தேன்.

- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

ர்மிய உணவுகளை ரசித்து ருசிப்பவன் நான். ஆனால், அவர்களின் பூர்வீகம் பற்றி `சோறு முக்கியம் பாஸ்’ பகுதியில் படித்துதான் தெரிந்துகொண்டேன். உணவோடு அதன் வரலாற்றையும் தந்த ஆசிரியருக்கு நன்றிகள்!

- செல்வகுமார், வளசரவாக்கம்.