மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா? கொஞ்சம் கவனிங்க!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா? கொஞ்சம் கவனிங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா? கொஞ்சம் கவனிங்க!

சுந்தரி ஜகதீசன்

மக்கும் தங்கத்துக்கும் அப்படி என்ன பிரிக்க முடியாத பந்தமோ... எவ்வளவு வாங்கினாலும் தங்க நகை மீதான காதல் தீர்வதில்லை!

பெண்களை இன்னும் அழகாக்குகின்றன தங்க நகைகள்.  அது மட்டுமல்ல...  அவசரச் செலவுகளைச் சமாளிக்க தங்க நகைபோல உதவுவது வேறெதுவும் இல்லை.

கடந்த காலங்களில் அது தந்த லாபம் சூப்பர்! ஆனால், தங்கத்தை இப்போது நகைகளாகத்தான் வாங்க வேண்டுமென்பதில்லை. கோல்டு இ.டி.எஃப், கோல்டு மியூச்சுவல் ஃபண்ட், தங்கப் பத்திரம் எனப் பலவிதங்களில் வாங்கலாம். அது எப்படி?

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா? கொஞ்சம் கவனிங்க!

கோல்டு இ.டி.எஃப் (Gold ETF)

பங்குச் சந்தையில் பங்குகள் வாங்குகிற மாதிரிதான் இதுவும். இதை வாங்குவதற்கு டீமேட் அக்கவுன்ட் தேவை. குறைந்தது ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும். 24 காரட்டின் தங்கம் விலை எவ்வளவு இருக்கிறதோ, அந்த விலைக்கு வாங்கலாம். விற்கலாம். இதில் முதலீடு செய்யும்போது நுழைவு / வெளியேறும் கட்டணமும் கிடையாது. நிர்வாகச் செலவு விகிதமும் (Expenses Ratio) குறைவு.   

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா? கொஞ்சம் கவனிங்க!


கோல்டு ஃபண்ட் (Gold Fund)

இது மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பைப் போன்றது. இதற்கு டீமேட் அக்கவுன்ட் தேவையில்லை. குறைந்தபட்சமாக 1,000 ரூபாயைக்கூட முதலீடு செய்யலாம். தொடர் முதலீடு செய்யும் வசதியிருப்பதால், ஒவ்வொரு மாதமும் சேமிக்கலாம். இதில் வெளியேறும் கட்டணம் உண்டு; நிர்வாகச் செலவும் கொஞ்சம் அதிகம். 

தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bond)

அரசாங்கமே வெளியிடும் சாவரின் கோல்டு பாண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு கிராம்கூட வாங்கலாம். டீமேட் அக்கவுன்ட் தேவையில்லை. நினைத்த நேரத்தில் எல்லாம் இதில் முதலீடு செய்ய முடியாது. அரசாங்கம் அவ்வப்போது வெளியிடும்போது மட்டுமே வாங்க முடியும். நுழைவு / வெளியேறும் கட்டணம், நிர்வாகச் செலவு கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண்டுக்கு 2.50% வட்டி கிடைக்கிறது. எட்டு வருடங்கள் கழித்து அன்றைய விலை என்னவோ, அதை அரசாங்கமே கொடுத்து விடும். இடையில் விற்க வேண்டும் என்றாலும், சந்தையில் விற்க இயலும்.  

தங்கமே தங்கம்!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா? கொஞ்சம் கவனிங்க!ஏற்கெனவே நகை வாங்கி வைத்திருப் போருக்குத் தங்கத்தைப் பணமாக்கும் திட்டமும் உள்ளது. நகையை, அரசாங்கம் நியமித்திருக்கும் சென்டர்களில் கொடுத்து உருக்கி, அதில் வரும் 24 காரட் தங்கத்தை (குறைந்தபட்சம் 30 கிராம்) வங்கிகளிடம் ஒப்படைத்து, அதன் மதிப்புக்கு ஒரு சான்றிதழ் பெறலாம். கால அளவைப் பொறுத்து 0.50% முதல் 2.50% வரை வட்டி கிடைக்கும். அந்தக் கால அளவு முடிந்ததும் நாம் கொடுத்த அளவு தங்கமோ, அதற்கீடான பணமோ, நம் விருப்பத்துக்கு ஏற்ப தரப்படும்.

‘‘இதெல்லாம் சரிங்க மேடம், தங்க நகை வாங்கினா போட்டு அழகு பார்த்துக்கலாம். நீங்க சொல்ற முறையில வாங்கினா நகைக்குப் பதிலா பேப்பரைத்தான் கொடுப்பாங்க. அதைப் போட்டுக்கிட்டு அழகு பார்க்க முடியுமா?’’ என்று நீங்கள் கேட்கலாம். ஒரு பவுன் தங்க நகையை (8 கிராம்) வாங்கும்போது ஒரு கிராம் சேதாரம், விற்கும்போது ஒரு கிராம் சேதாரம் போய், பத்தாண்டுகளில் இரண்டு முறை நீங்கள் பழைய நகையைப் புதிய நகையாக மாற்றினால், 8 கிராம் தங்கம் 4 கிராமாகக் குறைந்துவிடும். இந்தக் கணக்கை பலரும் பார்ப்பதே இல்லை!

ஒரு பயிற்சி...

உங்கள் சொத்தின் 5%–10% அளவுக்குத் தங்கம் இருப்பது நல்லது என்கிறார்கள் நிதி நிபுணர்கள். உங்களிடம் ஏற்கெனவே இருக்கும் தங்கத்தின் அளவு என்ன, அது உங்கள் மொத்த சொத்தில் எத்தனை சதவிகிதம்?

ப(ய)ணம் தொடரும்

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா? கொஞ்சம் கவனிங்க!