
இப்படிக்கு...
`பொருநையைப் போற்றுவோம்' - தாமிரபரணி மகத்துவம் குறித்த கட்டுரையும் படங்களும் அபாரம்!
- வேதநாயகி, சென்னை
கடந்த இதழோடு 3 இணைப்புகள் கிடைத்ததில், மிக்க மகிழ்ச்சி. குருப்பெயர்ச்சி... துல்லிய பலன்கள்!
- எம்.செல்லையா, சாத்தூர்

`பழநியில் மயூரநாதருக்கு சிம்மாசனம்' கட்டுரையைப் படித்ததும் நேரில் காணும் பேராவலைத் தந்தது. அன்பர் ரெஜித்குமாரின் பணி பாராட்டத் தக்கது.
- மயிலை கோபி, சென்னை
பல ஆன்மிக சந்தேகங்களுக்கு மிக விளக்கமாக விடையளிக்கிறது கேள்வி-பதில் பகுதி. நன்றி!
- சிவசுந்தர், காஞ்சிபுரம்
ஆதிகுருவின் அருள் சுரக்கும் இலம்பையம்கோட்டூர் தெய்வ நாயகேஸ்வரர் ஆலயத்தில் சக்தி விகடன் வாசகர்களின் உழவாரப்பணி நெகிழ வைத்தது. அடுத்தடுத்த உழவாரத்தில் நாங்களும் கலந்துகொள்வோம்.
- கவிதா சரவணன், திருவரங்கம்