சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கடிதங்கள்: ஆச்சர்யம்... வியப்பு... சுவாரஸ்யம்!

கடிதங்கள்: ஆச்சர்யம்... வியப்பு... சுவாரஸ்யம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடிதங்கள்: ஆச்சர்யம்... வியப்பு... சுவாரஸ்யம்!

கடிதங்கள்: ஆச்சர்யம்... வியப்பு... சுவாரஸ்யம்!

நான்காம் சுவரில் பாக்கியம் சங்கர் எழுதும் மனிதர்கள், அவர்களைப் பற்றிய நம் பொதுப்பார்வையை அசைத்துப் பார்க்கிறது. அடுத்தவாரம் யாரைப் பற்றி எழுதப்போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது.

- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

கடிதங்கள்: ஆச்சர்யம்... வியப்பு... சுவாரஸ்யம்!

ர்வைவா, வித்தியாசமான ஒரு தொடர். பல விஷயங்கள் ஆச்சர்யப்படுத்துவதோடு கொஞ்சம் கலக்கமும் கொள்ளச் செய்கிறது.

- தங்கவேல் ஜௌசல்யா, பெரியகள்ளிவலசு.

ர்கார் பற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியில் அவரின் உதவி இயக்குநர்கள் யார் யாரென்று படித்ததும் ஆச்சர்யப்பட்டுப்போனேன். இத்தனை திறமை யா ளர்களை உருவாக்கி யிருக்கிறாரா இவர் என்று வியப்பு மேலிட்டது.

கடிதங்கள்: ஆச்சர்யம்... வியப்பு... சுவாரஸ்யம்!- சிவமைந்தன், சென்னை

`அர
சியல் சட்டத்தின் ஆன்மா’  தலையங்கம் படித்தேன்.காவல்துறையைக் குட்டிய தோடு, நீதியை நிலை நாட்டிய நீதிபதியைப் பாராட்டியிருந்த விதமும் அருமை.

- அ.குணசேகரன், புவனகிரி

35
ரூபாயா என்று வாங்கினால் சர்ப்ரைஸாக `தன்மானம் வெகுமானம் அவமானம்’ புதிய தொடரும், அடுத்த வாரத்தில் இன்னொரு புதிய தொடருக்கான அறிவிப்பும் கொஞ்சம் கூலாக்கி விட்டது!

- ஷண்முகம், சேவாக்கவுண்டனூர்

`இ
ல்லாதவர்கள் தந்த அமுதம்’ சிறுகதையில் எஸ்.ரா அவர்கள், நேரில் பார்த்தது போன்ற உணர்வை வரவழைத்துவிட்டார்... கடைசியில் கண்ணீர் வருவதைத் தடுக்க முடியவில்லை. மிகவும் அருமையான கதையைப் (நிகழ்வை) படித்த உணர்வு ஏற்பட்டுள்ளது.

 - வெங்கடேசன், vikatan.com

பொ
தியவெற்பன் பேட்டியை வெளியிட் டமைக்கு மிக்க நன்றி. இவர்போன்றவர்களை மறக்காமல் இருக்க, தக்க நேரத்தில் பேட்டி, கட்டுரை என விகடன் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

- உமரி. பொ.கணேசன், மும்பை 37

தீபாவளி ஸ்பெஷல் கார்ட்டூன் கொஞ்சம் சிரிக்கவும் நிறைய சிந்திக்கவும் வைத்தது.

- என்.பாலகிருஷ்ணன், மதுரை


னந்த விகடனின் பக்கங்களில் ஆங்காங்கே வந்த ‘முதன்முதலாக’ செம சுவாரஸ்யம்.

- எம். செல்லையா, சாத்தூர்.