Published:Updated:

100 ஆண்டுகளை நெருங்க இருக்கும் ராஜாஜி தொடங்கிவைத்த காந்தி ஆசிரமம் எப்படியிருக்கிறது?

100 ஆண்டுகளை நெருங்க இருக்கும் ராஜாஜி தொடங்கிவைத்த காந்தி ஆசிரமம் எப்படியிருக்கிறது?

மனம் திருந்தி சாகும்வரை மதுவைத் தொடாமல் வாழ்ந்த அந்தத் தொழிலாளியை ஆசிரமத்தின் காலணி தயாரிக்கும் பிரிவுக்கு மேற்பார்வையாளராக நியமித்தார் ராஜாஜி.

Published:Updated:

100 ஆண்டுகளை நெருங்க இருக்கும் ராஜாஜி தொடங்கிவைத்த காந்தி ஆசிரமம் எப்படியிருக்கிறது?

மனம் திருந்தி சாகும்வரை மதுவைத் தொடாமல் வாழ்ந்த அந்தத் தொழிலாளியை ஆசிரமத்தின் காலணி தயாரிக்கும் பிரிவுக்கு மேற்பார்வையாளராக நியமித்தார் ராஜாஜி.

100 ஆண்டுகளை நெருங்க இருக்கும் ராஜாஜி தொடங்கிவைத்த காந்தி ஆசிரமம் எப்படியிருக்கிறது?

``நீ எதையும் செய்வதற்கு முன், எந்தவித ஆதரவும் இல்லாத நிராதரவான ஏழை ஒருவனின் முகத்தை ஒருகணம், உன் நினைவுக்குக் கொண்டு வா. அவனுக்கு நீ என்ன செய்திருக்கிறாய் என்று யோசித்துப் பார்" - மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்யக்கூடிய செயல், மற்றவர்களுக்கு எப்படிப் பயனளிக்கக்கூடும் என்று மகாத்மா காந்தி கூறிய பொன்மொழிதான் இது. இதைச் சொன்ன காந்தி இறந்திருந்தாலும், அவருடைய கொள்கைகள் இன்றுவரை பேசப்படுகிறது. அதுபோல இந்தக் கொள்கையை அன்றுமுதல் இன்றுவரை பின்பற்றி வரும் தமிழ்நாட்டில் உள்ள ஒரே காந்தி ஆசிரமம்

டிசம்பர் 1924-ல் பெல்காமில் நடந்த மாநாட்டில் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ராஜாஜி. அப்போது, சபர்மதியில் வைத்து காந்தியைச் சந்தித்த ராஜாஜி,  `காந்தி பெயரில், தான் ஒரு ஆசிரமம் அமைக்க விரும்புகிறேன்' என்று கூறி அவரிடம் ஆசி வாங்கிச் சென்றார். 1925 பிப்ரவரியில் ஆசிரமத்தை ஆரம்பித்தார், ராஜாஜி. இதற்காக ரத்ன சபாபதி என்பவர் நாலரை ஏக்கர் நிலம் தந்து உதவினார். காந்தியின் முதன்மைக்  கொள்கைகளான  தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, கதர் ஆடை அணிதல் போன்றவற்றைப் பற்றி மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.

ஒருசமயம், ``செருப்பு தைக்கும் தொழிலாளியான என் கணவன் குடிபோதையில் தினமும் அடித்து துன்புறுத்துகிறார்" என அந்தத் தொழிலாளியின் மனைவி ராஜாஜியிடம் வந்து அழுது புலம்பினார். ``நான் எனது  மனைவியை அடிக்கவில்லை" என்றார், தொழிலாளி. செருப்பை எடுத்து அவர் கையில் கொடுத்த ராஜாஜி தொழில்மீது சத்தியம் செய்யச் சொன்னார். தவற்றை உணர்ந்த அந்தத் தொழிலாளி, ``அவரிடம் இனி குடிப்பதில்லை" என சத்தியம் செய்தார். மனம் திருந்தி சாகும்வரை மதுவைத் தொடாமல் வாழ்ந்த அந்தத் தொழிலாளியை ஆசிரமத்தின் காலணி தயாரிக்கும் பிரிவுக்கு மேற்பார்வையாளராக நியமித்தார் ராஜாஜி. அதன் பின்னர், ராஜாஜி அவரிடம் செருப்புத் தைக்கவும் கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட இந்த காந்தி, ஆசிரமத்தை தந்தை பெரியார் திறந்துவைத்தார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், காமராஜர், சர்தார் வல்லபபாய் படேல், எம்.எஸ்.சுப்புலட்சுமி, மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரி பாய்  உள்ளிட்டவர்கள் இங்கு வருகை தந்துள்ளனர். காந்தியின் மகனான தேவதாஸ் காந்திக்கும், ராஜாஜியின் புதல்வி லட்சுமிக்கும் இங்குதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டின் அருகே உள்ள புதுப்பாளையம் என்ற பகுதியில் `காந்தி ஆசிரமம்' அமைந்துள்ளது. இதன் உள்ளே போகும்போதே எங்கும் அமைதியான சூழ்நிலை. எப்பொழுதும் இரைச்சலாக இருக்கும் நகரவாழ்விலிருந்து, ஒரு சின்ன புத்துணர்ச்சி, உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்துக்கும் கிடைக்கிறது. 26 ஏக்கர் அளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த காந்தி ஆசிரமம், இன்றும் பழைமை மாறாமல் அப்படியே உள்ளது.

இங்குள்ள ராஜாஜி சிலையின் முன்புதான் தினமும் பிரேயர் நடத்தப்படுகிறது. அதற்குப் பிறகுதான் அனைத்து வேலைகளும் தொடங்கப்படுகின்றன. இதன் அருகில் ராஜாஜி தங்கிய அறை இருக்கிறது. அந்த அறை முழுவதும் ராஜாஜி, காந்தி, பெரியார், காமராஜர் எனத் தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. இதற்குப் பக்கத்திலேயே நூலகம் ஒன்றும் உள்ளது. அந்தக் காலம்முதல் இப்போதுவரை புத்தகங்களின் பெட்டகமே இங்குதான் உள்ளது. இந்த ஆசிரமத்தினை உருவாக்க நிலத்தினைத் தானமாக அளித்த ரத்ன சபாபதி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கதர் ஆடைகள்,  ஊதுபத்தி,  சாம்பிராணி, இலவம் பஞ்சிலாலான தலையணை மற்றும் மெத்தைகள், சோப்புகள், வாசனைப் பொருள்கள் மற்றும் தேன் ஆகியன தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இன்றளவிலும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள், இதன் தரத்தினை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து அங்கு பணிபுரியும் சிலர், ``ஜி.எஸ்.டி. காரணமாகக் காதி தயாரிப்புகளின் விலை அதிகரித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் காதிப் பொருள்கள் எதற்கும் ஒரு சதவிகிதம்கூட வரி விதிக்கப்படவில்லை. தற்போது அதன் காரணமாகப் பொருள்கள் விலையேறி உள்ளது. காதி தயாரிப்பு நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்" என்றனர். 

காதி தயாரிப்புகளுக்கு, செவி சாய்க்குமா அரசு?