மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 12-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம்  புதிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கிடைக்கும். பிரபலங்கள்

ராசி பலன்கள்

நண்பர்களாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்தவர் களைச் சந்திப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும்.

வியாபாரத்தில் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் அதிகரிக் கும். அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். 

தன்னம்பிக்கையுடன் செயல்படும் நேரமிது.

ராசி பலன்கள்

 ரிஷபம் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்கள் உதவுவார்கள். பிள்ளைகளிடம் உங் களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கே விற்று அசலைத் தேற்றிவிடுவீர்கள்.

உத்தியோகத்தில்
உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

விட்டுக்கொடுத்து வெற்றிபெறும் வேளையிது.

 மிதுனம்  உலக நடப்புக்கேற்ப உங்களையும் மாற்றிக்கொள்வீர்கள். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து

ராசி பலன்கள்

உயரும். கௌரவப் பதவிகள் தேடிவரும். கணவரிடம் கலந்தாலோசித்துச் செலவுகளைக் குறைப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நன்மைக்கு வித்திடுவீர்கள் 

வியாபாரச் சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

 புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

கடகம்  வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் பெருகும்.

ராசி பலன்கள்

கணவருடன் கலந்தாலோசித்துப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளிடம் மறைந்திருந்த திறமைகளை இனம்கண்டறிவீர்கள். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். முன்கோபம், வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வந்துபோகும்.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு செயல்படுத்தி, வெற்றியடைவீர்கள்.

உத்தியோகத்தில் எல்லோரும் வியக்கும்படியான ஒரு செயலைச் செய்து முடிப்பீர்கள்

மதிப்பும் மரியாதையும் கூடும் வேளையிது. 

 சிம்மம்  பல விஷயங்களைச் சாதிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். கணவர் உங்களின் மன உணர்வுகளைப்

ராசி பலன்கள்

புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார். பிள்ளைகளும் உங்களின் பேச்சைக்கேட்டு நடப்பார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளாலும் உறவினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் விட்டுக்கொடுத்துச் செல்வதும் நல்லது.

வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத்தாண்டி உயரதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

தேவையற்றவற்றைத் தவிர்த்திடும் தருணமிது.

ராசி பலன்கள்

கன்னி எதார்த்தமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். சாதனையாளர் களின் அறிமுகம் கிடைக்கும். வங்கிக்கடன் பெறுவீர்கள். கணவர் உங்களின் நிர்வாகத் திறமைக்கு மதிப்பு தருவார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்பார்கள். சொந் தங்கள் தேடி வருவார்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம்.

வியாபாரத்தில் புதிய இடத்துக்குத் தங்களின் கடையை மாற்றுவார்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வருமானம் கூடும்.

முக்கிய முடிவுகளை எடுக்கும் தருணமிது.

 துலாம்  பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து செயல்படுவீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி

ராசி பலன்கள்

இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் திணறுவீர்கள். கணவர் அவ்வப்போது அலுத்துக்கொண்டாலும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். உறவினர் களால் உதவிகளும் ஆதாயமும் உண்டு. 

வியாபாரத்தில் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடுவது நல்லது.

உத்தியோகத்தில் யாரைக் குறித்தும் எவரிடமும் விமர்சனம் செய்ய வேண்டாம்.

மனத்தை ஒருமுகப்படுத்தும் வேளையிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்  சவாலான காரியங்களைச் சாதாரணமாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ரசனைக் கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள். கணவர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பண விஷயங்களில் கவனம் தேவை.

வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். புதிதாக வாடிக்கையாளர்களும் அமைவார்கள். 

உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். பதவி உயர்வு கிடைக்கும்

அலைச்சலும் ஆதாயமும் கிடைக்கும் நேரமிது.

தனுசு  எதையும் சாதிக்கும் மனவலிமையும் தன்னம்பிக்கையும் பிறக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

ராசி பலன்கள்

கணவர் உறுதுணையாகச் செயல்படுவார். பிள்ளைகளின் வெற்றிக்கு வித்திடு வீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ஷேர் மூலம் லாபம் வரும்.

 வியாபாரத்தில் அதிரடி நடவடிக்கைகளால் இரட்டிப்பு லாபம் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றமும்  பதவி உயர்வும் கிடைக்கும்.

ஆளுமைத்திறன் கூடும் வேளையிது.

மகரம்  நிர்வாகத் திறன் கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். புதிய பொறுப்புகளும் வாய்ப்புகளும்

ராசி பலன்கள்

தேடிவரும். கணவன் மனைவி அந்நி யோன்யம் பெருகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உறவினர்கள், தோழிகளால் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வழக்குகள் சாதகமாகும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனை யைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும் தருணமிது.

கும்பம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவரின் நீண்ட

ராசி பலன்கள்

நாள் கனவு நனவாகும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. அரசாங்க விஷயங்கள் தள்ளிப்போகும். வழக்கை நிதானமாகக் கையாளுங்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவித்து லாபம் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப் படுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.

 தொட்டதெல்லாம் பொன்னாகும் தருணமிது.

 மீனம் பழைய பிரச்னைகள் தீரும். தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் மனைவி

ராசி பலன்கள்

அந்நியோன்யம் பலப்படும். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வழக்கு சாதகமாகும். மற்றவர்களை நம்பி எந்தச் செயலிலும் இறங்க வேண்டாம்.

வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் பழைய பிரச்னைகளால் மன அமைதி குறையும். ஆனால், வெற்றி உங்களுக்கே.

 அனுபவ அறிவால் முன்னேறும் நேரமிது.