தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

இன்டீரியர் டெகரேஷனில் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்?

இன்டீரியர் டெகரேஷனில் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
News
இன்டீரியர் டெகரேஷனில் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வீடுஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு, ஓவியங்கள்: ரமணன்

``வீட்டில் சுவர்கள் லைட் கலரில் இருந்தால், வீடு பெரிதாகத் தெரியும். வீட்டின் சீலிங் எப்போதும் வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வீட்டின் சீலிங் ஸ்டாண்டர்டாக 10 அடிதான் இருக்கும். வெள்ளையாக சீலிங் இருக்கும்போது உயரம் அதிகமாகத் தெரியும். டார்க் கலரில் பெயின்ட் அடித்தால் அந்த உயரம் குறைந்து தெரியும்.

இன்டீரியர் டெகரேஷனில் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்?

அதேபோல டைல்ஸ் டார்க் கலரில் இல்லாமல் பராமரிக்க எளிதான நிறங்களில் இருக்குமாறு தேர்வு செய்யலாம். வெள்ளை டைல்ஸைத் தவிர்க்கவும். வீடுகளுக்குப் போடும்போது பெரிய டிசைன் உள்ள டைல்ஸைத் தவிர்க்கவும். சிம்பிள் டிசைன்ஸ் பொருத்தமாக இருக்கும். வீட்டுத் தரைக்கு நேச்சுரல் மார்பிள்ஸ் போடுவதைத் தவிர்க்கவும். ஏனென்றால், அதற்குக் குளிர்ச்சித்தன்மை அதிகம். அதாவது தரையிலிருந்து மூன்று அடிக்கு அதன் குளிர்ச்சி இருக்கும். இதனால் வீட்டில் உள்ள முதியோருக்கு மூட்டுவலி போன்ற பிரச்னைகள் வரலாம். தவிர, மார்பிளில் எளிதில் கறை படியும். துவாரங்கள் விழுந்தாலும், எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் போன்றவை சிந்தினாலும், குழந்தைகள் க்ரேயான்ஸ் வைத்துக் கிறுக்கினாலும் மார்பிளில் படிகிற கறை எளிதில் போகாது.

குறிப்பாக, குளியலறைக்கு மார்பிள்ஸ் பதிக்கவே கூடாது. குளியலறை டைல்ஸில் கறுப்பு மற்றும் வெள்ளையைத் தவிர்க்கவும். சில வீடுகளில் தண்ணீரின் நிறம் மங்கலாக இருக்கும். அந்த வீடுகளில் குளியலறையில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற டைல்ஸ் பதிக்கலாம். தண்ணீரின் நிறத்தினால் டைல்ஸில் கறை படிவதை இதன் மூலம் தவிர்க்கலாம். வெள்ளை மற்றும் பிரவுன் போன்ற நிறங்களில் அந்தக் கறை பளிச்செனத் தெரியும். எனவே, உங்கள் வீட்டுத் தண்ணீரின் நிறத்தைப் பொறுத்து, குளியலறை டைல்ஸைத் தேர்ந்தெடுக்கலாம்.

என் வீடு கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காக ஒவ்வோர் அறையையும் ஒவ்வொரு கலரில் பெயின்ட் செய்யலாமா?

நீங்கள் நினைப்பது மாதிரி அது நல்ல ஐடியா அல்ல. ஒவ்வோர் அறைக்கும் ஒவ்வொரு கலரில் பெயின்ட் செய்வது வித்தியாசமாக இருக்கும். ஆனால், ரசிக்கக்கூடியதாக இருக்காது. அதற்குப்பதில், பேஸ் கலர் ஒன்றைப் பொதுவாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதன் ஷேடிலேயே எல்லா அறைகளுக்கும் பெயின்ட் செய்யலாம். வெள்ளை அல்லது ஹாஃப் வொயிட் கலர் பொருத்தமாக இருக்கும்.

உங்கள் வீட்டை கலர்ஃபுல்லாக மாற்ற நினைத்தால், ஓர் அறையின் ஒரு சுவரை மட்டும் பிரைட் கலரில் பெயின்ட் செய்யலாம். முடிந்தவரை டார்க் ரெட் கலரைத்  தவிர்க்கலாம். இது, மன அமைதியைக் குறைக்கும். மற்றபடி நீலம், ஆரஞ்சு, மஞ்சள் என எந்த கலரையும் தேர்வுசெய்யலாம். குழந்தைகளுக்கு இப்படி சுவரின் ஒரு பகுதியை மட்டும் வேறு கலரில் பெயின்ட் செய்து கொடுத்தால் மிகவும் ரசிப்பார்கள். பெயின்ட் வேண்டாம் என்றால், வால்பேப்பர்கூட உபயோகிக்கலாம். இதுவே உங்கள் வீட்டை கலர்ஃபுல்லாக மாற்றும். மற்றபடி ஓர் அறையின் நான்கு சுவர்களையும் நான்கு கலர்களில் பெயின்ட் செய்தால் நன்றாக இருக்காது.

வீட்டின் இன்டீரியர் டெகரேஷன், கட்டுமானம், ஃபர்னிஷிங், லேண்ட்ஸ்கேப்பிங் என எந்த ஏரியா பற்றிய உங்களின் சந்தேகங்களையும் கேள்விகளாக எழுதி அனுப்புங்கள்.