
வெளி ரங்கராஜன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி
தமிழ்?
“என்னுடைய நேசத்தின் மொழி.”
பிடித்த கவிதை வரி?
“ `அன்புடையாரைப் பிரிவுறு நோயது.’ (ஆண்டாள்)”
அடிக்கடி பயன்படுத்தும் ஆங்கிலச் சொல்?
“Body Art.”
மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் நாடகம்?
“முத்துசாமியின் `காண்டவ வன தகனம்’. ”
ஷேக்ஸ்பியர் வசனங்களில் பிடித்தது?
“To be or not to be (Hamlet).”
பிடித்த அரசியல் தலைவர்?
“சே குவேரா.”

மிகவும் பாதித்த தமிழ் நாவல்?
“ஜி.நாகராஜனின் `நாளை மற்றுமொரு நாளே’. ”
அயல் இலக்கியத்தில் பாதித்த நூல்?
“காஃப்காவின் `The Trial’. ”
பிடித்த உணவு?
“கன்னட பிஸிபேலா.”
பிடித்த புனைவுப் பாத்திரம்?
“ ‘மோகமுள்’ யமுனா.”
பிடித்த நடிகர்?
“சந்திரபாபு.”
வாழ்நாளில் ஒருமுறையேனும் சந்திக்க விரும்பும் நபர்?
“என்னை உத்வேகப்படுத்தி மறைந்துசென்ற என் கல்லூரித் தோழி.”
சுற்றுலா செல்ல விரும்பும் ஊர்?
“வயநாடு, கேரளா.”
சென்னையில் பிடித்த இடம்?
“பைக்ராஃப்ட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி.”
பிடித்த பாடல் வரி?
“ `இங்கு கள்ளுக்கும் சொல்லுக்கும் காத்துக்கிடந்தவன் முள்ளில் உறங்கிடவோ...’
(`பழநி’ படப் பாடல்).”
வாசித்துக்கொண்டிருக்கும் நூல்?
“ஜீ.முருகனின் `மரம்’.”
முதுமை?
“படைப்புமனத்துக்கு முதுமை இல்லை.”
உங்களின் அடையாளம்?
“என் சொல்லாடல் மொழி.”
- தொகுப்பு : பாலு சத்யா