
VIP ஷாப்பிங்
சில விஐபிக்களை அழைத்து, “உங்கள் சமீபத்திய ஷாப்பிங் என்ன?” என்று கேட்டபோது அவர்கள் சொன்னவை

“தீபாவளி ஷாப்பிங்குக்காக நல்ல கடைகளைத் தேடிக்கிட்டிருக்கேன். இன்னொரு பக்கம், அடுத்த மாதம் எடுக்கப்போற ஒரு போட்டோஷூட்டுக்குத் தயாராகிட்டு இருக்கேன். அதுக்காக இண்டோ-வெஸ்டர்ன் உடை ஒண்ணு வாங்கியிருக்கேன். பெங்களூரு கமர்ஷியல் ஸ்ட்ரீட்தான் நான் எப்பவுமே ஷாப்பிங் பண்ற இடம்.”

``பெங்களூர்ல தீபாவளிக்காக ஒரு லாங் ஸ்கர்ட் ஒண்ணு வாங்கியிருந்தேன். கடைசியா வாங்கியதுன்னா, அந்த ஸ்கர்ட்டுக்கு மேட்சிங்கா ஒரு ஹீல் ஷூ வாங்கினதுதான்.‘96’ படத்துக்குப் பிறகு சென்னைலதான் இருக்கேன். இந்த தீபாவளி எனக்கு சென்னை தீபாவளி!’’


“எங்க வீட்ல கார்தான் இருக்கு. பைக் இல்லை. பக்கத்துல போய் எதாவது வாங்கிட்டு வரணும்னாகூட கார் எடுக்க வேண்டியதா இருக்கு. சென்னை டிராஃபிக்ல கார் ஓட்டுறதும் சிரமம்தான். அதனால, ஒரு பைக் வாங்கலாம்னு ப்ளான் பண்ணி ஹோண்டா ஆக்டிவா 5G வாங்கினோம். ஒரு மர பீரோ வாங்கினோம். அப்புறம், வீட்டுக்கு ஒரு பெரிய சோபா ஆர்டர் பண்ணியிருக்கோம்!”

“`விண்டோ ஷாப்பிங்’ ஸ்பெஷலிஸ்ட் நான். கல்லூரி படிக்கறப்ப பாதிநேரம் விண்டோ ஷாப்பிங்தான். தீபாவளிக்கு பிளாக் கலர் டி-ஷர்ட்ஸ் மற்றும் டார்ன் டெனிம் வாங்கினேன். டி-ஷர்ட்தான் என்னோட ஆல்-டைம் ஃபேவரைட்.’’

“இப்போ நான் துபாய்ல இருக்கேன். இங்க டார்க் சாக்லேட்ஸ் ஸ்பெஷலா கிடைக்கும். ஷாப்பிங்ல சாக்லேட்ஸ் வாங்கி நண்பர்களுக்கு கிஃப்ட் பண்றேன். அதுக்கப்பறம் என் ஃபேவரைட், லிப்ஸ்டிக்! எங்க போனாலும் ஏதாவது ஒரு கலர் லிப்ஸ்டிக்கை வாங்கிடுவேன்.”

``பெங்களூரு குளிரை சமாளிக்க வுல்லன் ஜாக்கெட்டும் ரெண்டு ஜோடி ஷூவும் லேட்டஸ்டா வாங்கினேன். எனக்கு ரெட் கலர் லிப்ஸ்டிக் மேல அவ்வளவு க்ரேஸ். ஏர்போர்ட் போனாலே அங்க இருக்கிற ‘பாடி ஷாப்’ ஸ்டோர்ல ரெட் லிப்ஸ்டிக் வாங்குறது என் பழக்கம். ஒருமுறை, சென்னைக்கு வரும்போது லிப்ஸ்டிக் பர்ச்சேஸ் பண்ணிக்கிட்டு ஃப்ளைட்டையே மிஸ் பண்ணிட்டேன்னா பார்த்துக்கோங்களேன்!’’
- தொகுப்பு: அலாவுதீன் ஹூசைன், உ.சுதர்சன் காந்தி, சனா, சுஜிதா சென்.