சினிமா
Published:Updated:

சுங்கிடி ஃபேஷன்!

சுங்கிடி ஃபேஷன்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுங்கிடி ஃபேஷன்!

ஷாப்பிங் ஸ்பெஷல்

``பாரம்பர்யத்தை ட்ரெண்டாக மாற்றும்போது, மகிழ்ச்சியுடன் நிறைவும் சேர்ந்து கிடைக்கும். அப்படித்தான், நாங்கள் உருவாக்கியிருக்கும் சுங்குடி ஆடைகளுக்குப் பெண்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு, இதுபோல இன்னும் பல முயற்சிகள் எடுக்கும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கு’’ என்கிறார் ஃபேஷன் டிசைனர்  துர்கா கோபிநாத். இவர் வேறு யாருமில்லை, ‘நீயா நானா’ கோபிநாத்தின் மனைவி.

சுங்கிடி ஃபேஷன்!

‘`பொதுவா, சுங்குடி ஆடைகளுக்கு ரொம்ப லிமிடெட் காம்பினேஷன்கள்தான் இருக்கும். அதை உடைக்கணும், `சுங்குடியில் இப்படிக்கூட மாடர்ன் ஆடைகள் உருவாக்க முடியுமா’ன்னு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைச்சோம். இந்த தீபாவளிக்கு சுங்குடியில் க்ராப் டாப் அண்டு ஸ்கர்ட், மேக்ஸினு பல ரக ஆடைகளை உருவாக்கியிருக்கோம். இந்த ஆடைகள் முழுக்க முழுக்கக் கைத்தறி ஆடைகள் என்பதால், பண்டிகைக் காலங்களில் நெசவுக்குக் கைகொடுத்த திருப்தியும் நமக்குக் கிடைக்கும்’’ என்று சுவாரஸ்யமாகப் பேசுகிறார் துர்கா. அவர் செய்திருக்கும் சுங்குடி டிசைன்ஸ் இங்கே...

சுங்கிடி ஃபேஷன்!

சுங்குடியில் மேக்ஸி. பார்டரை ஸ்லீவ்ஸுக்குப் பயன்படுத்தாம, அதை ஒரு பேட்டர்ன் கொடுக்கும் விதமாகப் பயன்படுத்தியிருக்கோம். கறுப்பு சுங்குடியில் ஓடும் கோல்டன் கட்டங்கள், கொஞ்சம் கிராண்ட் லுக் கொடுக்குது. கறுப்பு - சிவப்பு என்ற குட் ஓல்டு காம்பினேஷன் எப்போதுமே அழகுதான்.

சுங்கிடி ஃபேஷன்!

ஹாஃப் வொயிட், மரூன் காம்பினேஷனில் க்ராப் டாப் அண்ட் ஸ்கர்ட். டாப்பில் செய்திருக்கும் யோக் பேட்டர்ன், இந்த டிரஸ்ஸை இன்னும் அழகாக்குது. அம்மாக்களிடம், ‘பாவாடை, சட்டையா... ஓ நோ...’னு சொல்ற கேர்ள்ஸ், இனி ‘வாவ்’ சொல்லுவாங்க. அம்மாவும் ஹேப்பி... பொண்ணும் ஹேப்பி!

சுங்கிடி ஃபேஷன்!

லைட் யெல்லோவும், பச்சையும் கலந்த நிறத்துடன், ரெட் பார்டர் சேர்ந்து செம அட்ராக்டிவ் காம்பினேஷனில் க்ராப் டாப் அண்ட் ஸ்கர்ட். பள்ளுவை டாப்புக்குப்  பயன்படுத்தியிருக்கோம். போட் நெக் பேட்டர்ன், எலிகன்ட் லுக் கொடுக்கும். 

சுங்கிடி ஃபேஷன்!

எத்னிக் லுக் விரும்பும் பெண்கள், இந்த ஹாஃப் ஸ்லீவ் மேக்ஸியை டிக் செய்யலாம். கழுத்தில் ஆபரணங்கள் தவிர்த்து, காதிலும் கையிலும் மேட்ச்சிங் அக்சஸரீஸ் அணிந்துகொள்ளலாம்.

சுங்கிடி ஃபேஷன்!
சுங்கிடி ஃபேஷன்!

நேவி புளூ, பிங்க் காம்பினேஷனில் மேக்ஸி. ‘சம்திங் இன்ட்ரஸ்டிங்கா வேணும்’னு கேட்கிற கேர்ள்ஸ், இந்த மாதிரி கோல்ட் (Cold) ஸ்லீவ் பேட்டர்னை ட்ரை பண்ணலாம்.

வெ.வித்யா காயத்ரி