மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - பணம்... வீக்கம்... பர்ஸ்...

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - பணம்... வீக்கம்... பர்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - பணம்... வீக்கம்... பர்ஸ்...

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - பணம்... வீக்கம்... பர்ஸ்...

ணவீக்கம்... கேன்ஸரைப்போலவே சத்தமே இல்லாமல் கொல்லக்கூடியது. நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை அது எப்படி விலைவாசி உயர்வின் மூலம் சத்தமே இல்லாமல் காலியாக்கும்? இதுபற்றித் தெரிந்துகொள்வது இன்றைய பெண்களுக்கு மிக மிக முக்கியம்.   

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - பணம்... வீக்கம்... பர்ஸ்...

விலைவாசியும் வருமானமும்

நிலம், தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்.டி)... இவை எல்லாமே நமக்கு நன்கு பரிச்சயம் என்றாலும், அவை இன்றும் லாபகரமாக உள்ளனவா என்று ஆராயாமல், `போனஸா? தங்கம் வாங்கு!', `அரியர்ஸா? எஃப்.டி போடு!' என்று குளத்துக்குள் சுற்றிவரும் மீன்கள் போல கிடக்கிறோம். எஃப்.டி மூலம் கிடைக்கும் வருமானம் 6-7%, தங்கத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் - 3% (2017-ல், நம்புங்க ப்ளீஸ்), வீடு தரும் வாடகை வருமானம் 2–3% என்று சுருங்கிவிட்டது. நம் அடிமடியில் கைவைக்கும் பணவீக்கமோ 5-6% (பணவீக்கம் என்பது விலைவாசி உயர்வுதான். நம் வருமானம் பண வீக்கத்தைவிட 2-3% அதிகம் இருப்பது அவசியம்). என்னதான் செய்வது?

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - பணம்... வீக்கம்... பர்ஸ்...ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு!


பொதுவாக,  சொத்துகளை நிலையான சொத்துகள், நிதிச் சொத்துகள் என்று பிரிக்கிறார்கள். நமக்குப் பரிச்சயமான நிலமும் தங்கமும் நிலையான சொத்துகள். நிதிச் சொத்துகளில் கடன் (Debt), பங்கு (Equity) என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. இவற்றிலும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், அஞ்சலகத் திட்டங்கள் போன்ற கடன் சொத்துகள் நாம் அறிந்தவைதான். வட்டிக்கும் அசலுக்கும் இந்த நிறுவனங்கள் உத்தரவாதம் அளிக்கின்றன. ஆனால், பங்கு என்பது சற்று ரிஸ்க்கானது. அதில் நாம் போடும் முதலீட்டுக்கு லாபம் வருமா, வராதா என்று சொல்ல முடியாது.

முத்துக்கு முத்தாக...


இன்றைக்கு குக்கிராமங்களில்கூட  தபால் அலுவலகங்கள்  உள்ளன. தபால் அலுவலகங்களில்  முத்தான கடன் திட்டங்கள் (Debt Schemes) உள்ளன. கிஸான் விகாஸ் பத்திரம், பி.பி.எஃப், என்.எஸ்.சி, மன்த்லி இன்ட்ரஸ்ட் ஸ்கீம், டைம் டெபாசிட்டுகள் என்று பல திட்டங்கள் தபால் அலுவலகங்களில் உள்ளன. இவற்றில் சிலவற்றுக்கு வரிவிலக்கு உண்டு. அதைவிட முக்கியம், அரசின் உத்தரவாதமும் உண்டு.

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - பணம்... வீக்கம்... பர்ஸ்...

முன்பெல்லாம் ரிட்டயர் ஆனவர்கள், பணத்தை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் போட்டு, வட்டியில் ஹாயாக வாழ்வதைப் பார்த்திருக்கிறோம். இன்று அது சாத்தியமில்லை. ஆகவே, சீனியர் சிட்டிசன்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டத்துக்கு 8.30% வட்டி தருகிறது. அதேபோல, பெண் குழந்தைகளுக்கான  செல்வமகள் திட்டத்திலும் 8.10% வட்டி வழங்கப்படுகிறது. மற்ற திட்டங்களுக்கெல்லாம் வட்டி 7.60% அல்லது அதற்கும் கீழேதான்.

இப்போது வட்டி விகிதம் ஏறுமுக மாக இருப்பதால், புதிதாகப் போடும் டெபாசிட்டுகளைக் குறைந்த கால அளவுக்கே போடுங்கள். கடன் சொத்துகள் (குறைந்த வருமானம் தந்தாலும்) கண்டிப்பாக அதில் ஒருபகுதி நம் போர்ட்ஃபோலியோவில் இடம் பெறுவது அவசியம்.

ப(ய)ணம் தொடரும்!

சுந்தரி ஜகதீசன் - படம் : ப.சரவணகுமார் 

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - பணம்... வீக்கம்... பர்ஸ்...