Published:Updated:

'ஆணவக்கொலையை விடக் கொடூரமானது உலகில் வேறு ஏதுமில்லை' - சத்யராஜ் பேச்சு!

'ஆணவக்கொலையை விடக் கொடூரமானது உலகில் வேறு ஏதுமில்லை' - சத்யராஜ் பேச்சு!

'ஆணவக்கொலையை விடக் கொடூரமானது உலகில் வேறு ஏதுமில்லை' - சத்யராஜ் பேச்சு!

Published:Updated:

'ஆணவக்கொலையை விடக் கொடூரமானது உலகில் வேறு ஏதுமில்லை' - சத்யராஜ் பேச்சு!

'ஆணவக்கொலையை விடக் கொடூரமானது உலகில் வேறு ஏதுமில்லை' - சத்யராஜ் பேச்சு!

'ஆணவக்கொலையை விடக் கொடூரமானது உலகில் வேறு ஏதுமில்லை' - சத்யராஜ் பேச்சு!

ஆணவக் கொலையை விடவும் இந்த உலகத்தில் கொடுமையான சம்பவம் வேறு எதுவுமே இல்லை என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் தந்தை பெரியார் ஆண்டு விழாக் குழு சார்பாகப் பெரியாரின் 140-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் மற்றும் தேசிய கருத்தரங்கம் பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. பகல் முழுவதும் பல்வேறு அமர்வுகளாக நடைபெற்ற இந்த விழாவில் திரைப்பட நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில், "ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் ஆகியோரின் வலியை உணர்ந்து அவர்களுக்காக வீதியில் போராடிய தலைவர் பெரியார். தமிழ்ச் சமுதாயம் மகிழ்ச்சியாக இருக்கப் பெரியாரின் கொள்கை மிகவும் அவசியம். அன்பு, மனிதநேயம் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைக்கும். அதுவே பெரியாரின் கொள்கை. பராசக்தி, மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்றால் அது பெரியார் உருவாக்கிய சமுதாயத்தின் வெற்றி. இன்று திரைத்துறையினர், இளைய சமுதாயத்தினர் பெரியாரையும் பெரியாரின் கொள்கைகளையும் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர். விரைவில் ஒட்டுமொத்த உலகமும் பெரியார் பக்கம் திரும்பும்" எனப் பேசினார். 

அதைத் தொடர்ந்து, பெரியார் குறித்த ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சத்யராஜ் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யராஜ், "சிறையில் நீண்டகாலமாக வாடும் ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அதில் என்ன அரசியில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யச் சட்டத்தில் இடம் உள்ளதாக அனைவரும் கூறுகிறார்கள் . ஆகவே உடனடியாக விடுதலை செய்யலாம் .  

தமிழகத்தில் ஆங்காங்கே ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. ஆணவக் கொலைகளைப் போன்று கொடுமையான சம்பவம் இந்த உலகத்தில் வேறு எதுவும் கிடையாது. ஆணவத்துக்காகப் பெற்ற குழந்தைகளைக் கொலை செய்பவர்கள் மனிதர்களாகத் தெரியவில்லை. தற்போது பெரியாரை இளைஞர்கள் கையில் எடுத்து இருப்பது மாற்றத்துக்கான அறிகுறியாக உள்ளது. அது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது" எனத் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள் லெனின்பாரதி , கோபிநயினார், எடிட்டர் லெனின், கு.ராமகிருஷ்ணன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள்  பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் கலைவிழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பெரியாரின் பெருமைகள் குறித்துப் பேசினார்கள்.