
கடிதங்கள்
அட்டையே செம ஷாக். புரியலையா? கரன்ட் தலைப்பு கொடுத்து ஷாக்கை ஏற்றிவிட்டது எர்டிகா 2.0 Re-Loaded. எந்திரன் 2.0 மாதிரி எர்டிகா 2.0-ம் வெற்றி பெறட்டும்!
- தீபக், திருச்சி

டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் - தம்பிகள், பார்க்கவே படு ஸ்போர்ட்டியாக இருந்தார்கள். ஆனால் உருவம்தான் வேறு; உயிர் ஒன்று. டிகோர் இன்ஜினில் இன்னும் கொஞ்சம் சக்தியைக் கூட்டியிருக்கலாம்.
- சங்கர்தாஸ், கோவை
ஏற்கெனவே அட்வென்ச்சர் விரும்பிகளுக்கு எக்கச்சக்க பைக்குகள் இருக்கின்றன. புதிய வரவான SWM சூப்பர் டூயல் பைக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஹஸ்க்வர்னாவின் அடிப்படை மாடல் எனும்போது ஆர்வம் மேலும் அதிகமாகிறது.
- அபிஜித் குமார், தேனி
உட்கார்ந்து போகும் டாய் லெட்டில்கூட டிசைன் கோட்பாடு இருக்கிறது என்பது வியக்க வைத்தது. அவர் சொல்வதுபோல், சாய்வான தளம் இருந்தால் எழுந்து அமர ஈஸியாகத்தான் இருக்கும்.
- மிதிலேஷ், பெங்களூரு
ஜாவா எனும் புயல், நிச்சயம் புல்லட்டைப் புரட்டிப்போடும் என்கிறான் என் நண்பன். சர்வீஸில் உஷாராக இருந்தால் ஜாவா தூள் கிளப்ப முடியும். 105 டீலர்கள் என்பது, RE நிறுவனத்தின் 800 டீலர்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவுதான். விரைந்து வா ஜாவா!
- ஜெய்ராம், திருவனந்தபுரம்
இகத்புரியில் உள்ள மஹிந்திராவின் ஆஃப்ரோடிங் பயிற்சிப் பள்ளி, சாகசக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி
பைக்கர் பாலாஜியின் பயணம் மிரட்டிவிட்டது. தனி ஒருவனாக இந்தியா முழுக்கச் சுற்றுவதற்கு ஒரு தில் வேண்டும். உலகம் முழுதும் பாலாஜி சுற்றி வர வாழ்த்துகள்!
- ரவீந்திரகுமார், மதுரை