கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

நீங்களும் வ்வ்ர்ர்ரூம் வீரன்தான்

நீங்களும் வ்வ்ர்ர்ரூம் வீரன்தான்
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் வ்வ்ர்ர்ரூம் வீரன்தான்

புதிய தொடர் - நீங்களும் ரேஸர் ஆகலாம்!

நீங்களும் வ்வ்ர்ர்ரூம் வீரன்தான்

ஸ்கூலுக்கு சைக்கிளில் போவதே நான் படிக்கும்போது பெருமையாகப் பார்க்கப் பட்டது. இப்போது அப்படியில்லை. ‘சாவியைக் கொடும்மா..’ என்று மளிகைக் கடைக்கெல்லாம் பைக்கை ஸ்டார்ட் செய்வது கல்லூரி மாணவர்களுக்கு ஒரு ஜாலியான விஷயமாகி விட்டது. இது தப்பா?  என்றால், இல்லை. அதாவது, இது அடுத்தவர்களுக்குத் தொந்தரவாகாத பட்சத்தில் இந்த ஆர்வத்தில் தவறொன்றும் இல்லை. 

நீங்களும் வ்வ்ர்ர்ரூம் வீரன்தான்

நீங்கள் ஒரு விஷயத்தை உற்று நோக்கினால் ஓர் உண்மை தெரியும். இப்போது பைக் ஓட்டும் எல்லோருக்குமே ரேஸர் ஆக வேண்டும் என்கிற ஆசை எட்டிப் பார்க்காமல் இருக்காது. உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். பைக்கில் போகிறீர்கள்; சாலை காலியாக இருக்கிறது. எந்தத் தொந்தரவும் இல்லை. இந்த நேரத்தில் பைக் ராக்கெட் மாதிரி பறக்கும். உங்களையும் அறியாமல் ஒரு ரேஸ் வீரன் உங்களுக்குள் இருந்து எட்டிப் பார்ப்பான். இதில் பெண்களும் அடக்கம்.

இங்குதான் பெற்றோர்களும் சரி; மற்றவர்களும் சரி - விழிப்பாக இருக்க வேண்டும். இந்த ரேஸ் வீரனை நீங்கள் சாலையில் விழிக்க வைப்பதுதான் தவறு. அதற்குத்தான் ரேஸ் ட்ராக் இருக்கிறது. ‘அது சரி; பைக் ஓட்டத் தெரிந்திருந்தால் மட்டும் போதுமா, ரேஸ் ட்ராக்கில் எல்லோரையும் முந்திவிடலாமா, அதுக்கு அதிகம் செலவாகுமே?’ என்பதுதான் பல இளைஞர்களின் கவலை. இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்தால், இந்தக் கவலை தேவையில்லாதது என்பது புலனாகிவிடும்..

பைக் ஓட்டத் தெரிந்திருப்பதோடு, கூடவே ரேஸர் ஆகவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும். எப்படி என்றால், ஸ்பான்ஸர்களை உங்களை நோக்கி வர வைக்கும் அளவுக்குத் தீவிரமான ஆர்வமும் திறமையும் இருக்க வேண்டும். மற்றபடி, நீங்கள் நினைப்பதுபோல் ரேஸ் என்பது லட்சம்-கோடி ரூபாய்க் கனவு என்று பயந்து, இந்த ஆசையைத் துறக்க வேண்டியதில்லை. பலரும் தங்களின் ரேஸ் கனவைக் கலைப்பதற்கு, பணம்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. நிஜம் அதுவல்ல! எல்லாவற்றுக்கும் முறையான வழிமுறைகள் உண்டு.

2000-ல் சென்னை மயிலாப்பூரில் நடந்த ரேஸ் ஒன்றை வேடிக்கை பார்க்கப் சென்றிருந்தேன். இதுதான் என் முதல் அனுபவம். என்னிடம் இருந்தது ஒரு பைக்கும், குரு என்ற ஒரு மெக்கானிக்கும்தான். ‘ஓ.. இத இவ்வளவு ஸ்பீடா ஓட்டலாமா’ என்ற ஆசை வந்தது. என் ஆசையைச் சொன்னதும் மெக்கானிக் ஓகே சொல்லிவிட்டார். நானாகவே போய், ரேஸ் ட்ராக்கில் விசாரித்து லைசென்ஸும் எடுத்து, ரேஸில் கலந்து கொண்டேன். என்னுடைய முதல் ரேஸ் அது. பாதி தூரத்திலேயே பைக் மக்கர் பண்ணியது. 

நீங்களும் வ்வ்ர்ர்ரூம் வீரன்தான்

பிறகுதான், ரேஸிங்குக்கு மெக்கானிக்கின் உதவி எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்து கொண்டேன். குருவுடன் சேர்ந்து டிவிஎஸ் விக்டர் பைக்கை ரெடி செய்து, ரேஸ்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். ரேஸ் பயிற்சி எடுக்க நேரம் கிடைக்காமல், அங்கிருந்த தென்னந்தோப்பில் நான் பயிற்சி எடுத்தது தனிக்கதை. 2003-ல் விக்டர் ரேஸில் இரண்டு முறை முதல் இடத்தில் போடியம் ஏறினேன். பிறகு MRF சாம்பியன் பட்டம், 165 அப்பாச்சி RTR சாம்பியன், ஹோண்டா ஒன்மேக் ரேஸ் சாம்பியன், ஸ்டாக் 135 சாம்பியன், நான்ஸ்டாப் எண்ட்யூரன்ஸ் சாம்பியன் என்று பட்டங்கள் வென்றேன். சரி; விஷயத்துக்கு வருவோம்.

‘‘என்கிட்ட யமஹா பைக் இருக்கு. நான் ரேஸ் ட்ராக்ல பைக் ஓட்ட முடியுமா?’’ என்ற கேள்வியுடன் என்னிடம் ஓர் இளைஞர் வந்தார். அதன்பிறகுதான் எனக்கு ஒரு ஐடியா வந்தது. இந்த மாதிரி இளைஞர்களுக்கு ட்ரெய்னிங் கொடுத்தால் என்ன? அதற்காகத்தான் ‘கிங்டம் ரேஸிங் அகாடமி’ தொடங்கினேன்.

இதைத்தான் முதலில் செய்ய வேண்டும்!

ரேஸ் ஓட்ட ஆசை வந்தவுடன், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது இதைத் தான். சென்னை தரமணியில் உள்ள ‘ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் கிளப் இந்தியா’ எனும் அலவலகத்தில் முதலில் லைசென்ஸ் எடுங்கள். இதற்குக் கட்டணம் வெறும் 1,500 ரூபாய்தான். எக்ஸ்பெர்ட் கேட்டகிரி என்றால், அதற்குத் தனிக் கட்டணம்; 1,750 ரூபாய். சாலையில் பைக் ஓட்ட லைசென்ஸ் மாதிரி, ரேஸ் ட்ராக்கில் ஓட்ட இந்த FMSCI லைசென்ஸ் மிகவும் அவசியம். இதற்கு ஏதேனும் ரேஸிங் அகாடமியின் பயிற்சி சான்றிதழ், மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் அவசியம்.  லைசென்ஸ் இல்லாதவர்கள் கூட, ரேஸ் ட்ராக் லைசென்ஸ் பெறலாம். இதற்கு FMSCI-யின் உறுப்பினர் யாராவது ஒருவர், உங்களுக்கு அட்டெஸ்ட்டட் கையெழுத்துப் போட வேண்டும். அதாவது, ‘இவர் பைக் ஓட்டுவதை நான் பார்த்துள்ளேன். மோட்டார் சைக்கிளைக் கையாளத் தெரியும்’ என்கிற விண்ணப்பத்தில் அவரின் கையெழுத்து வேண்டும். இல்லையென்றால், ரேஸிங் ஸ்கூலில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

சரி, 18 வயதானால்தான் ரேஸர் ஆக முடியுமா? சொல்கிறேன்!

(வ்வ்ர்ர்ரூம்)


தொகுப்பு: தமிழ்

சுதாகர்

நீங்களும் வ்வ்ர்ர்ரூம் வீரன்தான்

சுதாகர் பற்றி...

ந்திய பைக் ரேஸர்களில் முக்கியமானவர் சுதாகர். மொத்தம் 7 தடவை நேஷனல் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற சுதாகர், எந்தப் பின்னணியும் இல்லாமல் ரேஸ் உலகத்துக்குள் நுழைந்தவர். இப்போது ‘கிங்டம் ரேஸிங் அகாடமி’ எனும் பெயரில் பல ரேஸர்களை உருவாக்கி வருகிறார். ஏகப்பட்ட பைக் ரேஸர்கள், இவரின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள். பெண்களும் குழந்தைகளும் ரேஸ் பைக் ஆக்ஸிலரேட்டர் முறுக்க வேண்டும் என்ற இவரின் ஆசையில் உருவானவர்கள் பலர். ‘ரேஸிங் துறையில் இவர்களைப்போல் எல்லோரும் உருவாகலாம். மோட்டோ ஜிபியில் எளிதில் கால் பதிக்கலாம்’ எனும் கான்செப்டில் இவர் எழுதும் இந்தத் தொடர், நிச்சயம் ரேஸிங் ஜீன் உள்ள இளசுகளை வெறியேற்றும்.