
வெல்கம் 2019 - அறிவியல்

பூமியின் துணைக்கோளான சந்திரனை ஆராய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-1 என்கிற செயற்கைக்கோளை 2008-ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது அதன் தொடர்ச்சியாக ‘சந்திரயான்-2’, 2019-ம் ஜனவரி மாதம் விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது.


இணையத்தின் அடுத்த பரிணாமமான 5G தொழில்நுட்பம், இந்த ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், இணைய சேவைகள் இன்னும் அதிவேகமாக நடக்கும். இந்தியாவில் 2020 இறுதியில் இவற்றை எதிர்பார்க்கலாம்.

MICROSOFT IGNITE
மைக்ரோசாஃப்ட்டின் வருடாந்திர நிகழ்வான ‘மைக்ரோசாஃப்ட் இஃக்னைட்’, 2019 நவம்பர் 4 முதல் 8-ம் தேதி வரை, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோவில் நடைபெறுகிறது.

Blockchain
மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பம் எனச் சொல்லப்படும் ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பம், இந்த ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் பயன்பாட்டுக்கு வரலாம். வங்கிப் பணப்பரிமாற்றம் உட்பட பல துறைகளில் இது முத்திரை பாதிக்கும். மைக்ரோசாஃப்ட், வால்மார்ட் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இந்த முறையை ஏற்றுக்கொண்டுள்ளன.

TESLA 3 CARS
எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, 2019-ல் மூன்று கார்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. டெஸ்லா Y, டெஸ்லா 3, டெஸ்லா செமி ஆகியவை சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பல்வேறு துறைகளில் விரிவடைந்துவருகிறது. இந்த வருடம் அடுத்தகட்டத்தை நோக்கி நகரும். இதனால், சில வேலையிழப்புகளும் புதிய வேலைவாய்ப்புகளும் ஒரே நேரத்தில் உருவாகும்.

மக்கள் சேவையில் ஏற்கெனவே பொருள் விநியோகம், பணப்பரிமாற்றம், இசை எனப் பல துறைகளில் நுழைந்துவிட்ட அமேசான், அடுத்ததாக வீட்டு வேலைகளுக்கும் நபர்களை அனுப்பவுள்ளது. இதில் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ரஞ்ஜித் வெ.ரா