மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்!

து வரமா, இல்லை சாபமா?” என்று பலரும் விவாதிப்பது பங்குச் சந்தை பற்றித்தான். இந்தக் கடலில் தோணியேறிப் போய் கைநிறைய அள்ளி வந்தவர்களும் உண்டு; இருப்பதைப் பறிகொடுத்துக் கரை ஒதுங்கியவர்களும் உண்டு. ஆனாலும், அன்றும் இன்றும் இதை நோக்கிச் செல்பவர்கள் அநேகர்.

பங்குகள் என்றால்..?

ஒரு கம்பெனியை உருவாக்கும் உரிமை யாளர், சில வருடங்கள் அதை லாபகரமாக நடத்தியபின், தன் பங்குகளை விற்க முன்வருவார். இதனை ஐ.பி.ஓ (Initial Public Offer) என்பார்கள். உதாரணமாக, ஒரு கம்பெனியை 1,000 பங்குகளாகப் பிரித்தால், அதில் வரும் லாபமும் நஷ்டமும் 1,000 பங்குகளாகப் பிரிக்கப்படும். அதில் நாம் வாங்குவது 100 பங்குகள் என்றால், லாப, நஷ்டத்தில் நம் பங்கு 10%. அந்த கம்பெனியின் செயல் பாடுகளையும் நடப்புகளையும் பொறுத்து, பங்குகளின் விலை ஏறும்; இறங்கும்.

இறக்கத்தில் வாங்கி, ஏற்றத்தில் விற்பதுதான் லாபத்துக்கான சூத்திரம். என்றாலும், எது இறக்கம், எது ஏற்றம் என்று யாருக்கும் தெரியாது. `தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரிக் கட்டும்' என்பதுபோல, உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் நடக்கும் சிறு நிகழ்வுகூட பங்குச் சந்தையைப் பாதிக்கும். ட்ரம்ப் தும்மினால்கூட இந்தியப் பங்குச் சந்தை நடுங்கும்.  

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்!

இத்தனை நிச்சயமற்ற தன்மை இருந்தாலும், இதை முதலீட்டாளர்கள் தைரியமாகத் தேடிச் செல்லக் காரணம், இதில் கிடைக்க வாய்ப்புள்ள அபரிமிதமான லாபம்தான்.  

காளையும் கரடியும்

பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்குவது எளிது. பங்குகளை வாங்க, விற்க நமக்கு ஒரு டீமேட் அக்கவுன்டும், டிரேடிங் அக்கவுன்டும் தேவை. டீமேட் கணக்கினைத் தொடங்க பல நிறுவனங்கள் உள்ளன.

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்!

அறிவுக்கு ஆயிரம் கண்கள்

பங்குச் சந்தை முதலீட்டில் இறங்க விரும்பு கிறவர்கள் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள்:

• ஆரம்பக் காலத்தில் உங்கள் மொத்த முதலீட்டில் 5-10% என்கிற அளவிலேயே  பங்குச் சந்தையில் முதலீடு செய்யவும். அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு அதிகப் பணத்தை இதில் போட வேண்டாம். அவசரமாகத் தேவைப்படக்கூடிய பணத்தை இதில் போடவே கூடாது.

• கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது. நஷ்டம் வந்தால், கடனுக்கான வட்டியைக் கட்டுவதுடன், நஷ்டத்தையும் தாங்கிக்கொள்ள வேண்டிய கூடுதல் கஷ்டம் ஏற்படும்.

• அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஏதேனும் ஒரு பங்கினை வாங்குவதைவிட, நீங்களே சுயமாக ஆராய்ச்சி செய்து முதலீடு செய்ய வேண்டும். 

• சந்தை இறங்கினால் உடனே பீதி அடைந்து பங்குகளை வந்த விலைக்கு விற்க வேண்டாம். நல்ல பங்குகளைத் தேர்வு செய்திருந்தால், நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
 
 

• குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகளை வாங்குவது தவறு; விலையை மட்டும் பார்க்காமல், கம்பெனியின் விற்பனை, லாபம் அதிகரிக்கிறதா என்றும் பார்க்கவும்.

• இ.பி.எஸ், பி.இ ரேஷியோ, புக் வேல்யூ மாதிரியான கலைச்சொற்களின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, பங்கினைத் தேர்ந்தெடுக்கலாம். 

`ஓ மை காட்! இவ்வளவும் தெரிஞ்சுக்கணுமா?' என்று அசந்துவிடாதீர்கள். லாபம் சம்பாதிக்க வேண்டுமெனில் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும். பெண்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை! 

ப(ய)ணம் தொடரும்

-சுந்தரி ஜகதீசன்

படம் : ப.சரவணகுமார்

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்!